Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
சொர்க்கம் செல்ல, பெற்ற மகளை உயிருடன் சமைத்த கொடூர தாய்!
கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து நபர்கள் அழைத்ததன் காரணமாக போலீஸ் விரைந்து, அந்த பெண்ணை கைது செய்தனர்.
அந்த தாய்க்கு வயது 27 இருக்கும். பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் பகுதியை சேர்ந்தவர். போலீஸ் இவரை கைது செய்யும் போது, அவர் தனது சொந்த மகளை கிரில் முறையில் சமைத்துக் கொண்டிருந்தார்.
சென்ற வாரம் ஞாயிறு (செப் - 24, 2017) மாலை திடீரென அந்த பகுதியில் அலறல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட இடத்தை நெருங்கும் போது, அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டில் இருந்து மிகுதியான புகையுடன் அந்த அலறல் சத்தம் கேட்டு, பதட்டத்தில் அக்கம்பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் போலீஸிற்கு கால் செய்தனர்.

கிரில் முறையில்...
போலீஸ் அந்த வீட்டை விரைந்த போது, அந்த பெண் தனது சொந்த மகளை கிரில் முறையில், வீட்டின் கீழே இருந்த கேரேஜ் பகுதியில் சமைத்துக் கொண்டிருந்தார். சிறுமி முற்றிலும் கருகிய நிலையில் காணப்பட்டார்.
நிபுணர்கள் அந்த சிறுமி எதனால் கொல்லப்பட்டார். எரித்து கொல்லப்பட்டாரா? அல்லது இறந்து பிறகு எரிக்கபட்டாரா? என பரிசோதனை செய்து வருகிறார்கள்.

இருவரும்...
போலீஸ் வீட்டை விரைந்தவுடன் அந்த பெண்மணி, "நாங்கள் இருவருமே எரிந்து சாக வேண்டியவர்கள். இப்படி இறந்தால் தான் நாங்கள் ஒன்றாக சொர்க்கம் செல்ல முடியும்" என கூறியுள்ளார்.

விவாகரத்து!
ஆனால், அக்கம்பக்கத்து வீட்டார்கள், சமீப காலமாகவே அந்த பெண்மணி மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகிறார். விவாகரத்து பெற்றது முதலே இவர் இப்படி தான் இருக்கிறார் என போலீஸாரிடம் கூறியுள்ளனர்.

மருத்துவமனையில்...
அந்த பெண்மணியின் உடல் மற்றும் மனநிலை சரியாக இல்லாத காரணத்தால், உடனே விசாரணையை துவங்காமல், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தார்கள் போலீசார்.
அவர் தான் கொலைக்கு முற்றிலும் காரணம் என அறிந்தவுடன் கைது செய்துள்ளனர்.

மனநலம்!
மனோதத்துவ நிபுணர்கள், இந்த வகையில் அந்த பெண்மணி சிறுமியை கொன்றதற்கு மனநிலை தான் காரணம். அவர் மனதளவில் மிகையாக பாதிக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர். ஆயினும், அந்த சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
