TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
2018: இந்த தேதிகளில் திருமணம் செய்தால் இராஜயோகம் தேடி வருமாம்!
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று கூறுவார்கள்.. ஒருவரது வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த திருமணத்தை அதிஷ்டமான தேதியில் செய்தால் உங்களது முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது... ஒவ்வொரு ஆண்டிற்கும் சில அதிஷ்ட தினங்கள் உள்ளன. இந்த அதிஷ்ட தினங்கள் உங்களது வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை தரவல்லது.
உங்களது திருமணத்தை இந்த ஆண்டு வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்கள் உங்களது முழுமையாக உதவும். இந்த பகுதியில் இந்த 2018 ஆம் ஆண்டின் மிகவும் அதிஷ்டமான தேதிகள் உள்ளன.. ஒரு குறிப்பிட்ட ராசிக்காரர் தனது அதிஷ்ட தேதியில் திருமணம் செய்வதினால், அவரது வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் கிடைத்து, அவரது வருங்கால வாழ்க்கை மிக சிறப்பாக அமையும்... இந்த பகுதியில் ஒவ்வொரு இராசியினருக்குமான இந்த ஆண்டின் அதிஷ்டமான திருமண தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயன் பெருங்கள்...!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பொருத்தமான மற்றும் சாதகமான நாள் 27 ஆகும். இந்த நாள் அவர்களுக்கு மிகவும் அதிஷ்டகரமான நாளாக இருக்கிறது. இந்த தேதியில் திருமணம் செய்வது பற்றி உங்களுக்கு எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். இந்த தேதியில் நீங்கள் திருமணம் செய்தால் குடும்ப வாழ்க்கையில் அதிக வாக்குவாதங்கள், பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் இன்பம் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் திருமணம் செய்வதற்கு உகந்த நாள் 7 ஆகும். இவர்கள் தங்களது சுய தேவைகளை எப்படி பூர்த்தி செய்து கொள்வது மற்றும் தங்களது துணையுடனான காதலையும், துணைக்கு உற்ற துணையாக இருக்க வேண்டியது எப்படி என்பதை பற்றியும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அதிஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய அந்த அதிஷ்டமான தேதி 9 ஆகும். இந்த தேதியில் இவர்கள் திருமணம் செய்தால், திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும். இந்த தேதியில் நீங்கள் திருமணம் செய்தால் உங்களது முடிவு எடுக்கும் திறன் கச்சிதமாக இருக்கும். வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கான இராசியான தேதி 15 ஆகும். இந்த தேதியானது உங்களது வாழ்க்கையில் நீங்கள் அனைத்து செல்வங்களையும், அதிஷ்டங்களையும் பெற்று வாழ உதவும். நீங்கள் உங்களது உணர்வுகளை நன்மை தரும் நேர்மறையான முறையில் வெளிப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். கணவன் மனைவிக்கு இடையேயான புரிதலை வளர்த்துக் கொள்வது பற்றியும் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கான அதிஷ்டமான தேதி 3 ஆகும். இவர்கள் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க பழகிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மற்றபடி சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களின் மீது அதிக பாசமும், அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இது இவர்களது திருமண வாழ்க்கையில் இன்பத்தை சேர்க்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்களது அதிஷ்ட தேதியான 11 ஆம் தேதியில் திருமணம் செய்து கொண்டால் தங்களது வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் பெற்று சிறப்புடன் வாழ்வார்கள். இவர்கள் மற்றவர்களின் மனதை கவருவதிலும், அவர்களை சமாளித்து நடந்து கொள்வதிலும் திறமையானவர்கள். இவர்கள் தவறுகளை மன்னித்து ஏற்றுக் கொள்வதை கற்றுக் கொண்டால் மற்றவர்களின் மனதை எளிதில் கொள்ளை அடித்துவிடுவார்கள்...
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கான அதிஷ்டமான தேதி 2 ஆகும். அவர்கள் தங்களது வாழ்க்கையில் என்னென்ன எப்போது எப்படி நடக்க வேண்டும் என்ற கணிப்பு வைத்திருப்பார்கள். அதே சமயம், இவர்கள் தங்களது வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களை எப்படி சமாளித்து, மன அழுத்தம் இல்லாத ஒரு வாழ்க்கையை நடத்துவது என்பதை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
விருச்சிகம்
நீங்கள் திருமணம் செய்து கொள்ள 18 ஆம் தேதியை தேர்ந்தெடுக்கலாம். இந்த தேதியானது உங்களது மகிழ்ச்சியை அதிகரிக்கும். உங்களது வாழ்க்கையில் அதிஷ்டத்தை அள்ளித் தரும். அதே சமயத்தில் நீங்கள் மற்றவர்களுடைய தவறுகளை மன்னிக்க கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
தனுசு
திருமண வாழ்க்கையில் இணைய உங்களுக்கு அதிஷ்டமான தேதி 21 ஆகும். இந்த நாள் உங்களது வாழ்க்கையில் பெருமளவு வெற்றியை தரக்கூடிய ஒரு நாளாக இருக்கும். அதே சமயத்தில் நீங்கள் பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியமாகும். மேலும் மற்றவர்களின் கருத்துக்களுக்கும், அவர்களது சந்தோஷத்திற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டியது அவசியமாகும்.
மகரம்
உங்களுக்கான அதிஷ்ட தேதி 30 ஆகும். உங்களது திருமண வாழ்க்கையில் பலதரப்பட்ட நல்ல அனுபவங்களை சந்திப்பீர்கள். அதே சமயத்தில் வாழ்க்கையில் நீங்கள் வெற்றியடைய உங்களது தன்னம்பிக்கை என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். உங்களது அதிஷ்டமான தேதியில் நீங்கள் திருமணம் செய்தால் வெற்றிகள் உங்கள் வசம் குவியும் என்பதில் சந்தேகம் இல்லை.
கும்பம்
கும்ப ராசிக்காரகளுக்கான மிகச்சிறந்த திருமண தேதி 14 ஆகும். இந்த தேதி மிக சிறந்த அதிஷ்ட தேதியாகும். அதே சமயத்ஹ்டில் இவர்கள் தங்களது வாழ்க்கை துணை மீது அதிக அக்கறையும், அவர்களுக்கு துணையாக இருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மீனம்
20 ஆம் தேதியானது மீன இராசிக்காரர்களுக்கு அதிஷ்ட தேதியாக இருக்கும். இவர்கள் தங்களது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களில் எது உண்மையானது, எது நாடகம் என்று பிரித்து அறியும் திறன் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.