வாஸ்துப்படி உங்களது வீட்டில் எந்தெந்த பொருட்களை எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

"வாஸ்து சாஸ்திரம்" என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக் கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில் நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் வாஸ்து பற்றி சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன.

வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப்பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். அதன் படி இந்த பகுதியில் உங்களது வீட்டில் வாஸ்துப்படி எந்தெந்த பொருட்களை எந்தெந்த இடத்தில் வைக்கலாம் என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடிகாரம்

கடிகாரம்

கடிகாரத்தை உங்களது வீட்டில் தவறான திசையை நோக்கி வைப்பது என்பது வீட்டில் உள்ள மங்களகரத்தை குறைப்பதாக அமையும். எனவே கடிகாரத்தினை சரியான இடத்தில் வைக்க வேண்டியது அவசியமாகும்.

இங்கு வைக்காதீர்கள்

இங்கு வைக்காதீர்கள்

கடிகாரத்தை எப்பொழுதும் நீங்கள் வீட்டிற்குள் நுழைவதற்காக இருக்கும் கேட்டிற்கு எதிராகவோ அல்லது வீட்டு நுழைவாயில் கதவிற்கு எதிராகவோ வைப்பது என்பது கூடாது. இந்த இடத்தில் கடிகாரத்தை வைத்தால், உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்.

படுக்கைக்கு வலதுபுறம்

படுக்கைக்கு வலதுபுறம்

சிலர் உறங்கிக் கொண்டிருக்கும் போது, நேரம் பார்த்து எழுந்திரிக்க ஏதுவாக இருக்கும் என்று கருதி, தங்களது படுக்கைக்கு வலது புறத்தில் கடிகாரத்தை மாட்டி வைத்திருப்பார்கள். இவ்வாறு செய்வது என்பது முற்றிலும் தவறான ஒன்று இந்த இடத்தில் கடிகாரத்தை மாட்டி வைத்தீர்கள் என்றால் உங்களது நிம்மதி பரிபோய்விடும்.

கண்ணாடி

கண்ணாடி

உங்களது வீட்டில் எப்போதும் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு எதிராக இந்த கடிகாரத்தை வைக்க கூடாது. இவ்வாறு நீங்கள் செய்திருந்தால் உடனடியாக இதனை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும்.

கிழக்கு மற்றும் வடக்கு

கிழக்கு மற்றும் வடக்கு

வீட்டில் கடிகாரம் இருக்க வேண்டியது மிகமிக அவசியமாகும். இந்த கடிகாரத்தை உங்களது வீட்டில் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் வைப்பது மிகவும் நல்லது ஆகும்.

நஷ்டம் உண்டாகும்!

நஷ்டம் உண்டாகும்!

உங்களது வீட்டில் வைத்திருக்கும் கடிகாரத்தில் அழுக்குகள் மற்றும் விரிசல்கள் ஏற்பட்டிருந்தால் அது உங்களது நிதி நெருக்கடி, நஷ்டம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை கெடுக்கும்.

ஓடாத கடிகாரம் இருக்கா?

ஓடாத கடிகாரம் இருக்கா?

உங்களது வீட்டில் ஓடாத கடிகாரம் இருந்தால் அதனை உடனடியாக பழுது பார்க்க வேண்டியது அவசியமாகும். அல்லது அதனை அப்புறப்படுத்த வேண்டும். ஓடாத கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பது வாஸ்துப்படி நல்லது அல்ல..

படுக்கை அறையில் கூடாது!

படுக்கை அறையில் கூடாது!

உங்களது படுக்கை அறையில் ஊசல் கடிகாரங்களை வைத்திருப்பது முற்றிலும் கூடாது. இது உங்களது தூக்கத்தை கெடுப்பதுடன், நிம்மதியையும் கெடுக்கும்.

நெய் தீபம்

நெய் தீபம்

உங்களது வீட்டு பாசல் படிகளில் வாரத்தில் ஒருமுறையாவது நெய்யால் நிர்ப்பட்ட இரண்டு தீபங்களை ஏற்றி வையுங்கள். இது உங்களது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

ஈரத்துணிகள்

ஈரத்துணிகள்

உங்களது வீட்டில் ஈரத்துணிகளை மரக்கதவின் மீது போட கூடாது. இது நெகட்டிவ் ஆற்றலை வெளிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், உங்களது கதவுகளையும் அசிங்கப்படுத்தும். அதுவும், குறிப்பாக திருமணமான ஆண்கள் கதவின் மீது துணிகளை போட கூடாது என்று கூறுவார்கள்.

சாமி சிலைகள்

சாமி சிலைகள்

பெரும்பாலும் ஒரு வீட்டின் லட்சுமி கடாட்சம் எங்கும் நிறைந்திருக்கும் என்றால் அது நம் வீட்டின் பூஜை அறை தான். நமது வீட்டு பூஜை அறை சரியான திசையில் அமைக்கப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும். பின்னர் பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ள சாமி சிலைகளை கவனிக்க வேண்டும். இரண்டு தெய்வங்களின் சிலைகளை எதிரெதிரே பார்த்தவாறு வைத்தல் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்துவிடும் எங்கிறது வாஸ்து...

கண்ணாடி பொருட்கள்

கண்ணாடி பொருட்கள்

வீட்டில் உடைந்த கண்ணாடி அல்லது வேறு கண்ணாடி பொருட்கள் மற்றும் விரிசல் விழுந்த கண்ணாடி பொருட்களை வைத்திருக்க கூடாது. இவைகள் வீட்டில் நிதி பற்றாக்குறையை உண்டாக்கும்.

கிழிந்த படங்கள்

கிழிந்த படங்கள்

வீட்டில் கிழிந்த புகைப்படங்களை வைத்திருப்பது, உடைந்த சாமி சிலைகள் போன்றவற்றை வைத்திருந்தால் உங்களுக்கு பொருளாதார பிரச்சனைகள் உண்டாகும்.

வாஸ்துவின் வரலாறு

வாஸ்துவின் வரலாறு

முன்பொரு காலத்தில் அண்டகாசுரன் என்ற அரக்கன், தன்னை வெற்றிகாண எவரும் இல்லை என்ற மமதையில் சிவபெருமானை போருக்கு அழைத்து போரிட்டான். அப்போது சிவபெருமானுடன் போரிட்ட அசுரனின் நெற்றியில் வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது. மிகவும் கரிய நிறம் கொண்ட அந்த பூதத்திற்கு அகோரப் பசி ஏற்பட்டது. அதனால் கண்ணில் கண்ட அனைத்தையும் விழுங்கியது. கொடிய அசுரன் அண்டகாசுரனின் உடலையும் விழுங்கியது. தீராத பசியில் இருந்த பூதம் தன் பசியை தீர்த்து வைக்குமாறு சிவபெருமானிடம் வேண்டியது. சிவபெருமான் அந்த பூதத்திற்கு அனைத்தையும் உண்ணும் வரத்தை அளித்தார்.

பூதம்

பூதம்

இதனால் அந்த பூதத்திற்கு இந்த பூமியையே அளிக்கும் சக்தி உண்டானது. உடனே தேவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் முறையிட்டனர். பிறகு பிரம்மதேவன் அந்த பூதத்திடம் பூமியில் மக்கள் வீடு கட்டும் போது அவர்கள் படைக்கும் உணவை உண் என்றும், சாஸ்திரப்படி வீடு கட்டவில்லை என்றால் அந்த வீட்டில் வசிப்பவரை வாட்டு என்றும் வரம் அளித்தார். அந்த பூதமே வாஸ்து பகவான் என்றும் வாஸ்துப்படி வீடு கட்டுபவர்களுக்கு நன்மைகளையும், மற்றவர்களுக்கு தீமையையும் அளித்து வருகிறார். வாஸ்து என்றால் வாழும் இடம் என்று பொருள். மிகச்சரியான வாஸ்து உள்ள வீட்டில் பிரச்சனைகள் இருக்காது. நிம்மதி மகிழ்ச்சி பெருகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync
English summary

Best vastu Tips for Your Home

Best vastu Tips for Your Home
Story first published: Thursday, January 11, 2018, 12:30 [IST]