உலகின் இளம் சீரியல் கில்லர் என பெயர் பெற்ற இந்திய சிறுவன் - 8 வயதில் 3 கொலைகள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகின் பல்வேறு நாடுகளில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்ற வழக்குகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகில் அப்படி என்ன தான் நடக்கிறது? எதனால் சிறு வயதில் தன்னிலை மறந்து சிறார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது பெரியக் கேள்விக்குறியாக இருக்கிறது.

இது கலாச்சாரமாற்றத்தினால் விளைந்த வினையா? மனிதர்களுக்குள் மனித நேயம், ஈரம், குறைந்துவிட்டதா? அல்ல மன நோய் அதிகரித்துவிட்டதா? என தெரியவில்லை.

இதோ! இந்தியாவை சேர்ந்த எட்டு வயது சிறுவன் உலகளவில் உலகின் இளம் வயது சீரியல் கில்லர் என்ற பெயர் வாங்கும்படியான ஆளாக மாறியுள்ளான். எட்டு வயதில் இவன் தொடர்ந்து மூன்று கொலை சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளான் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

அமர்ஜீத் சதா எனும் இந்த எட்டு வயது சிறுவன் போலீஸாரால் ஒரு இளம் பெண் குழந்தையை கொலை செய்த போது கைது செய்யப்பட்டுள்ளான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைகள்!

குழந்தைகள்!

அமர்ஜீத் கொலை செய்த மூன்று பேரும் சிறு குழந்தைகள். மூவரும் பிறந்த சில மாதங்களே ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமர்ஜீத் இரண்டாவதாக கொலை செய்தது தன்னுடன் பிறந்த தங்கை. இரண்டாவது கொலையை இவனது பெற்றோரே மூடி மறைத்துவிட்டனர். ஆனால், தொடர்ந்து மூன்றாவது கொலை செய்த போதுதான் அமர்ஜீத் போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளான்.

பக்கத்து வீட்டு குழந்தை!

பக்கத்து வீட்டு குழந்தை!

அமர்ஜீத் கடைசியாக கொலை செய்த குழந்தை பக்கத்து வீட்டில் வசித்து வந்த நபரின் குழந்தை ஆகும். அந்த குழந்தை பிறந்து ஆறு மாதங்களே ஆனவர். கொஞ்சமும் ஈவிரக்கம் இன்றி, அந்த குழந்தையின் தலையை உடைத்து, நசுக்கி, அதன் மேல் இலை, தாவரங்கள் போன்ற குப்பைகளை மூடி மறைத்துள்ளான் அமர்ஜீத்.

விசாரணை!

விசாரணை!

ஆரம்பத்தில் அமர்ஜீத் மீது எந்த ஒரு சந்தேகமும் எழவில்லை. பக்கத்து வீட்டார் தான் அவன் மீது சந்தேகப்பட்டுள்ளனர். அமர்ஜீத் தங்கள் குழந்தையை கடத்தியிருப்பான் என்று கருதி தான் அந்த குழந்தையின் பெற்றோர் போலீஸிடம் புகார் அளித்தனர். பிறகு போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்று பேசிய போதுதான், தான் அந்த ஆறு மாத குழந்தையை கொலை செய்ததை கூறினான் அமர்ஜீத்.

காரணம்...

காரணம்...

ஏன் அந்த குழந்தையை கொன்றாய் என்ற காரணம் கேட்டபோது, பிஸ்கட் கட்டதற்கு கொடுக்காமல் சிரித்தான் என்று பதில் கூறியுள்ளான் அமர்ஜீத். அமர்ஜீத்தின் பெற்றோர் இவனுக்கு நல்லது என்ன? கெட்டது என்ன? என்பது உணர்ந்துக் கொள்ள முடிவதில்லை என போலீஸிடம் கூறியுள்ளனர்.

மனோதத்துவ நிபுணர்!

மனோதத்துவ நிபுணர்!

சிறுவன் அமர்ஜீத்தை பரிசோதித்த மனோதத்துவ நிபுணர்கள் கண்டக்ட் டிஸார்டர் (Conduct Disorder) எனப்படும் நடத்தை சீர்குலைவால் இவன் பாதிக்கப்பட்டுள்ளான் என்று கூறியுள்ளனர். ஒருவரை பாதிப்புக்குள்ளாக்கி அதன் மூலம் இன்பம் அடையும் நிலை கொண்டுள்ளான் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மற்றொருவர் அமர்ஜீத்தின் பெற்றோர் கூறியது போல, இவனால் நல்லது, தீயது என்ற பாகுபாடு அறிந்துக் கொள்ள முடிவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

பரிசோதனையின் முடிவில் தான் கண்டக்ட் டிஸார்டர் காரணமாக தான் இவன் பாதிக்கப்பட்டுள்ளான் என்றும், இவனது உடலில் கெமிக்கல் சமநிலையின்மை இல்லை என்றும். இதை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தண்டனை?

தண்டனை?

இந்திய சட்டத்தின் படி, மிக சிறிய வயதிலான இந்த சிறுவனுக்கு தகுந்த தண்டனை வழங்கலாகாது. எனவே, அதிகபட்சம் இவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வரலாம். மேலும் சிலர், இந்த கலாக்கட்டதில் இவன் மனநல காப்பகத்தில் வைக்கப்படலாம் என்றும் கூறுகிறார்கள்.

ஆயினும், இதுநாள் வரை என்ன தண்டனை வழங்கப்படலாம் என்பதற்கான பதில் ஏதும் கிடைக்கவில்லை.

All Image Source : Youtube

ஸ்பைடர்!

ஸ்பைடர்!

சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான ஸ்பைடர் திரைப்படத்திலும் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடித்த கதாபாத்திரம் இப்படியான ஒரு குணநலத்தோடு தான் அமைக்கப்பட்டிருந்தது. மக்களை துன்புறுத்தி, அவரது அழுகையை கண்டு மகிழும் நபராக அவர் நடித்திருந்தார்.

சிறுவன் அமர்ஜீத் சதாவின் குணநலங்களும் இந்த கதாபாத்திரத்தோடு ஒத்துப்போகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Story Behind The World's Youngest Serial Killer!

The Story Behind The World's Youngest Serial Killer
Story first published: Tuesday, January 16, 2018, 12:30 [IST]
Subscribe Newsletter