ஃப்ளக்கா, மனிதனை சோம்பியாக மாற்றி வரும் அதிர்ச்சியளிக்கும் போதை பொருள்!

Subscribe to Boldsky

கொகைன் காட்டிலும் பல மடங்கு அதிக வீரியம் கொண்டது என்றும், இன்று வரை உலகின் பெரிய போதை பொருளாக கருதப்படும் தடைசெய்யப்பட்ட பாத் சால்ட் (Bath Salt - PABS) எனப்படும் போதை பொருளுக்கு இணையானதா? அல்ல இதை காட்டிலும் சக்தி வாய்ந்ததா என்ற அச்சத்தை எழுப்பியிருக்கிறது ஃப்ளக்கா எனும் புதிய போதை பொருள்.

Dangerous of Drug Flakka, Which Could Effect Several More Times than Cocaine and Bath Salt!

Image Source: Enewspace.com

இதை கிரேவல் (Gravel) என்றும் அழைக்கிறார்கள். பாத் சால்ட் எனப்படும் போதை பொருள் கடந்த 2012ம் ஆண்டிலேயே தடை செய்யப்பட்டு விட்டது. ஆனால், இந்த ஃப்ளக்கா இதை காட்டிலும் வீரியம் மிகுந்ததாக இருக்கக்கூடும் என்று போதை பொருள் தடுப்பு பிரிவினரும், தேசிய பாதுகாப்பு துறையினரும் சந்தேகிக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜிம் ஹால்!

ஜிம் ஹால்!

ஃபோர்ட் லாடெர்டேல்லிலுள்ள நோவா தெற்காசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜிம் ஹால் எனும் போதை பொருள் தொற்றுநோய் நிபுணர்கள் ஃப்ளக்காவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார். மேலும், இதன் வீரியம் ஒவ்வொரு நபரிடமும் வேறுபடுகிறது, அதிகரித்து காணப்படுகிறது. மிக சிறிய அளவு எடுத்துக் கொண்டாலே மிகப்பெரிய தாக்கத்தை உடலுக்குள் ஏற்படுத்துகிறது. இதனால் உயிரிழக்கும் அபாயம் அதிகம் என்று எச்சரிக்கிறார்.

சிறிதளவு!

சிறிதளவு!

ஃப்ளக்காவை சிறிதளவினை புகை, ஊசி, மூக்கால் உறிஞ்சுதல் அல்லது இன்ஜெக்ட் செய்தல் என எப்படியாக எடுத்துக் கொண்டாலும் அது தீவிரமான தாகத்தை ஏற்படுத்துகிறது என்றும் இது சித்தப்பிரமை பிடித்தது போலவும், உக்கிரமான வன்முறை குணத்தை தூண்டுகிறது என்றும் ஜிம் ஹால் கூறுகிறார்.

உடல் வெட்ப நிலை!

உடல் வெட்ப நிலை!

உடலின் வெப்பத்தை இது 105 டிகிரிக்கு உயர்த்துகிறது. இதன் காரணமாகவே ஃப்ளக்காவை உட்கொண்டவர்கள் சித்தப்பிரமை பிடித்தது போல ஆகிறார்கள் என்று அறியப்படுகிறது. மேலும், இது உடலில் பெரும் சக்தியை உணர செய்கிறது. கிட்டத்தட்ட வெறிப்பிடித்த ஹல்க் போல வைத்துக் கொள்ளுங்களேன். இதன் காரணாமாக தான் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல், எதிரே சீறிவரும் வாகனங்கள் மீது ஃப்ளக்காவை உட்கொண்டவர்கள் ஓடி சென்று மோதுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

தெற்கு ப்ளோரிடா!

தெற்கு ப்ளோரிடா!

தெற்கு ப்ளோரிடாவை சேர்ந்த ஆண் ஒருவர் சூறாவளி தாக்கத்தை எதிர்க்கும் வலு கொண்ட கதவுகளை முட்டி தகர்த்துள்ளார். மேலும், மெல்போர்ன், ப்ளோரிடாவை சேர்ந்த பெண் ஒருவர் சாலையில் தனக்கு சாத்தான் பிடித்துக் கொண்டதாக கத்திக் கொண்டே ஓடியுள்ளார்.

இந்த மாகாணத்தின் அதிகாரிகள் ஃப்ளக்காவை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மக்களை எச்சரித்துள்ளனர். மேலும், இந்த போதை பொருளை விற்க, பயன்படுத்த தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதி!

மருத்துவமனையில் அனுமதி!

ஜிம் ஹால் இதுவரை தெற்கு ப்ளோரிடாவில் மட்டுமே மூன்றில் இருந்து நான்கு பேர் வரை மருத்துவமனையில் ஃப்ளக்கா தாக்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிததுளாளர். மேலும், ஃப்ளக்காவின் பயன்பாடு அலபாமா, மிசிசிப்பி மற்றும் நியூ ஜெர்சி போன்ற பகுதிகளிலும் பரவி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஃப்ளக்கா என்றால் என்ன?

ஃப்ளக்கா என்றால் என்ன?

ஃப்ளக்கா (Flakka)என்றால் ஸ்பானிஷ் மொழியில் (la flaca) அழகிய பெண் என்று பொருள் . இது எம்.டி.பி.வி-க்கு (MDPV - Methylenedioxypyrovalerone) இணையான தாக்கம் கொண்டுள்ளது என்றும். இது தான் பாத் சால்ட் போதை பொருளில் இருக்கும் முக்கிய மூலப்பொருள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கெமிக்கலானது நியூரான் மூலக்கூறுகளில் தாக்கத்தை உண்டாக்கி டோபமைன் மற்றும் செரோடோனின் சுரப்பிகளில் தாக்கத்தை உண்டாக்குகின்றன. இவை தான் மனித உடலில் இன்பம் மற்றும் இரத்த நாளங்களை கட்டுப்படுத்தும் சுரப்பிகள் ஆகும்.

பன்மடங்கு!

பன்மடங்கு!

ஃப்ளக்காவின் தாக்கமானது கொகைனின் தாக்கத்தை காட்டிலும் பன்மடங்கு அதிகமாக நீடிக்கிறது. இது சில சமயம் உட்கொண்ட நபரின் உடலில் தாக்கம் குறையாமல் நீடிக்க செய்கிறது என்று ஜிம் ஹால் கூறுகிறார். ஃப்ளக்கா சில சமயம் ஒரு மணி நேரத்தில் இருந்து ஒரு நாள் வரையிலும் கூட நியூரோலஜிக்கல் தாக்கத்தை உண்டாக்குகிறது. சில சமயம் இவற்றில் தாக்கம் நிரந்தரமாக இருந்தும் விடுகிறது.

சிறுநீரகம்!

சிறுநீரகம்!

அடுத்ததாக ஃப்ளக்கா மூலமாக அதிகம் பாதிக்கப்படும் உடல் உறுப்பு சிறுநீரகம். இது தசை வலிமையை சீர்குலைத்து, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு அபாய எச்சரிக்கை விடுக்கிறது. கொஞ்சம் அதிகமாக ஃப்ளக்கா போதை பொருளை உட்கொண்டாலும் வாழ்நாள் முழுக்க டயாலசிஸ் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மிகவும் விலை குறைவு...

மிகவும் விலை குறைவு...

பெரும்பாலும் இந்த போதை பொருள் சீனாவில் இருந்து தான் விற்கப்படுகிறது. இது ப்ரோக்கர்கள், இணையம் மூலமாக விநியோகம் செய்யப்படுகிறது. இதன் விலை வெறும் மூன்று, ஐந்து டாலர்கள் என்பதால் மக்கள் எளிதாக இதை வாங்கி விடுகிறார்கள்.

டீலர்கள் இளம் மற்றும் ஏழை மக்களை டார்கெட் செய்து சாலைகளில் தங்கியிருக்கும் மக்கள் மூலமாக இதை விற்றுவிடுகிறார்கள்.

தெளிவாக தெரியவில்லை...

தெளிவாக தெரியவில்லை...

இன்றளவும் ஃப்ளக்கா பாத் சால்ட் அளவிற்கு அபாயகரமான போதை பொருளா என்று தெளிவாக அறியப்படவில்லை. ஆயினு, இதை உட்கொண்ட நபரிகளின் செயல்கள் மற்றும் குணாதிசய மாற்றங்கள் சோம்பி போல இருக்கிறது. மேலும், போதை பொருள் தடுப்பு அமைச்சகம் இதை தற்காலிகமாக தடை செய்துள்ளது.

மீண்டும்...

மீண்டும்...

இது மனிதர்கள் எடுத்துக் கொள்ள கூடாத பொருள் என்று கூறி தடை செய்துள்ளனர்.

ஃப்ளக்காவை தடை செய்தாலும் கூட இதை தயாரிக்கும் போதை பொருள் நிறுவனங்கள்., வேறு பெயரில், வேறு அளவில் இது போன்ற போதை பொருட்களை தயாரித்து விற்றுக் கொண்டே தான் இருப்பார்கள் என்று போதை பொருள் தடுப்பு அமைச்சகத்தை சேர்ந்த வாட்டர்சன் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Dangerous of Drug Flakka, Which Could Effect Several More Times than Cocaine and Bath Salt!

    Dangerous of Drug Flakka, Which Could Effect Several More Times than Cocaine and Bath Salt!
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more