For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சோஷியல் மீடியா மூலம் அடைந்த புகழால் ஏற்பட்ட சோகம் - இன்ஸ்டாகிராம் மாடல் அழகி கூறும் உண்மைகள்!

  By Staff
  |

  அமண்டா லீ என்பவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமான மாடல் அழகி. இவர் இன்ஸ்டாகிராமில் மில்லியன் பின்தொடர்பாளர்கள் வைத்திருக்கிறார். இவரது ஒவ்வொரு பதிவுகளும் இன்ஸ்டாகிராமில் குறைந்தபட்சம் மூன்றில் இருந்து ஆறு இலட்சம் வரையிலான லைக்ஸ் பெறுகின்றன. மேலும், ஆயிரக்கணக்கான கமெண்ட்டுகள் பெறுகிறார் அமண்டா லீ.

  Instagram Model Reveals About The Sad Reality of Social Media Fame!

  All Image Source: Amanda Lee / Instagram

  அட! இதுல என்னப்பா சோகம்... செம்மையான வாழ்க்கை, ஒரு பிரபலம் போல வாழலாம். அவனவன் ஒரு போஸ்ட் போட்டா பத்து லைக்ஸ் கூட வர மாட்டேங்குதுன்னு ஏங்கிட்டு இருக்கான் என்று நினைக்கும் நபரா நீங்க... திரும்ப, திரும்ப சொன்னாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான். அப்படியான நிலையில் தான் இப்போது தவித்து வருகிறார் அமண்டா லீ.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  மறு மதிப்பீடல்...

  மறு மதிப்பீடல்...

  எப்போது அதிகமான பின்தொடர்பாளர்கள் பெற துவங்கினேனோ... அப்போதிருந்து நான் செய்யும் காரியங்களை மறு மதிப்பீடு செய்ய துவங்கினேன். நிஜமாகவே இது நான் தானா? இது எனது மனநிலை ஆரோக்கியத்தை சீர்குலைய செய்கிறதா? நான் எடுக்கும் படங்கள் பர்பெக்டாக இருக்கிறதா? என்னை நானே தைரியப்படுத்திக் கொள்ள, தைரியமாக உணர்வது கடுமையான செயலாக மாறி போனது.

  அழகாக!

  அழகாக!

  பின்தொடர்பாளர்கள் அதிகமான பிறகு, நான் இன்னும் அழகாக, எடுப்பாக தெரிய வேண்டும் என்ற கண்ணோட்டம் அதிகரிக்க துவங்கியது. மக்கள் என்னை புகழ்ந்து பாராட்டி பேச வேண்டும். என் உடலில் தோய்வு அல்லது குறைபாடு தென்பட கூடாது. உடல் வடிவம் வளைவு, நெளிவுகளுடன் கச்சிதமாக இருக்க வேண்டும். ஏறத்தாழ ஒரு செக்ஸி பிராண்டாக என்னை நானே உருவாக்கிக் கொண்டேன்.

  மெய்?

  மெய்?

  சாதாரண மக்களை போலவே, நானும் என் புகைப்படங்களை எடிட் செய்ய நிறைய வேலைகள் செய்கிறேன். முக அழகை மேம்படுத்த, உடல் வடிவத்தை மேம்படுத்த என்று தனித்தனி செயலிகள் பயன்படுத்துகிறேன். பில்டர்கள், எடிட் வேலை எல்லாம் கடந்து வந்த பிறகு தான் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்கிறேன்.

  ஆனால், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், என்னை போன்றவர்கள் வெளியே வந்ததும் ஒரு படத்தை எடுத்து, அதை அப்படியே பதிவு செய்தவாக கருதுகிறார்கள். எல்லா போட்டோக்களும் பர்பெக்ட் போட்டோக்கள் கிடையாது என்று அமண்டா லீ கூறுகிறார்.

  எளிதானது அல்ல...

  எளிதானது அல்ல...

  அமண்டாவிற்கு இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதை அவரும் பெருமையாக எடுத்துக் கொள்கிறார். ஆனால், அமண்டா எங்களது பழைய அமண்டாவாக இல்லை. அவருக்குள் இப்போது நிறைய ஆர்வம் இருந்தது போய், கவலை அதிகரித்து காணப்படுகிறது.

  தினமும் தனது ரசிகர்களுக்காகவே ஒரு புகைப்படம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்த புகைப்படத்தில் அவள் அழகாக தெரிய வேண்டும். அதிலும், அவளது உடல் வடிவம் மோசமாக இருக்க கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறாள்.

  இன்ஸ்டாகிராமில் காணப்படும் அமண்டாவிற்கும், ரியல் அமண்டாவிற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது என்று அமண்டாவின் அம்மா கூறுகிறார். அமண்டாவின் நிறைய படங்களை எடுப்பதும் இவர் தானாம்.

  மகிழ்ச்சி!

  மகிழ்ச்சி!

  சோஷியல் மீடியாவில் பிரபலம் ஆவது கூட எளிது. ஆனால், மக்கள் மத்தியில் கொச்சை வார்த்தைகளில் வருப்படாமல் இருக்க வேண்டும். சிலர் எளிதாக பிரபலமாகி விடுவார்கள். ஆனால், அதே சமயம் ரசிகர்களிடம் இருந்து கமெண்டுகள் என்ற ரூபத்தில் மோசமான வார்த்தைகளில் அடிப்படுவார்கள்.

  அமண்டா தனது பதிவுகளுக்கு வரும் கமெண்ட்டுகளை விரும்பி படிப்பேன். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால், அது இன்ஸ்டாகிராம் அமண்டாவிற்கு மட்டுமே சொந்தம். மக்களுக்கு உண்மையான அமண்டா யார் என்றே தெரியாது என்றும் கூறியுள்ளார் இந்த இன்ஸ்டாகிராம் மாடல் அழகி.

  வாவ்!

  வாவ்!

  என்னை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர்கள் வாவ், அடடே! அமேஸிங்! என்று எனது அழகு மற்றும் உடல் வடிவம் கண்டு கமெண்ட் போடுவார்கள். ஆனால், நானோ, மற்ற இன்ஸ்டா கிராம் பெண்களின் பதிவுகளை கண்டு... ஓ மை காட்... ஷீ இஸ் பர்பெக்ட் என்று வியந்துக் கொண்டிருப்பேன்.

  அமண்டா லீ தனது அழகை மெருகேற்றிக் கொள்ள மார்பங்களை செயற்கையாக பெரிதுப்படுத்தி கொண்டிருக்கிறார். ஆனால், தனது பின்னழகு நூறு சதவிதம் இயற்கையானது என்று பேட்டியில் தெளிப்படுத்தி கூறியுள்ளார்.

  சோஷியல் மீடியா வாழ்க்கை மற்றும் புகழ் என்பது ஒரு மாயை. மற்றும் அதனால் அவசியமற்ற கவலையும், மன அழுத்தமே அதிகரிக்கிறது என்பதற்கு அமண்டா லீ ஒரு உதாரணம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Instagram Model Reveals About The Sad Reality of Social Media Fame!

  Amana Lee, Who is a Instagram Model Shares About The Sad Reality of Social Media Fame!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more