For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்துக்களில் பெண்கள் ஏன் தாலி அணிகிறார்கள் என்பது தெரியுமா ?

தாலி என்ற புனித நூல் இந்துக்களில் திருமண பந்தத்தை பறைசாற்றும் விதமாக கட்டப்படுகிறது.

|

இந்த தாலி என்பது மற்ற ஆபரணங்களை போல் இல்லாமல் ஒரு புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த புனித நூல் இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு தோற்றம் களிலும் காணப்படுகிறது. தென்னிந்தியாவை பொருத்த வரை இது தாலி அல்லது திருமாங்கல்யம் என்றும் வட இந்தியாவில் மாங்கல்சூத்திரா என்றும் அழைக்கப்படுகிறது.

எது எப்படி இருப்பினும் இதன் முக்கியத்துவமும் இதன் பொருளும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. தாலி என்பது மரியாதை, அன்பு, காதல் மற்றும் கண்ணியம் போன்றவற்றை ஒரு ஆணும் பெண்ணும் இணையும் திருமண வாழ்க்கையில் பிரதிபலிக்கும் அடையாளமாக உள்ளது. இது இந்துக்களின் திருமண பந்தத்தை பறைசாற்றும் முக்கிய அடையாளமாகவும் கருதப்படுகிறது.

Why Hindu woman wear mangalsuthra after marriage

புராண கால வரலாற்று படி பார்த்தால் இந்த தாலி என்பது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காஞ்சியப்ப சிவசாரியாரின் கந்த புராணத்தில் இது இடம் பெற்று உள்ளது. அதற்கு அடுத்த படி 12 ஆம் நூற்றாண்டில் கம்பர் மற்றும் சேக்கிழார் போன்ற வர்கள் பெரிய புராணத்தில் இதைப் பற்றி கூறியுள்ளனர். இதன் படி தான் தாலி என்பது இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தாலியின் வடிவமைப்பு

பொதுவாக தாலி வெவ்வேறு வடிவமைப்பில் வடிவமைக்கப்படுகிறது. கடவுள் சிவபெருமானின் திருவுருவம் என்றால் 3 கிடைமட்ட கோடுகளை கொண்டும் கடவுள் விஷ்ணுவின் திருவுருவம் என்றால் 3 செங்குத்தான கோடுகளை கொண்டும் வடிவமைக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் சாதி மத வேறுபாடுகளின் படி அவர்கள் தங்கள் திருமணத்தின் போது வெவ்வேறு விதமான தாலிகளை வடிவமைத்து கொள்கின்றனர்.

அறிவியல் படி பார்த்தால் தாலி என்பது பெண்களின் இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. மேலு‌ம் பெண்களின் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. எனவே தான் தாலியை மறைத்து உடலோடு ஒட்டி உரசும் படி அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது.

வட இந்தியாவில் இந்த தாலி என்பது கருப்பு மற்றும் தங்க மணிகள் கோர்க்கப்பட்ட நெக்லஸ் போன்று காணப்படும். இதில் உள்ள தங்க மணிகள் கடவுள் பார்வதி தேவியையும் கருப்பு மணிகள் கடவுள் சிவபெருமானையும் பறைசாற்றுகிறது. தங்க மணிகள் செல்வத்தையும் சந்தோஷத்தையும் வளத்தையும் பறைசாற்றுவதால் பெண்கள் இதை அணிந்து தங்கள் வீட்டின் சந்தோஷத்தையும் வளத்தையும் காக்கின்றனர்.

கருப்பு மணிகள் என்பவை கணவன் மனைவிக்கு இடையே உள்ள உணர்வுப் பூர்வமான பந்தத்திற்கு வழி வகுக்கிறது. மேலும் இந்த மாங்கல்சூத்திரா கண்திருஷ்டி போன்ற கெட்ட சக்திகளை ஒழிக்கும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. கருப்பு நிற மணிகள் எல்லா எதிர்மறை எண்ணங்களையும் நீக்கி திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்ற உதவுகிறது. மேலும் கணவனின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் காக்கிறது.

இந்த தாலி தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அல்லது பாதிப்படைந்தாலோ இந்துப் பெண்கள் மிகவும் பயப்படுவர். கடவுளை வேண்டி தன் கணவரை காக்க வேண்டும் என்றும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும் வழிபாடு மேற்கொள்வர்.

ஆனால் தற்போதைய மாடர்ன் வாழ்க்கையில் தாலி என்ற புனித நூல் சடங்குகள் மறைந்து வருகிறது. பெண்கள் எப்போதாவது தாலிகளை அணிந்து கொள்ளுதல் அல்லது நிகழ்ச்சிகளுக்கு போகும் போது அணிதல் போன்ற முறைகளில் மட்டுமே அணிகின்றனர். இது ஒரு பேஷன் அடையாளமாக திருமண பந்தத்தில் மாறி வருகிறது.

இருப்பினும் இந்த தாலி என்ற புனித நூல் இந்துக்களின் திருமண பந்தத்தின் அடையாளமாக நிறைய ஆச்சரியமூட்டும் விளக்கங்களுடன் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

English summary

Why Hindu woman wear mangalsuthra after marriage

Why Hindu woman wear mangalsuthra after marriage
Story first published: Thursday, November 30, 2017, 17:54 [IST]
Desktop Bottom Promotion