For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐந்தரை அங்குல திரையில் இருந்து உங்கள் அந்தரங்கம் எப்படி கசிகிறது?

உங்கள் அந்தரங்கத்தை நான்கு சுவர்களுக்கு வெளியே ஊர்காண போஸ்டர் ஓட்ட வேண்டாம்!

By Balaji
|

நாம் சுவாசித்து வரும் டிஜிட்டல் யுகமும், தீரா சமூகதள தாகமும் நம்முள் எண்ணற்ற தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. ஸ்டைலாக இருக்க வேண்டும், கெத்தாக வாழ வேண்டும், தடுக்கி விழுந்தாலும் அதை முகநூல் பதிவிட்டு அனுதாபம் எதிர்பார்க்க வேண்டும், ஒருவன் சந்தோசமாக இருந்தால், ஒருவன் நம்மை கடந்து உயர்ந்தால் சாதாரண லைக் கூட போடாமல் தவிர்க்க வேண்டும் என எண்ணற்ற மாற்றங்கள்.

எப்போதுமே காரிருளுக்குள் அடைந்து போனதாக தான் நாம் உவமை வாசித்திருப்போம். ஆனால், இன்று உலகமே ஐந்தரை அங்குல ஸ்மார்ட் திரையின் பெரும் வெளிச்சத்துக்குள் தொலைந்து போயுள்ளது.

என்றாவது உங்கள் அந்தரங்கம் வெளியுலகில் கசிந்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்ததுண்டா...? நமது அப்பாவும், தாத்தாவும் பர்சனல் டைரியில் எழுதி வைத்தவற்றை நாம் "Write something here..." என்ற ஸ்டேடஸ் பெட்டிக்குள் குப்பையாகக் கொட்டி வருகிறோம் என்பதை புரிந்துக் கொண்டதுண்டா...?

நாம் வாழ்ந்து வரும் ஸ்மார்ட் டிஜிட்டல் வாழ்க்கை நமக்கே தெரியாமல், நம்மை ஒரு பிரதி எடுத்து அதன் சர்வர்க்குள் சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறது....

Cover Image Credit: Twitter

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எந்த நாள், எந்த வருடம், எந்த நொடி...

எந்த நாள், எந்த வருடம், எந்த நொடி...

உங்களிடம் சென்ற வருடம்.... வேண்டாம்...போன மாதம் மூன்றாவது வாரம் வியாழக்கிழமை எந்த பாதையில் சென்று வந்தீர்கள் என்று கேட்டால்... பதில் கூற முடியுமா? மூன்று நாட்களுக்கு முன் காலை உணவு என்ன சாப்பிட்டோம் என்று கேட்டாலே நம்மிடம் இருந்து பதில் வராது. பிறகு, இந்த கேள்விக்கு எப்படி பதில் வரும்.

கூகுள் சொல்லும்..!

கூகுள் சொல்லும்..!

ஆனால், நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் லொகேஷனை ஆன் செய்து வைத்திருந்தால் போதும்... எந்த வருடம், எந்த நாள், எங்கே பயனித்தீர்கள் என்பதை கூகுள் மேப் அக்குவேறு ஆணிவேராக கட்டம் போட்டு காண்பிக்கும்.

இதை நீங்கள் செட்டிங்ஸ் போய் பார்த்து தெளிவாக அறிந்துக் கொள்ள முடியும். இல்லையேல் கூகுள் செய்து பாருங்க.. ஸ்டெப் பை ஸ்டெப் இதை எப்படி அறிந்துக் கொள்வது என்று அதுவே சொல்லும்.

அந்தரங்க புகைப்படம்!

அந்தரங்க புகைப்படம்!

அந்தரங்க புகைப்படம் என்பது நிர்வாண படங்கள் மட்டுமல்ல... நீங்களும் உங்கள் காதலி அல்லது மனைவியும் அன்யோன்யமாக இருக்கும் தருணங்கள், நெருக்கமாக இருக்கும் தருணங்கள் கூட அந்தரங்கம் தான். நீங்களும், உங்கள் மனைவியும் முத்தமிட்டுக் கொள்ளும் படத்தை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.

எங்கோ ஒரு இடத்தில்!

எங்கோ ஒரு இடத்தில்!

வாட்ஸ்-அப், மெசேஞ்சர் போன்ற செயலிகளில் நீங்கள் அனுப்பும், பெறும் புகைப்படங்கள் உங்கள் மொபைலில் மட்டும் தான் சேமிக்கப்படுகிறது என்று கருதுகிறீர்களா... உலகின் ஏதோ ஒரு பகுதியில், யாரோ ஒருவரால் கண்காணிக்கப்பட்டு வரும் சர்வரில் கடலில் ஒரு துளி போல.. உங்கள் படங்களும் சேமிக்கப்பட்டிருக்கும்.

ஆடையை கழற்ற கூறினால்...

ஆடையை கழற்ற கூறினால்...

படங்களுக்கே இந்த நிலை எனில்... நிர்வாண வீடியோக்கள் எடுப்பது எல்லாம் கலாச்சாரமும், காதல் என்ற பெயரில் உருமாறியிருக்கும் இச்சை உறவுகளும் எல்லை மீறி சென்றுவிட்டது. காதலன் வீடியோ காலில் ஆடையை கழற்று என்று கூறினாலும், பெண்கள் கழற்ற வேண்டியது ஆடையை அல்ல, அந்த காதலனை. காரணமே இல்லாமல் கழற்றிவிடப்படும் காதல்களுக்கு, இது எவ்வளவோ பரவாயில்லை. தைரியமாக கழற்றிவிடலாம்.

கலந்தாலோசிப்பதே இல்லையே, ஏன்?

கலந்தாலோசிப்பதே இல்லையே, ஏன்?

இன்று நாம் யாரும், யாரிடமும் எதற்கும் கலந்தாலோசிப்பதே இல்லை... சிலர் "ஓகே கூகுள்.." என்று மொபைல் திரையிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலர் டைப் சர்ச் செய்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று கூகுளுக்கு இருக்கும் மதிப்பு கூட மனிதர்களுக்கு இல்லை என்பது பெரிய சோகம். மேலும், இந்த அவலத்தின் விளைவுகள் தான் நாம் கொஞ்சம், கொஞ்சமாக சமூகத்தின் ஆணிவேரான உறவுகளை இழப்பதற்கும் காரணம்.

ஃப்ரீ ஷோ!

ஃப்ரீ ஷோ!

முந்தானை விலகியதை கவனிக்க மறந்தாலே, எத்தனை பேர் தன் உடலை கண்டனரோ என்று வருந்திய பெண்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர். லோ நெக் உடையுடன், கைகளை உயர தூக்கி தனது கோபுர அழகின் ஆழத்தை எச்.டி.ஆர் குவாலிட்டி படங்களில் ஃப்ரீ ஷோ காண்பிக்க துவங்கிவிட்டனர் நவீன யுவதிகள். கேட்டால் சோசியலிசம் என்பார்கள்.

குறிப்பு: இது ஜாக்கி ஜட்டி தெரியும்படி லோ-ஹிப் ஜீன் அணிந்து போட்டோ பதிவிடும் ஆண்களுக்கும் இது பொருந்தும்.

எது சோசியலிசம்?

எது சோசியலிசம்?

சோசியலிசம் என்பது எந்த தயக்குமின்றி நால்வருடன் பேசி, பழகி பலதரப்பட்ட விஷயங்களை அறிந்துக் கொள்வது. மூளையை வளர்த்துக் கொள்வது. தன்னுடலை ஊரார்க்கு காண்பிப்பது இல்லை. இதை எல்லாம் பெற்றோர் சொல்லி வளர்த்திருக்க வேண்டும். பத்து வருடத்திற்கு முன் ஃபேஷன் என்ற பெயரில் தொப்புள் தெரிய உடை வாங்கி கொடுத்து பழகினால், 20 வயதில் அந்த பெண்ணுக்கு கூச்சம் என்பது ஊறுகாய் அளவிற்கு தானே இருக்கும்?

மொழி பற்று மட்டும் போதுமா?

மொழி பற்று மட்டும் போதுமா?

தமிழை ஒருவன் திட்டினால், தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணு என்று பெருங்கூட்டம் கூடிவிடுகிறதே... பற்று என்பது தமிழ் மொழியின் மீது மட்டும் தானா? கலாச்சாரம் மீது இல்லையா? நமது கலாச்சாரம் ஜல்லிக்கட்டு மட்டும் இல்லையே... நான் இங்கே குறிப்பிடுவது ஆடையை மட்டுமல்ல. உணவில் துவங்கி, உறவுகள் வரை, நமது உணர்வுகள் வரை...!

பெற்றெடுத்த வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிய அம்மா, அப்பாவை உடன் அழைத்து செல்லாவிட்டாலும் முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமலாவது இருக்கலாம்.

நாம் அனைவரும் இந்த அனைத்து தவறுகளும் செய்வதில்லை. ஆனால், ஆளுக்கொன்று செய்து வந்தாலே போதுமே, நம் கலாச்சாரம் மெல்ல இறந்துவிடும்.

எது வேண்டும், எது வேண்டாம்...

எது வேண்டும், எது வேண்டாம்...

இதற்காக ஸ்மார்ட் போனே பயன்படுத்த கூடாதா... மாடர்ன் உடைகளே உடுத்த கூடாதா என்று கேள்விக் கணைகள் தொடுக்க வேண்டாம். எது தேவையோ, எது அவசியமோ அதை மட்டும் எடுத்துக் கொள்ளலாமே. ஊர் பெயர் தெரியாத இடத்தில் கூகுள் மேப் பயன்பாடு அவசியம். சொந்த ஊரில் பத்து தெரு தள்ளி இருக்கும் இடம் கூட அறிந்திருக்காமல் கூகுள் மேப் உதவி நாடுவது எல்லாம், நாம் கற்றுக் கொள்ளும் திறனை இழந்து வருகிறோம் என்பதன் அறிகுறி.

சிறுவயதில் நமது அப்பா, சின்ன சின்ன கணக்குகளுக்கு எல்லாம் கால்குலேட்டரை பயன்படுத்தினால்.... "இப்படியே இதையே யூஸ் பண்ணிட்டு இருந்தன்னா. ஒருநாள் ஒன்னு, ஒன்னு எவ்வளவோன்னு கேட்டா கூட கால்குலேட்டர தான் தேடுவ" என்று கடுமையாக திட்டுவார்...!

விக்கிபீடியா போல...

விக்கிபீடியா போல...

இப்படி தான் எளிமையான விஷயத்திற்கு எல்லாம் அதிநவீனத்தை தேடி, தேடி நமது சுயத்தை இழந்து நிற்கிறோம்.

இன்னும் கொஞ்ச காலம் கழித்து கூகுள் கூறுவது மட்டுமே உண்மை என்ற நிலை வந்துவிடலாம். உண்மை என்ன வரலாறு என்பதை யார் வேண்டுமானாலும் திரித்துவிட்டு போகலாம்.

இதுக்கிட்டத்தட்ட விக்கிபீடியாவில் இருப்பது முற்றிலும் உண்மை என்று நம்பிக் கொண்டிருப்பது போல.

எடுத்துக்காட்டு!

எடுத்துக்காட்டு!

எளிமையாக கூற வேண்டும் என்றால்... தொடர்ந்து விஜய், அஜித் படங்கள் வெளியான முதல் இரண்டு வாரங்கள் சென்று அந்த படத்தின் விக்கிபீடியா பக்கத்தை எட்டிப் பாருங்கள்... உண்மைக்கு மாறாக தாறுமாறாக பாக்ஸ் ஆபீஸ் வசூலை மாற்றி, மாற்றி சிலர் எடிட் செய்துக் கொண்டிருப்பார்கள்.

எனவே, ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் யுகத்தை பயன்படுத்துங்கள்... ஆனால், அதுவே உண்மையான உலகம் என்று முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do Not Let Others To Read Your Personal Diary!

Do Not Let Others To Read Your Personal Diary!
Desktop Bottom Promotion