அரியவகை நோயால் அனுதினமும் நரக வேதனை அனுபவித்து வரும் 23 வயது இளம்பெண்!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாகவே ஒருவர் தொடர் வெற்றிகளை குவித்து வந்தால் மச்சாக்காரன்டா அவன்... என்று பாராட்டுவார்கள். அல்லது அவரது வெற்றியின் மீது பொறாமை வந்தால்... எல்லாம் மச்சம் வேணும்... அவனுக்கு எங்கயோ இருக்கு என்று புலம்புவார்கள்.

மச்சம் என்பது கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்களுக்கு அடையாளமாகவும் அமைகிறது.

ஆனால், மச்சம் ஒரு பெண்ணை அனுதின வாழ்வை நரகமயம் ஆக்கியிருக்கிறது என்றால்? மச்சம் ஒரு பெண்ணின் உயிரைப் பறிக்க போகிறது என்றால்? நம்புவீர்களா? ஆம்! க்ஸியோ யானின் வாழ்க்கை அப்படியாக தான் மாறி கிடக்கிறது....

All Image Credits: Asiawire

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன பிரச்சனை?

என்ன பிரச்சனை?

க்ஸியோ யான் தனது சிறுவயதி நன்றாக தான் வாழ்ந்து வந்தார். அனைவரை போலவும் ஆடி, ஓடி மகிழ்ந்து நண்பர்களுடன் விளையாடி குதுகலித்து வந்தார்.

ஏனெனில், அன்று வரை தனது முகத்தில் இருந்து பெரிய கருமையான பகுதியை அவர் வெறும் மச்சம் என்ற நம்பி வந்தார். உண்மையில் அது வெறும் மச்சமாக தான் இருந்தது.

1%

1%

ஆனால், காலப்போக்கில் அது உலகில் 1% மக்களிடம் மட்டும் தென்படும் பிறவியிலேயே தோன்றும் அரியவகை melanocytic nevus தாக்கமாக மாறியது. இது போன்ற மச்சம் உலகில் ஒரு சதவித மக்களிடம் மட்டுமே காணப்படுகிறது. இது பிறக்கும் போதே தோன்றும்.

ஆனால், காலப்போக்கில் அந்நபர் வளர, வளர இது புற்றாக மாறும் அபாயம் இருக்கிறது. இதனால், அந்த நபர் மரணிக்கவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

அஜாக்கிரதை!

அஜாக்கிரதை!

சிறுவயதில் க்ஸியோ யானோ அவரது பெற்றோரோ இதுக்குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. ஆகையால், அவர்கள் அஜாக்கிரதையாக இருந்துவிட்டனர். வெறும் மச்சம் தானே என்று நினைக்கப்பட்டது இன்று உயிரைப் பறிக்கும் புற்றாக வளர்ந்து நிற்கிறது.

க்ஸியோ யான் !

க்ஸியோ யான் !

"சிறு வயதில் அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன். நான் வளர, வளர தான் என் முகத்தில் இருப்பது வெறும் மச்சம் அல்ல, அது வேறு எதுவோ என்று கருத முடிந்தது என்கிறார் 23 வயது நிரம்பிய" க்ஸியோ யான்.

இவருக்கு சீனாவின் ஷாங்காய் 9த் பீப்பிள் மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த மச்சமானதை அகற்றுவதும் கடினம், இது முகத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஸ்ட்ரெச்!

ஸ்ட்ரெச்!

இதே நிலையில் க்ஸியோ யானின் முகத்தில் இருக்கும் மச்சத்தை அகற்றுவது கடினம். ஆனால், இதை ஸ்ட்ரெச் செய்து பெரிதாக்கி அதை அகற்றலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆகையால், க்ஸியோ யானின் முகத்தின் நான் பகுதிகளில் பலூன்கள் இம்பிளாண்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால், இவரது முகம் பார்க்க கார்டூன் போல இருக்கிறது.

ஆனால், இதன் பின்னணியில் அனுதினமும் க்ஸியோ யான் நரக வேதனையை அனுபவித்து வருகிறார்.

இன்ஜெக்ஷன்!

இன்ஜெக்ஷன்!

இந்த முக சருமத்தில் இருக்கும் மச்சத்தை ஸ்ட்ரெச் செய்ய இவருக்கு சீரான இடைவேளையில் இன்ஜெக்ஷன் போடவேண்டும்.

இந்த சிகிச்சையை செய்து முடிக்க இவர்களுக்கு 11,177 யூரோக்கள் தேவைப்படுகிறது. ஆனால், க்ஸியோ யான் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். இவரது வீட்டின் பொருளாதார நிலையை வைத்துப் பார்க்கும் போது,க்ஸியோ யான் கட்டாயம் வேலைக்கு போக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறார்.

நரக வேதனை!

நரக வேதனை!

பலூன் இம்பிளாண்ட் செய்யப்பட்டிருப்பது எளிதான காரியம் அல்ல, தினமும் நரக வேதனை அளிக்கும். அதிலும் இன்ஜெக்ஷன் (Saline Injection) போடும்போது வலி உயிரை எடுக்கும். வலி தாளாமல் முகத்தை சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் என்றும் தோணும் என தனது வேதனையை தெரிவித்துள்ளார் க்ஸியோ யான்.

தன்னம்பிக்கை!

தன்னம்பிக்கை!

நான் எனக்கே ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன், நான் என்னிடமே மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்... எனக்காக நானே அனுதாப்பட்டுக் கொள்கிறேன்... ஆனால், நான் இன்னும் வளர வேண்டும், எனது குடும்பத்திற்காக, அவர்களது முன்னேற்றத்திற்காக நான் உழைக்க வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் க்ஸியோ யான்.

குடும்பம்!

குடும்பம்!

க்ஸியோ யானின் குடும்பத்தில் இவர், இவரது தாய் தந்தையர் மற்றும் ட்வின் பிரதர் இருக்கிறார்கள். க்ஸியோ யானின் சிகிச்சைக்காக இவர்கள் கிரவுட் ஃபண்டிங் மூலம் பணம் சேகரித்து வருகிறார்கள். இதுநாள் வரை இவர்களுக்கு 5588 யூரோக்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இது, சிகிச்சைக்கு தேவையான முழுப் பணத்தில் பாதியளவு தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Everyone's Life is not same, See How Painful is Xiao Yan's!

Everyone's Life is not same, See How Painful is Xiao Yan's!
Subscribe Newsletter