ஆயிரக்கணக்கான கொலை, கொள்ளை செய்தவர்கள் தான் இந்த Thugs, #OrginalThugLife

Subscribe to Boldsky
Who Were Thugs? A Members of Thuggee Tribe and Most Professional Thieves!

Image Credit: Deceivers

Thug எனும் சொல் அமெரிக்க லெக்ஸிகன் வார்த்தை என கருதி வருகிறார்கள். ஆனால், இந்த சொல் அமெரிக்க தோன்றலின் முன் இருந்தே இருந்து வருகிறது. Thug எனும் சொல், இந்தியின் Thag எனும் வார்த்தையில் இருந்து மருவியது என்கிறார்கள். Thag என்ற வார்த்தையின் பொருள் திருடன். இதையே சமஸ்கிருத மொழியில் Sthagati என்கிறார்கள். Sthagati என்பதன் பொருள் மூடி மறைப்பது என்பதாகும்.

முதன் முதலில் Thug என்ற வார்த்தை அல்லது சொல்லாடல் ஜியாதீன் பர்னி எனும் இஸ்லாமிய அரசியல் எழுத்தாளர் 1356ல் கூறியிருக்கிறார். Thug என்பவர்கள் Thuggee எனும் பழங்குடியில் வாழ்ந்து வந்த மக்கள் ஆவர். இவர்களது பிராதான வேலையே திட்டமிட்டு கொள்ளையடிப்பது தான்.

14ம் நூற்றாண்டில் இந்திய துணை கண்டத்தில் பயணிப்பவர்களிடம் பயணத்தின் நடுவே திருட்டு, கொள்ளை, கொலை, செய்து வந்தவர்கள் தான் இந்த Thug என்பவர்கள் என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வணிகர்கள்!

வணிகர்கள்!

Thugs எனப்படும் இந்த திருடர்கள் பயணம் செய்வோருடன் வணிகர்கள் போல இணைந்துக் கொள்வார்களாம். முதலில் பயணிக்கும் நபர்களின் நம்பிக்கையை பெற்று. அவர்களுடன் நல்லவர்கள் போல பழகி. தங்களை அவர்கள் பாதுகாப்பாக நம்பும் படி நடந்துக் கொண்டு. பிறகே சரியான நேரம் பார்த்து தாக்கி கொள்ளையடித்து செல்வார்களாம்.

Image Source: wikipedia

கும்பல்கள்!

கும்பல்கள்!

இப்படியான நிகழ்வுகள் இவர்கள் திட்டமிட்டு ஏற்படுத்துவது ஆகும். முதலில் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் எந்த வழியாக செல்வார்கள் என்பதை அறிந்துக் கொண்டு. ஓரிடத்தில் வணிகர்கள் போல இணைந்து. வெவ்வேறு இடங்களில் கூட்டம், கூட்டமாக பதுங்கி, பின்தொடர்ந்து வருவார்களாம். இவர் திட்டமிட்டு இடத்தில் அனைவரும் கும்பலாக சுற்றி வளைத்து தாக்குவார்கலாம்.

Image Source: wikipedia

கொலை!

கொலை!

அதிகமாக இவர்கள் குறிவைப்பது வணிகர்களாக தான் இருந்தது. முக்கியமாக அவர்களை கொலை செய்யும் போது மூச்சுத் திணறல் ஏற்படுத்தி தான் கொலை செய்துள்ளனர். தூக்கு கயிறை பயன்படுத்தி கொலை செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர் Thugs.

Image Source: wikipedia

பிளான்!

பிளான்!

ஒருமுறை கொள்ளையடித்துவிட்டால், கொலை செய்த நபர்களின்உடல்களை மறைவான இடத்தில் மறைத்து, புதைத்து விட்டு தான் செல்வார்கள் Thugs. பிறகு, கொள்ளையடித்த நகை மற்றும் பணத்துடன் அங்கே இருந்து தப்பித்து தங்கள் இடத்திற்கு சென்றுவிடுவார்கள். இவர்கள் எங்கிருந்து வருவார்கள் என்பதே மாயமாக தான் இருந்துள்ளது.

Image Source: wikipedia

எத்தனை பேர்?

எத்தனை பேர்?

வரலாற்றில் நடந்த பல நிகழ்வுகள் மற்றும் கொலை சம்பவங்களை வைத்து கணக்கிட்டு பார்த்ததில், அந்த காலத்தில் ஐம்பதாயிரம் முதல் இருபது இலட்சம் என்ற எண்ணிக்கையில் இந்த Thugs வாழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தந்தை, மகன் என பரம்பரை, பரம்பரையாக இந்த தொழிலை செய்து வந்துள்ளனர் Thugs.

Image Source: wikipedia

வணிகர் குழந்தைகள்!

வணிகர் குழந்தைகள்!

சில சமயங்களில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் போது, வணிகர்களின் குழந்தைகள் கிடைத்தால் அவர்களை கொலை செய்யாமல் தங்களுடன் எடுத்து சென்றுவிடுவார்களாம். அவர்களை அடுத்த கொள்ளை சம்பவத்தின் வணிக குடும்பம் போல காண்பித்துக் கொள்ள நன்கு அலங்கரித்து உடன் அழைத்து செல்வார்களாம். இது கொள்ளையடிக்க போகும் வணிக குடும்பத்தை ஏமாற்ற தோதான வழியாக பின்பற்றி வந்துள்ளனர்.

Image Source: wikipedia

பிரிட்டிஷ் அரசாங்கம்!

பிரிட்டிஷ் அரசாங்கம்!

1830 வரையிலும் Thugsகளின் வாழ்க்கை நன்றாக தான் சென்றுக் கொண்டிருந்ததாம். 1830ல் லார்ட் வில்லியம் பெண்டின்க்ட் மற்றும் கேப்டன் வில்லியம் ச்லீமேன் எனும் இந்தியாவின் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் அதிகாரிகள் கீழ், இந்தியாவில் Thugs வழக்கத்தை ஒழிக்க வேண்டும் என திட்டம் தீட்டப்பட்டது.

Image Source: wikipedia

மரண தண்டனை!

மரண தண்டனை!

பல இடங்களில், பல முறைகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட Thugs கைது செய்யப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர், மரண தண்டனை மூலம் கொலை செய்யப்பட்டனர். 1870-களில் Thuggee என்ற பழங்குடி இனமே இல்லாதது போல, ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Image Source: wikipedia

19ம் நூற்றாண்டு

19ம் நூற்றாண்டு

19ம் நூற்றாண்டுகளில் தான் ஆங்கிலே எழுத்தாளர்கள் Thuggee இனத்தைப் பற்றி எழுத துவங்கியுள்ளனர். அப்போது தான் ஆங்கில பேச்சு மற்றும் எழுத்து வழக்கத்தில் Thug என்ற சொல் அறிமுகமானது. அந்த காலத்தில் இருந்து, இந்த காலம் வரை பல வகைகளில் இந்த சொல் மருவி வந்துள்ளது. இப்போது யார் ஒருவரை சட்டத்தை மீறி, உடைத்து ஒரு வேலையை செய்கிறாரோ அவர்களை Thug என குறிப்பிட்டு வருகிறார்கள்.

இப்போது!

இப்போது!

இப்போதெல்லாம் Thug Life எனக் குறிப்பிடுவது ஒரு கெத்தான விஷயமாக இருக்கிறது. ரூல்ஸ் பிரேக் செய்வது, இப்படி தான் செய்ய வேண்டும் என்ற செயலை, வேறு வகையில் செய்வதை எல்லாம் Thug Life என பெருமையாக கூறி வருகிறார்கள். ஆனால், உண்மையில் Thugs என்பவர்கள் Thuggee எனும் இனத்தை சேர்ந்த கொள்ளையர்கள் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Who Were Thugs? A Members of Thuggee Tribe and Most Professional Thieves!

    The Word ‘Thug’ Comes From A Roving Gang Of Criminals Much Worse Than Any Modern Thug!
    Story first published: Tuesday, December 12, 2017, 12:30 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more