For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  மரண தண்டனைக்கு ஒரு நாள் முன், கைதிகள் அளித்த திகைக்க வைக்கும் வாக்கு மூலங்கள்!

  By Staff
  |

  குற்றங்கள் எல்லா நேரத்திலும் திட்டமிட்டு செய்யப்படுவதில்லை. பெரும்பாலான பெரும் குற்றங்கள் கட்டுப்படுத்த முடியாத ஆத்திரம், கோபம், சூழ்நிலை, நன்றி, விசுவாசம் என பல காரணங்களால் தான் ஏற்படுகின்றன.

  முக்கியமாக கொலை குற்றங்கள் என்று காணும் போது, கூலிக்காக செய்த கொலைகளை தவிர்த்து... சொந்த காரணங்களால் செய்யப்பட்ட கொலைகள் யாவும் பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்டும், ஆத்திரத்தின் காரணத்தாலும் தான் செய்யப்பட்டவையாக இருக்கின்றன.

  பல்வேறு குற்றங்கள் புரிந்த காரணத்தால் மரண தண்டனை பெற்ற உலகின் பல நாடுகளை சேர்ந்த குற்றவாளிகள் தங்கள் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் பேசிய கடைசி வார்த்தைகள்....

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  கைதியின் வா.மூ #1

  கைதியின் வா.மூ #1

  விடிந்தால் மரண தண்டனை... கடைசி உணவை உண்டாயிற்று... படுக்கைக்கு செல்லும் முன்...

  பண்ண எல்லாம் குற்றத்துக்கும் நான் வருத்தப்படுறேன். ரொம்ப, ரொம்ப, ரொம்ப... வருத்தபடுறேன். என்ன மன்னிச்சிடுங்க. பலமுறை எனக்கு மன்னிப்பு கிடைக்குமான்னு நான் ஏங்கி இருக்கேன். ஆனா, மன்னிப்பு கேட்கிறத தவிர வேற எதுவும் எனக்கு சொல்ல தெரியல.

  குற்றம்: ஒரு நபரை சுட்டு கொன்றது. தண்டனை விதிக்கப்பட்டே அதே ஆண்டில் இவருக்கு மரண தண்டனை நாளும் குறிக்கப்பட்டது.

  கைதியின் வா.மூ #2

  கைதியின் வா.மூ #2

  கொடுக்கப்பட்ட கடைசி உணவை எதுவும் பேசாமல், மௌனமாக உண்டார். மறுநாள் காலை மரண தண்டனை நிறைவேற இருக்கிறது, ஏதாவது கடைசியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறாயா என்று சிறை காலவர்கள் கேட்கிறார்கள்.

  நோ சார்... இது மட்டுமே இந்த கைதியிடம் இருந்து அந்நாளில் வெளிப்பட்ட ஒரே பதில்.

  குற்றம்: மூன்று கொலை செய்தது.

  கைதியின் வா.மூ #3

  கைதியின் வா.மூ #3

  2001ம் ஆண்டு இந்த கைதிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது....

  என்னை ஒரு சிறந்த இடத்திற்கு அனுப்பவிருக்கிறீர்கள். எனக்கு இந்த முடிவு ஓகே தான். ஒருவரின் வாழ்வும், சாவும் அவர் எடுக்கும் முடிவில் தான் தீர்மானம் ஆகிறது. என் சாவை நானே தேர்வு செய்திருக்கிறேன்.

  குற்றம்: கொலை!

  கைதியின் வா.மூ #4

  கைதியின் வா.மூ #4

  1992ம் ஆண்டு 23 வயது நிரம்பிய ஒரு இளம் பெண்ணை கற்பழித்து கொலை செய்த காரணத்திற்காக மரண தண்டனை வழங்கப்பட்டது.

  மறுநாள் மரண தண்டனை குறிக்கப்பட்டிருந்தது... காலை உணவை சாப்பிட வில்லை. அவரது கண்கள் ஈரமாகவே இருந்தது. தனது கடைசி உணவாக அவர் கேட்டது ஒரு கோப்பை பழரசம்.

  மரண தண்டனை நிறைவேற்றும் முன் தன் சிறை நண்பர்களிடம், "இந்த தருணத்தில் நான் அனைவரையும் நெருக்கமாக உணர்கிறேன். நான் மீண்டும் உங்கள் அனைவரையும் காண்பேன். உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்." என்று கூறி சென்றார்.

  கைதியின் வா.மூ #5

  கைதியின் வா.மூ #5

  துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைதானவர். இவர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருசிலர் உயிரிழந்தனர். சிலர் படுகாயம் அடைந்தனர்.

  கடைசியாக கொஞ்சம் வெறும் வெள்ளை சாதம் மட்டும் சாப்பிட்டுவிட்டு மரண தண்டனைக்காக தயாரானார் இந்த கைதி. ஏதாவது பேச / கூற விருப்பம் இருக்கிறதா என்றதற்கு... இல்லை... நான் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று கூறி நகர்ந்துவிட்டார்.

  கைதியின் வா.மூ #6

  கைதியின் வா.மூ #6

  இவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய போது வயது 72 இருக்கும். அந்த சிறையில் மிகவும் வயதான நிலையில் மரண தண்டனை பெற்றவர் இவராக தான் இருக்கும் என்று பிற சிறை கைதிகள் பேசிக் கொண்டனர்.

  தனக்கு அளிக்கப்பட கடைசி விருப்ப உணவு சலுகையை கூட இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லாருக்கும் அளிக்கப்பட்ட அதே சாதமும், காய்கறிகளையும் இவரும் எடுத்துக் கொண்டார். இவர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. மௌனமே இவரது கடைசி வாக்குமூலமாக பதிவானது.

  இவர் செய்த குற்றம்... கொள்ளையடிக்க சென்ற இடத்தில், தடுக்க வந்த கடை மேலாளரை கொலை செய்தது.

  கைதியின் வா.மூ #7

  கைதியின் வா.மூ #7

  18 வயதில் துப்பாக்கியுடன் ஒரு கடைக்குள் நுழைந்து பணமும், மது பானமும் திருடியது மட்டுமின்றி, அங்கே இருந்த ஒருவரை தலை மற்றும் வயிற்று பகுதிகளில் சுட்டக் கொன்றான். போலீஸார் இந்த கைதியை ஒரு மாத காலம் சல்லடையிட்டு தேடித் பிடித்தனர். தனது குற்றத்தை அவனே ஒப்புக் கொண்டான்.

  கடைசியாக ஏதாவது பேச விருப்பம் இருக்கிறதா என்று கேட்டதற்கு... ஆம் என்று பதிலளித்த இந்த கைதி...

  என் குடும்பத்தாருக்கும், என் தாயிடமும் நான் அவர்களை மிகவும் நேசிப்பதாய் கூறுங்கள். கடவுள் அவர்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பார். அவர்களை வலிமையுடன் இருக்க சொல்லுங்கள் என்று கூறி இருக்கிறார்.

  கைதியின் வா.மூ #8

  கைதியின் வா.மூ #8

  1997ல் முன்னாள் மனைவி மற்றும் நான்கு பேரை சுட்டுக் கொன்றதற்காக மரண தண்டனை பெற்றவர்.

  பேசிக் கொண்டிருந்த போது உண்டான சண்டையால், ஆத்திரத்துடன் முன்னாள் மனைவியை காண சென்றிருக்கிறார். அவர் வீட்டில் வேறு ஒரு நபருடன் உறவில் இருந்ததை கண்டு, கொலை செய்தார்.

  மரண தண்டனை நிறைவேறும் முன்பு, "நான் மிகவும் வருந்துகிறேன். நான் பலர் வாழ்வில் அழிக்க முடியாத வலியை ஏற்படுத்திவிட்டேன். என்னால் யாரையும் திரும்ப கொண்டு வர முடியாது. ஆனால், நிச்சயம் அனைவரது வாழ்க்கை நிலையும் நல்லப்படியாக மாறும் / மாற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்." கூறினார்.

  கைதியின் வா.மூ #9

  கைதியின் வா.மூ #9

  இந்த கைதிக்கு போதையில் இருந்த போது, இரு நபர்களை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை வழங்கப்பட்டது. மரண தண்டனை ஏற்கும் முன்..,

  என்னால் உயிரிழந்த இருவரின் குடும்பத்தாரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று அழுதபடி கூறினார். எனக்காகவும், என் மீது அக்கறை கொண்டும் என்னுடன் இருந்த, என் நலம் விரும்பிகளாக இருந்த நல்ல உள்ளங்களுக்கு நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்., என்று கூறினார்.

  கைதியின் வா.மூ #10

  கைதியின் வா.மூ #10

  அப்பா மற்றும் இரு மகன்களை கொலை செய்த காரணத்திற்காக மரண தண்டனை பெற்றவர் இந்த கைதி.

  பள்ளியில் இருந்து தன் இரு குழந்தைகளை அந்த தந்தை வீட்டுக்கு அழைத்து வந்த போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த அந்த மூவரையும் இரக்கமின்றி கொலை செய்திருந்தார்.

  மரண தண்டனை நிறைவேற்றப்படும் முன், நான் அவரது குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் ஒரு பெரும் குற்றம் மற்றும் மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டேன். இந்த தண்டனையும் கூட எனக்கு குறைவு தான். ஆயினும், என்னை மன்னித்து விடுங்கள் என்று கடைசி வார்த்தைகளை முடித்துக் கொண்டார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Confessions of Prisoner a Day Before Their Execution!

  The last words from the prisoners on their last day of life. Here you can read the last confessions of them, a day before their execution.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more