For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

22-27 வயது ஆணா நீங்கள்?... அப்போ இதெல்லாம் உங்களுக்கு நடக்கணுமே?... நடக்குதா?...

22-27 years boys how to handle their life/ 22 முதல் 27 வயதுவரை உள்ள ஆண்களுடைய வாழ்க்கை எப்படி நகர்கிறது என்பது பற்றிய தொகுப்பு

By manimegalai
|

teenage life

பள்ளிப்பருவத்தை முடிக்கும்வரை அவன் கெடக்குறான் சின்னப்பையன் என்பார்கள்.தெரிந்தே தவறு செய்தாலும் சின்னப்பையன் ஏதோ தெரியாம செஞ்சுட்டான் என்று சொல்வார்கள். அதே 22 வயதுக்கு மேல் டீ-ஏஜ் பருவத்தைக் கடந்து அடல்ட் என்னும் வயது வந்தோருக்கான பருவத்தை எட்டியதுமே அவர்களுடைய வாழ்க்கை முறைகளும் பிரச்னைகளும் ஆரம்பித்துவிடுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#2

#2

தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்வதற்கு முன்னதாகவே அவர்கள் மீது இந்த சமுதாயம் தொடுக்கும் கேள்விக்கணைகள் ஏராளம்.

குறிப்பாக, 22 முதல்27 வயதுவரை உள்ள காலகட்டம் தான் ஆண்களின் வாழ்நாளில் மிகக் கஷ்டமான காலகட்டம். எல்லோரும் சொல்லலாம் அந்த வயதில்தானே ஜாலியாக ஊர் சுற்றுகிறார்கள் என்று. ஆனால் உண்மையிலேயே அந்த வயது தான் அவர்களுக்கு வாழ்க்கை பற்றிய புரிதல்கள் உண்டாகும் காலகட்டம்.

#3

#3

இந்த வயதில் என்ன செய்தாலும் சமுதாயம் அதைப்பற்றி குறை சொல்லிக் கொண்டே இருக்கும். தெரியாது என்ற வார்த்தையை எதற்காவது சொல்லிவிட்டால் போதும்... மாடு மாதிரி வளர்ந்திருக்கியே தவிர, இதுகூடவா தெரியாது என்று சொல்வார்கள். தெரியாமல் தவறு செய்தால் கூட அதற்கு ஏகப்பட்ட ஏச்சுகளையும் பேச்சுகளையும் சந்திக்க வேண்டிய வயது இது.

#4

#4

சரி! கஷ்டம் இருக்க வேண்டியது தான்... அதுக்காக இதப் படிக்கும்போது கூட ஏன் கஷ்டப்பட்டு படிக்கணும்... ஜாலியாவே படிங்க... 22-27 வயசுல பசங்க படற அவஸ்தையை நாங்களும் ஜாலியாவே சொல்றோம்.

வாழ்க்கையில் ஆண்கள் தங்களுடைய சொந்த முயற்சியில் அடுத்த கட்டத்துக்குச்செல்ல வேண்டிய காலகட்டத்தில் என்ன மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்று பார்ப்போம்.

காதலிக்கு திருமணம்

காதலிக்கு திருமணம்

16 வயதிலிருந்து பல பெண்களின் பின்னால் சுற்றி, கடைசியா ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணினா ஏகப்பட்ட கமிட்மண்ட் அத முடிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கோன்னு ஒரு தடை வரும். சரின்னு அடிச்சி புடிச்சி ஒரு வேலையை தேடி செட்டில் ஆகுறதுக்குள்ள காதலியோட அப்பா அவளுக்கு வேற பையன பாத்து கல்யாணம் பண்ணி வெச்சிடுவாரு... சோ சேடுன்னு சொல்லிக்கிட்டே அடுத்த வேலையைப் பார்க்க போயிடணும்.

வேலை தேடுதல்

வேலை தேடுதல்

அப்போது தான் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள், பெரியவர்களின் பார்வையெல்லாம்" இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பது

போன்றே இருக்கும். வேலை தேடிக்கொண்டு தான் இருக்கிறோம் என்று நன்றாகத் தெரிந்தவர்கள்கூட நக்கலாக, தம்பி எங்க வேலை பார்க்குற?... எவ்வளவு சம்பளம் என்று கேட்பார்கள். பயங்கரமா கோபம் வரும். ஆனால் சிரிச்சிட்டே வேலை தேடுறேன்னு சொல்லணும். இல்லன்னா வெட்டிப்பையனுக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வருதான்னு கேட்பாங்க...

டீன்-ஏஜ் குரூப்ல இருந்து நாக்-அவுட்

டீன்-ஏஜ் குரூப்ல இருந்து நாக்-அவுட்

22-27 வயசுல அப்படியே ஜாலியா ஏரியா பசங்க கூட விளையாடவோ பேசிக்கிட்டு இருக்கவோ போனா என்ன அண்ணா இந்த பக்கம்னு சொல்லி,உங்களை அந்த குரூப் ல சேர்க்கவே மாட்டாங்க... விளையாடலாம்னா அண்ணா நீங்க பெரியவர் உங்க கூட எப்படிண்ணான்னு கேட்டு வெளியேத்திடுவாங்க...

நியூஸ் சேனல்

நியூஸ் சேனல்

டீவி பார்க்கலாம்னு போய் உட்கார்ந்த இதுவரைக்கும் பார்த்து ரசித்த எந்த ஹீரோயினையும் படத்தையும் போட்டு பார்க்க முடியாது. வீட்ல இருக்கிற எல்லோரும் நம்மள ஒரு மாதிரியா பார்ப்பாங்க... வேலை வெட்டி இல்ல... படம் ஒரு கேடுன்னு அப்பா ஜாடை பேசுவாரு. அப்புறம் என்னதான் பண்றது?... வேற வழி?... நியூஸ் சேனலையே கார்ட்டூன் பார்த்து ரசிக்கிற மாதிரி ரசிச்சு கேட்க வேண்டியதுதான்.

தொப்பை உண்டாகும்

தொப்பை உண்டாகும்

ஓடியாடி மண்ணில் புரண்ட விளையாடிய காலமெல்லாம் போய், சட்டை கசங்காமல் நடக்கிற காலகட்டம் இது. அதனால் போதிய உடற்பயிற்சி இல்லாமல், ஹார்மோன் மாற்றங்களால் நீங்கள் வழக்கமாக சாப்பிடுவதை சாப்பிட்டாலே வெயிட் போட்டு விடும். அந்த பயத்திலேயே பிடித்ததை சாப்பிட முடியாமல் போகும். இல்லையென்றால் தொப்பையை மறைக்க படாதபாடு பட வேண்டியிருக்கும்.

ஷேவிங்

ஷேவிங்

இதற்கு முன் இருந்தது போல பரட்டை தலை, லேசாக குறுகுறுவென வளர்ந்த தாடியுடன் இருக்க முடியாது. தினமும் ஷேவ் பண்ணியே ஆக வேண்டும். ஒரு நாள் ஷேவ் பண்ணாமல் விட்டாலும் வாலில்லாத குரங்கு போல ஆகிவிடுவோம். நம்மையே நம்மால் கண்ணாடியில் பார்க்க முடியாது. அப்புறம் எப்படி பொண்ணுங்க பார்க்கும்.

கிரிக்கெட் மேட்ச்

கிரிக்கெட் மேட்ச்

ஞாயிற்றுக்கிழமை என்றாலே இந்த டீன்-ஏஜ் பசங்க சாப்பாடு, தூக்கமெல்லாம் மறந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் மறந்துகூட நாமும் கிரிக்கெட் விளையாடலாமா என்று யோசிக்கக் கூடாது. ஏரியா பசங்க யாரும் உங்க வயசுக்காரர்களை விளையாட சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

உறவினர்கள்

உறவினர்கள்

உறவினர்களின் வீட்டுப்பக்கம் தலை காட்டவே முடியாது. அப்படியே எப்போதாவது அதிசயமாக போனாலும் சென்றாலோ , அல்லது ஏதாவது சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்களெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்? மாமாக்களோ உன் கெரியர் பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

தன்னம்பிக்கையும் வாய்ப்புகளும்

தன்னம்பிக்கையும் வாய்ப்புகளும்

இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும். ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும். முதல்முறை வேலைக்குப் போக நேர்முகத்தேர்வுக்குப் போனாலே முன்அனுபவம் பற்றி கேள்விக்கேட்டு சாகடிப்பார்கள்.

ஏட்டுச்சுரைக்காய்

ஏட்டுச்சுரைக்காய்

இதுவரை நீங்கள் படிக்க ஆரம்பித்ததில் இருந்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்த உலகம் பற்றி உங்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்கப்பட்டதோ அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும். நீங்கள் படித்த சமூக விழுமியங்கள் அனைத்தும் வெறும் ஏடுகளில் மட்டும் தான். ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை முற்றிலும் நம்புவீர்கள்

சிபாரிசு அரசியல்

சிபாரிசு அரசியல்

வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது. சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life
English summary

facts about 22 to 27 years old boys

teenagers when they turned to adulacence their to be faced lots of problems in this society.
Story first published: Monday, March 5, 2018, 16:24 [IST]
Desktop Bottom Promotion