மோனலிசா ஓவியம் முதலில் நிர்வாணமாக வரையப்பட்டதா?

Posted By: Staff
Subscribe to Boldsky

லியார்ண்டோ டாவின்சி வரைந்த ஓவியம் குறித்த சர்ச்சை தொடர்ந்து பல விதமாக உலாவிக் கொண்டிருக்கிறது. அந்த சர்ச்சை இப்போது வேறு பரிணாமத்தை பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.ஆம், டாவின்சி வரைந்த மோனலிசா ஓவியத்தை அவர் நிர்வாணமாக வரைந்தாரா? என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.

பல துறைகளில் சிறந்தவராக விளங்கிய டாவின்சி 1452 முதல் 1519 காலம் வரையில் வாழ்ந்திருக்கிறார். பெரும்பாலானோர் டாவின்சி வரைந்த மோனலிசா ஓவியத்திற்கு மாடலாக இருந்தவர் லிசா கெஹர்தினி அவரது கணவர் அப்போதே மிகப்பெரிய செல்வந்தராக இருந்திருக்கிறார் என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இந்நிலையில் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னர் பழங்கால ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கறித்துண்டினால் வரையப்பட்ட அந்த ஓவியம் மேலாடையின்றி ஒரு பெண் போஸ் கொடுப்பது போல அமைந்திருந்தது. அது பார்க்க அப்படியே மோனலிசா ஓவியம் போலவே இருந்திருக்கிறது.

Image Courtesy

#2

#2

உடல் ஒரே பக்கம் திரும்பியிருப்பது போலவும், தோல்பட்டையிலிருந்து நேராக பார்ப்பது போலவும் இந்த புதிய ஓவியம் இருந்திருக்கிறது. தற்போது அறிஞர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் இதுவும் மோனலிசா ஓவியம் தானா? மோனலிசா ஓவியம் வரைவதற்கு முன்னால் டாவின்சி இதனை ஸ்கெட்ச் செய்ய பயன்படுத்தினாரா அல்லது வேறு யாரேனும் வரைந்தார்களா என்று குழம்பியிருக்கின்றனர்.

Image Courtesy

#3

#3

இதற்கு மோன்னா வான்னா என்று பெயரிட்டிருக்கிறார்கள். 28க்கு 21 இன்ச் அளவில் இந்த ஓவியம் இருக்கிறது. பாரிஸில் இருக்கும் வடக்கு பகுதியில் உள்ள காண்டே என்ற மியூசியத்தில் இந்த ஓவியம் இருக்கிறது. அடுத்த ஆண்டு அதாவது 2019 ஆம் ஆண்டு டாவின்சியின் 500வது நினைவுநாள் கொண்டாடப்போகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy

#4

#4

இது டாவின்சியால் வரையப்பட்டதா? அல்லது அவரது மாணவர்கள் யாரேனும் வரைந்தார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது. ஒரிஜனல் மோனலிசா ஓவியத்திற்கும் இதற்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Image Courtesy

#5

#5

இந்த கரித்துண்டினால் வரையப்பட்ட ஓவியம் டாவின்சியிடம் தான் முதலில் இருந்திருக்கிறது. அவரிடமிருந்து டுக் டி அயுமலே என்பவர் 1862 ஆம் ஆண்டு இந்த காண்டே மியூசித்தில் வைப்பதற்கென்று வாங்கப்பட்டிருக்கிறது. அயுமலே என்பது பிரஞ்சு நாட்டின் கடைசி அரசரான லூயிஸ் பிலிப்பியின் மகனாவார்.

Image Courtesy

#6

#6

பல கட்டங்களாக தொடர்ந்து அந்த ஓவியம் குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது, அதில் மாணவர் வரைந்திருக்க வேண்டும் ஆனால் டாவின்சி அதனை ஃபினிஷ் செய்திருப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஓவியம் பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.

Image Courtesy

#7

#7

இந்த ஓவியம் வரையப்பட்ட காகிதமும் ஃப்ளோரன்ஸ் மற்றும் வெனிஸ் ஆகிய பகுதிகளுக்கு இடையில் கிடைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஓவியத்தின் தலைப்பகுதியில் இருக்கக்கூடிய சில மிக நுணுக்கமான கீறல்களைப் பார்த்தால் அது வலது கைப்பழக்கம் உடையவரால் வரையப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

டாவின்சி இடது கைப்பழக்கம் உடையவர் என்பதால் சரியான முடிவெடுக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

Image Courtesy

#8

#8

மோனலிசாவின் முதல் வெர்ஷன் ஓவியத்திற்கும் , மோன்னா வான்னாவின் ஓவியத்திற்கும் ஒரே ஒற்றுமை நிறைய இருக்கிறது. அவற்றில் கைப்பகுதி அப்படியே அச்சு எடுத்தாற் போல இருப்பதாக சொல்லப்படுகிறது. மோனலிசாவைப் போன்றே உருவ ஒற்றுமையுடைய ஓவியங்கள் ஒன்றல்ல 20 பெயிண்டிங் வரை இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. அவற்றில் மிகவும் பொருந்திப் போவது இந்த ஓவியம் தான்.

Image Courtesy

#9

#9

டாவின்சியின் மோனலிசா ஓவியத்திலும் இந்த ஓவியத்திலும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. மோனலிசா ஓவியத்தில் இருந்தது போலவே பாதி சிரிப்புடன் ஒரு பக்கம் மட்டும் திரும்பிய தாடை இருக்கிறது.

இரண்டு ஓவியங்களிலும் இருக்கும் போஸ் ஒரே மாதிரியாக இருக்கிறது. இந்த ஓவியத்தை ஸ்ஃபுமடோ என்ற டெக்னிக்கில் வரைந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Image Courtesy

#10

#10

முகத்தை வலது கை பழக்கமுடைய நபரும், உடலை டாவின்சியும் வரைந்திருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. இந்த பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வரையப்பட்டிருக்கலாம் என்று கணித்திருக்கிறார்கள்.

டாவின்சியின் மாணவரான ஆண்டிரியா சாலை என்பவர் இந்த ஓவியத்தை வரைந்திருக்கலாம் என்கிறார்கள்.

Image Courtesy

 #11

#11

ஆண்டிரியா தன்னுடைய பத்து வயதில் டாவின்சிய்டம் ஓவியம் கற்க வந்திருக்கிறார் அதன் பிறகு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக டாவின்சியுடனே இருந்திருக்கிறார்.டாவின்சி இறந்த பிறகே வேறு இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

Image Courtesy

#12

#12

மோனலிசா ஓவியத்தை முழுமை செய்ய முப்பதைந்த வருடங்கள் வரை ஆகியிருக்கிறது. அது முழுமையாக டாவின்சியால் வரையப்படவில்லை, டாவின்சி வரைய ஆரம்பித்தாலும் அதனை முடித்தது அவருடைய உதவியாளர்களாக இருக்கும். அவருடைய முடி, ஆடை, கைகள் வைத்திருக்கும் விதம், நிற்கும் விதம் என ஒவ்வொன்றும் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

பல சர்ச்சைகள் இருந்தாலும் மோனலிசாவுக்கும் இந்த மோன்னா வான்னாவுக்கும் இருக்கிற ஒற்றுமை என்ன தெரியுமா? தன்னகத்தே பல்வேறு ரகசியங்களை மறைத்து வைத்திருப்பது தான்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Did Davinci Painted Monalisa As Nude?

Did Davinci Painted Monalisa As Nude?
Story first published: Tuesday, February 27, 2018, 9:30 [IST]