அருவி, ரிச்சியின் அக்கா... ஒரு தாமதமான பதிவு....

Posted By:
Subscribe to Boldsky

அருவி மற்றும் ரிச்சியில் கிட்டத்தட்ட கூறப்பட்டிருக்கும் விஷயம் ஒன்று தான். ஒரு தவறு நிகழும் போது, அதை தீர விசாரிக்க தவறினால், அதன் தாக்கம் எப்படியானதாக மாறும்? அருவி, ரிச்சி ஏறத்தாழ அக்கா, தம்பி தான்.

நாம் படித்து அறிந்த பெரும் அநீதிக் கதை கண்ணகியின் கணவன் கோவலனுக்கு அளிக்கப்பட தவறான தீர்ப்பு. சிலம்பை அவன் திருடினானா, இல்லையா, அவனிடம் இருந்த சிலம்பு யாருடையது என விசாரிக்க மறந்த அரசன். அவன் வாயில் இருந்து கொண்டு வாருங்கள் என்பதற்கு பதிலாக கொன்று வாருங்கள் என விழுந்து வார்த்தைகள். அதற்காக ஒரு ஊரே எரிந்து சாம்பலான நிகழ்வு என வரலாற்றில் பெரும் அநீதியாக நாம் கண்ட படைப்பு கண்ணகியின் கதை.

ஆனால், நாம் நமது வாழ்வில் தினம், தினம் பலருக்கு அநீதி வழங்கியுள்ளோம், நாமும் அநீதியை பெற்றுள்ளோம் என்பதை எத்தனை சதவிதம் நாம் அறிவோம்?

அருவி... ரிச்சி... இரண்டும் அநீதயின் காரணமாக அழிந்த உயிர்களின் கதைகளா? அல்ல, என்ன நடந்தது என்ற ஒற்றைக் கேள்வி கேட்காமல் போனதால் உதிர்ந்த உயிர்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அருவி!

அருவி!

அருவிக்கு எச்.ஐ.வி எப்படி பரவியது என்று அவளுக்கே தெரியாது. அதை கண்டறிய முறைகளும் இல்லாமல் போனது. தன் மகள் பெரும் அழகி என உச்சிமுகர்ந்து கொள்ளும் தந்தை. அவளுக்கான சுதந்திரத்தை முற்றிலும் அளித்த தந்தை... அவள் அந்த தவறை செய்திருக்க மாட்டாள் என எண்ணாமல் போனதன் விளைவே அருவியின் திசை மாறிப் போன வாழ்க்கை.

ரிச்சி!

ரிச்சி!

கொலை செய்தது ரிச்சியின் நண்பன். கொலை நடந்த இடத்தில் கொலைக்கான கருவி யார் கையில் இருந்தது என கண்டவர்கள், அதை செய்தது யாரென கேட்காமல், விசாரிக்காமல் போனதன் காரணம் தான் ரிச்சியை ரவுடியாக்கியது. சிறைக்கு சென்ற ரிச்சியின் தந்தை... என்ன ஆனது, நடந்தது என்ன.. என்று அரவனைப்ப்புடன் நடந்த விஷயங்களை கேட்டறிந்திருந்தால்... குறைந்தபட்சம் சிறை தண்டனை முடிந்த பிறகாவது ரிச்சி சமூகத்தில் வேறொரு மனிதனாக வாழ்ந்திருப்பான்.

அரவணைப்பு!

அரவணைப்பு!

அருவி மற்றும் ரிச்சி சமூகத்தில் தனித்து சென்றவர்கள் அல்ல, தனித்துவிடப்பட்டவர்கள். ஒரு சிறிய அரவணைப்பு, அவர்கள் எந்த சூழலில் பாதிப்படைந்தனர் என்ற சில கேள்விகள்., இறைவன் கொடுத்த அந்த அறிவை பயன்படுத்தி கொஞ்சம் ஆலோசித்திருந்தால் அருவியும், ரிச்சியும் சமூகத்தின் பெரும் நிலை அடைந்திருப்பார்கள்.

இது, சமூகத்தில் அருவியும், ரிச்சியும் மட்டும் கடந்து வந்த சூழல் அல்ல. நமது வாழ்க்கையில் பள்ளி வாழ்க்கை முதல் மரணம் அடைவது வரை நாம் பலரும் ஆங்காங்க தினமும் காணும் காட்சிகளே. இதில், அருவியும், ரிச்சியும் சிறு புள்ளிகளே.

ஸ்கூல் மாஸ்டர்...

ஸ்கூல் மாஸ்டர்...

ஒரு வகுப்பு முடிந்து அடுத்த வகுப்புக்கு எந்த ஒரு ஆசிரியரும் பிளாங்காக செல்வதில்லை. சிலர் அடுத்த வகுப்புக்கான பாடத்திற்கு தயார் நிலையில் செல்கிறார்கள். சிலர் சென்ற வகுப்பிலும், தங்கள் சொந்த வாழ்வில் நடந்த கடின சூழல்களை எடுத்து செல்கிறார்கள்.

வகுப்புக்குள் சென்றவுடன்... சார் அவன் புடிங்கிட்டான்... அடிச்சுட்டான்.. என சும்மா சிறிய புகார் அளித்தாலும் கூட... தங்கள் கோபத்தை குறைத்துக் கொள்ள, குறைக்கூறப்பட்ட மாணவனை அழைத்து இரண்டு வெளு, வெளுத்துவிட்டப்பிறகே சாந்தநிலைக்கு வருவார்கள் சில ஆசிரியர்கள். அவர்களுக்கு இதுவொரு சிறிய விஷயம்.

ஆனால், செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெற்ற அந்த மாணவனுக்கு அந்த ஆசிரியர் மீதும், பழிகூறிய அந்த மாணவன் மீதும் வன்மம் ஏற்படலாம். இந்த பள்ளியே வேண்டாம்., அனைவரும் மோசமானவர்கள் என்ற எண்ணம் வளரலாம்.

தண்டனையின் வலி!

தண்டனையின் வலி!

செய்யாத குற்றத்திற்காக பெரும் தண்டனையின் வலி எத்தகையது என்பதை அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். பேட்டரி வாங்கிக் கொடுத்தான் என்ற காரணத்திற்காக வாழ்நாளை சிறையில் கழித்த நபரையும் நாம் கடந்து வந்துள்ளோம்... ஈவிரக்கம் இன்றி பிளாட்பாரத்தில் படுத்திருந்த மக்களை போதையில் கார் ஏற்றி கொன்றவர் பெயிலில் வெளிவந்து சுதந்திரமாக சுற்றுவதையும் நாம் கண்டுளோம்.

செய்த குற்றத்துக்கு கிடைக்காத தண்டனையை காட்டிலும், செய்யாத குற்றத்திற்கு அனுபவிக்கும் தண்டனை மிகவும் கொடியது.

சுயநலம்!

சுயநலம்!

ஒருவன் நல்லவனா, கெட்டவனா? என்பதை நாம் எப்படி வகுக்கிறோம். அவன் நமக்கு நல்லது செய்தானா என்பதை வைத்தா? இல்லவே இல்லை. அவனது செயல் நமக்கு நன்மை விளைவித்ததா என்பதை வைத்தே ஒருவரை நாம் நல்லவன், கெட்டவன் என தீர்மானிக்கிறோம். இந்த இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

அரசு சில வருடங்களுக்கு முன் இலவச தொலைக்காட்சி பெட்டி அளித்தது. அதை பெரும்பாலும் வார்டு கவுன்சிலர்களே விநயோகம் செய்தனர். இதில், தொலைக்காட்சி இருந்தவர்களும் கூட முந்தியடுத்து அந்த இலவச பொருளை வாங்க வரிசையில் நின்றனர்.

யார் கெட்டவர்?

யார் கெட்டவர்?

இந்த வரிசையில் இருவர் இருக்கிறார்கள். ஒருவன் ஏற்கனவே டிவி வைத்திருக்கும் கவுன்சிலருக்கு பரிச்சயமான நபர். இன்னொருவர் டிவி இல்லாத கவுன்சிலருக்கு பரிச்சயம் இல்லாத நபர்.

அங்கே, அந்த கவுன்சிலர் தனக்கு பரிச்சயமானவராக இருப்பினும், டிவி இல்லாத நபர்களுக்கு முன்னாடி டிவி வழங்கிக் கொண்டிருந்தார் எனில்... அந்த பரிச்சயமான நபர் அந்த கவுன்சிலரை கெட்டவனாக தான் பார்ப்பார். அவரை பொறுத்தவரை இலவசம் தானே, எனக்கும் கொடுத்தால் என்ன என்ற கேள்வி எழுகிறது.

பொதுநலம்!

பொதுநலம்!

ஆனால் அரசு டிவி இல்லாத நபர்களுக்கு அளிக்க வேண்டும் என்றே நிபந்தனை விதித்துள்ளது. இங்கே கவுன்சிலர் பொதுவானவர்களுக்கு நல்லவர் என்ற பெயர் வாங்கினாலும். பரிச்சயமான நபரிடம் கெட்டவர் என்ற பெயர் வாங்கிவிடுகிறார்.

இப்படியாக தான்... நாம் நமக்கு நன்மை விளைவிக்கும் நபர்களையும், நாம் நன்மை என்று நினைக்கும் செயல்களை செய்யும் நபர்களை மட்டுமே நல்லவர்கள் என்ற பார்வையில் காண்கிறோம்.

அவரவர் நியாயம்....

அவரவர் நியாயம்....

நம்மில் யாரும் எதிரே இருக்கும் நபரின் நியாயம் என்ன என்பதை அறிவதில்லை, அறிந்துக் கொள்ள முயற்சிப்பதும் இல்லை. எனக்கு சரியாப்படல, அவன் எனக்கு நல்லது பண்ணல... அவன் செயல் என்ன பாதிக்குது என சுயநலமாகவே காண்கிறோம்.

சாயப்பட்டறை வைத்திருக்கும் நபருக்கு, அரசின் சட்டம் தன் தொழிலை பாதிக்கிறது என்றே காண்கிறார். அதனால், ஆயிரக்கணக்கான மக்களின் நீராதாரம் பாதிக்கப்படுகிறது என்பதை அவன் காண்பதில்லை. இப்படியாக தான் நாம் ஒரு தவறான கண்ணோட்டத்தில் நமது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். இதன் விளைவே... இன்று மனிதர்கள் மனிதத்தன்மையற்று வாழ்ந்து வருகிறார்கள்.

எல்லாளன்

எல்லாளன்

தன் மகன் சென்ற ரதத்தின் சக்கரத்தில் சிக்கி கன்று இறந்ததால், அந்த பசுவுக்கு நீதி வழங்க, தன் மகனை தேர் காலில் கிடத்தி கொன்று நீதி வழங்கினான் இதற்காக மனுநீதி சோழன் என்று புகழ்ந்து அழைக்கப்பட்டான் எல்லாளன் எனும் மன்னன்.

இத்தகைய அளவிற்கு மனிதம் இல்லை எனிலும், இதில் பாதியளவாவது இருக்கலாம். குறைந்தபட்சம் மனிதர்கள் மனிதர்களுக்காவது நீதி அளிக்க வேண்டும் அல்லவா.

ஆசிரியர், பெற்றோர்களே!

ஆசிரியர், பெற்றோர்களே!

மற்றவர்கள் நமக்கு நீதி வழங்குவது இரண்டாவது, நாம் பெற்று வளர்த்த பிள்ளைகள், நம்மிடம் கல்வி பயிலும் பிள்ளைகள் எத்தகையவர்கள் என்பதை நாம் அறிவோம். அவர்கள் செய்யும் செயல், தவறு போன்றவற்றில் அவர்களது பங்கு என்ன, உண்மையில் நடந்தது என என்பதை தீர விசாரித்து, ஆலோசித்து, ஆராய்ந்து முடிவெடுங்கள்.

நமது சூழல், கோபத்தின் வெளிபாடு காரணமாக நாம் கொடுக்கும் சிறு தண்டனை, அவர்களது வாழ்வில் பெரும் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Aruvi, The Lesson for Parents and Society!

Aruvi, The Lesson for Parents and Society!
Story first published: Friday, January 12, 2018, 12:47 [IST]