சமூகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திய பெண்கள்!வியப்பூட்டும் உண்மை!!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவுற்றாலும் இன்னும் பெண்கள் ஏராளமான அடக்குமுறைகளை சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களது ஒவ்வொரு படிநிலைகளிலும் எண்ணற்ற எதிர்ப்புகளை தாண்டியே லட்சியப் பாதையை நோக்கி பயணிக்க வேண்டியதாய் இருக்கிறது.

நிலவை அடைந்தாலும்,போர் விமானத்தில் பயணித்து சாதனை படைத்தாலும், கார்ப்ரேட் நிறுவனத்தில் மிக உயரிய பதவி கிடைத்தாலும் இன்னும் பெண்கள் கற்பழிப்பு,பாலியல் வன்கொடுமை,அமில வீச்சு போன்றவற்றை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்படி சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் எல்லா வழக்கங்களையும் பின்னுக்குத் தள்ளி தன்னுடைய தன்னம்பிக்கையால் ஒளிரும் சில பெண்களின் தொகுப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுனிதா கிருஷ்ணன் :

சுனிதா கிருஷ்ணன் :

சிறு வயதில் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.அதிலிருந்து மீண்டு வந்தவர், சமூக செயற்பாட்டாளாரக உருவெடுத்தார். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது இவரது முழு நேர வேலையானது. இதற்காக பல எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. 14 முறை தாக்கப்பட்டிருக்கிறார்.

Image Courtesy

அருணிமா சின்ஹா :

அருணிமா சின்ஹா :

தேசிய அளவு கைப்பந்து வீரரான இவர், 2011 ஆம் ஆண்டு ரயிலில் பயணிக்கும் போது, கொள்ளையர்களால் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.விளைவு ஒரு காலை இழக்க நேரிட்டது.ஆனாலும் ஒரே இடத்தில் சோர்ந்து முடங்கிடாமல் செயற்கை காலை பொருத்திக் கொண்டு இமயமலை ஏறி சாதனைப் படைத்திருக்கிறார்.

Image Courtesy

லக்ஷ்மி அகர்வால் :

லக்ஷ்மி அகர்வால் :

தன்னுடைய 15வது வயதில் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட முகம் சிதைக்கப்பட, அதிலிருந்து மீண்டவர் அமில வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Image Courtesy

அனம் ஹாசிம் :

அனம் ஹாசிம் :

இந்தியாவின் இளவயது ஸ்டண்ட் ஓட்டுனர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். ஜம்முவிலிருந்து கஹர்டுங்க் டாப் என்ற இடம் வரையில் சுமார் 2100 கிமீ தூரம் வரை பைக்கில் பயணித்திருக்கிறார். இது பைக் ஓட்டுபவர்களுக்கு உலகிலேயே உயரமான பாதை என்று வர்ணிக்கப்படுகிறது.

Image Courtesy

பாவனா காந்த் :

பாவனா காந்த் :

ஆண்களுக்கானது என்று ஒதுக்கப்பட்டிருந்த போர் விமானங்களை ஓட்டும் வீர மங்கை இவர். குழந்தை பருவத்தில் இருந்தே இவருக்கு விமானியாகவேண்டும் என்பது தான் கனவாக இருந்திருக்கிறது.

Image Courtesy

யாஸ்மின் மணக் :

யாஸ்மின் மணக் :

மிஸ் ஏசியா உடற்கட்டு போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். குர்ஹானில் ஜிம் ஆரம்பித்து ஒரு வருடத்தில் 300 ஆண் மற்றும் பெண் பாடி பில்டர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

பெண்கள் உடற்கட்டு,ஃபிட்னஸ் ஆகிய இரண்டு பிரிவுகளில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறார். இத்துறையில் ஆண்களால் உருவாக்கப்பட்டிருந்த பல்வேறு சாதனைகளை முறியடித்திருக்கிறார்.

Images Courtesy

நீனா குப்தா :

நீனா குப்தா :

பிரபல கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் மூலமாக கர்ப்பமானார் நீனா.ஆனால் இவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ரிச்சர்ட்ஸுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது.

தேசிய விருதுப் பெற்ற நடிகையான நீனா, தன்னுடைய மகளை தனியாளாக வளர்த்தெடுத்தார்.இப்போது மகள் மஸபா பிரபலமான பேஷன் டிசைனர்.

Image Courtesy

சுஸ்மிதா சென் :

சுஸ்மிதா சென் :

இந்தியாவிலிருந்து மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற முதல் அழகி இவரது வெற்றியை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் வேலையில் பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டார்.

25 வயதுப் பெண்ணை திருமணம் நோக்கி நிர்பந்திக்கு இந்த சமூகத்தினர் மத்தியில் ஒரு குழந்தையை தத்தெடுத்து புதிய புரட்சியை உண்டாக்கினார்.இரண்டாவதாகவும் இன்னொரு பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டார்.

Image Courtesy

 கல்கி கியோச்சிலின் :

கல்கி கியோச்சிலின் :

ஒன்பது வயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான இவர், தற்போது திரைப்பட நடிகையாகவும் எழுத்தாளராகவும் இருக்கிறார்.

Image Courtesy

கொன்கொனா சென் ஷர்மா :

கொன்கொனா சென் ஷர்மா :

தன்னுடைய நடிப்புத் திறமையால் பலரது மனங்களை கவர்ந்தவர். தேர்தெடுக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மிகவும் சவாலானதாக இருக்கும்.

ஆண்-பெண் நட்பே தவறானது என்று சொல்லும் இந்த சமூகத்தினருக்கு மத்தியில் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான கொன்கொனா மெட்டர்னிட்டி போட்டோஷூட் நடத்தினார்.

நான் தாயாகப் போகிறேன்.இதில் வெக்கப்பட எதுவும் இல்லை என்றும் பதிலடி கொடுத்தார்.

Image Courtesy

உப்மா விர்தி :

உப்மா விர்தி :

ஆஸ்திரேலியாவில் படித்த வக்கீல் தனக்கு டீ மிகவும் பிடிக்கும் என்பதால் வக்கீல் தொழிலை விட்டுவிட்டு டீக்கடை ஆரம்பித்திருக்கிறார்.

மனதிற்கு பிடித்ததை மட்டும் செய்யுங்கள் என்று வாழ்ந்து காட்டுகிறார்.

Image Courtesy

கலாவதி தேவி :

கலாவதி தேவி :

தன்னுடைய குக்கிராமத்திற்கு கரண்ட் கொண்டு வந்திருக்கிறார். திருமணம் முடிந்து இந்த கிராமத்திற்கு வந்த போது தான். இங்கே மின்சார வசதி கூட இல்லை என்பது தெரிந்திருக்கிறது.

அரசாங்க அலுவலகத்தை பல முறை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் கிடைக்காத்தால் கிராமத்தினர் உதவியுடன் தானே மின்சாரத்தை தயாரித்து வழங்க ஆரம்பித்தார்.

Image Courtesy

 அர்ஷியா பக்வான் :

அர்ஷியா பக்வான் :

இஸ்லாமியர்கள் மத்தியில் மூன்று முறை தலாக் என்று கூறினால் விவாகரத்தாகிவிடும். இப்படி தன்னை தன் கணவர் விவாகரத்து செய்வது செல்லாது என்று கோர்ட் படியேறிய முதல் இஸ்லாமியப் பெண் இவர்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Women who break some stereotypes in our society

    Women who break some stereotypes in our society
    Story first published: Tuesday, September 19, 2017, 10:16 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more