For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலட்சுமி பண்டிகையை கொண்டாட சரியான முகூர்த்த நேரம் எது? தேவையான பொருட்கள் என்னென்ன?

வரலட்சுமி விரதம் இருப்பதற்கான சரியான முகூர்த்த நேரம் மற்றும் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் பற்றியும் இந்த ஆன்மீகக் கட்டுரையில் காணலாம்.

By Suganthi Ramachandran
|

வரலட்சுமி பூஜையானது தென்னிந்திய மக்களால் விரும்பி கொண்டாடப்படும் விரதமாகும். இந்த பூஜை செல்வ வளங்களின் அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமி தேவிக்காக கொண்டாடப்படுகிறது.

இந்த பூஜை பொதுவாக கர்நாடக, தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஏராளமான பெண்கள் ஸ்ரீ மகாலட்சுமி தேவியை வேண்டி வழிபடுகின்றனர். மகாலட்சுமியின் அருளால் சகல செல்வ வளங்களுடன் ஆரோக்கியமான உடல் நலத்துடன் நீடோடி வாழலாம் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே காணப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் பெண்கள் தங்கள் கணவர் நீண்ட காலம் நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக சுமங்கலி பூஜையாகவும் இதை வழிபடுகின்றனர்.

கீழே இந்த வருடம் வரும் வரலட்சுமி பூஜையை சிறப்பாக கொண்டாடுவதற்கான நேரமும் காலமும் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்கள் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது. வாங்க பார்க்கலாம்.

Varamahalakshmi Pooja Muhurtam And The Pooja Samagri

வரலட்சுமி பூஜை முகூர்த்தம்

இந்த வரலட்சுமி பூஜையானது ஒவ்வொரு வருடமும் ஷ்ரவண மாதத்தில் சுக்லாம் பஷ்ட்சா போது முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதன் படி இந்த ஆண்டை எடுத்துக் கொண்டால் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரலட்சுமி விரதம் வருகிறது.

மேலும் இதை கண்டுபிடிக்க இந்த பூஜை ஒவ்வொரு வருடமும் ரக்ஷா பந்தனுக்கு முன்னாடி வரும் வெள்ளிக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.

காலையில் வரலட்சுமி பூஜை முகூர்த்தம் :6.45 AM - 8.48AM

மாலையில் வரலட்சுமி பூஜை முகூர்த்தம் :7.15PM-8.50PM

ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரும் வரலட்சுமி பூஜைக்கான பஞ்சாங்கம் :

சூரியோதயம் - 06.02

சூரியஸ்தமனம் :19.03

சந்திர உதயம் :16.30

சந்திர அஸ்தமனம் :27.43


வரலட்சுமி பூஜை செய்வதற்கான பொருட்கள்

எல்லா பூஜைக்கும் நாம் நல்ல படியாக பூஜை செய்ய சில பொருட்கள் தேவைப்படுகின்றன. அதே போல் வரலட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னரே அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்வது நல்லது. கடைசி நேரத்தில் ஒவ்வொரு பொருளாக தேடினால் பூஜையை சரியான நேரத்தில் செய்ய முடியாமல் போகிவிடும்.

மேலும் இந்த முன்னேற்பாடுகள் பூஜையின் போது பதட்டத்தை உண்டாக்காமல் உங்கள் மனதில் அமைதியை ஏற்படுத்தும்.


தேவையான பொருட்கள்

வண்ணக் கோலம் வரைய அரிசி மாவு மற்றும் கலர் கோலப் பொடி

தாம்பலம் (காப்பர் தட்டு)

மரப்பலகை

அரிசி (மரப் பலகையில் பரப்புவதற்கு)

வாழை இலை

கலசம் (வெள்ளி அல்லது பித்தளை குடம்)

பன்னீர் (தெளிப்பதற்கு)

பச்சை கற்பூரம், குங்குமப்பூ, கிராம்பு, ஏலக்காய் (கலசத்தில் வைப்பதற்கு)

மாமர இலைகள் (கலசத்தின் வாய் பகுதியை அலங்கரிக்க)

தேங்காய்கள் (ஒரு தேங்காய் கலசத்தில் வைக்க, மற்றது பூஜைக்கும், தாம்பூலத்திற்கும்)

மஞ்சள் பொடி

சந்தனக் கரைசல்

குங்குமம்

அட்சதை (அரிசி மஞ்சள் சேர்ந்து)

தாமரைப் பூ

அம்மாள் மகாலட்சுமி படம்

மூக்குத்தி, நகைகள் (அம்மாளுக்கு அலங்கரிக்க)

பட்டாடை (அம்மாளுக்கு)

பூக்கள் (அலங்காரத்திற்கு)

மலர்கள் (பூஜைக்கு)

வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு

மஞ்சள் கயிறு (சரடு)- கையில் கட்டுவதற்கு 9முடிச்சுகளை கொண்டு நடுவில் பூ வைத்து சுற்றி வைத்துக் கொள்ளவும் (அஷ்ட லட்சுமிகள் எட்டு லட்சுமிகளுடன் வரலட்சுமி யையும் சேர்த்து ஒன்பது என்பதால் ஒன்பது முடிச்சுகள்)

பொங்கு நூல் - (மஞ்சள் கலந்த நூல் கழுத்தில் கட்டுவதற்கு)

உலர்ந்த பழங்கள்

பால்

பழங்கள்

பஞ்சாமிர்தம் (பழங்கள், தேன், நட்ஸ், கருப்பட்டி சேர்ந்த கலவை)

நிவேதனப் பொருட்கள் : பாயாசம், பொங்கல், அப்பம், பூரண கொழுக்கட்டை , இட்லி, இனிப்பு சோம்மாஸ் போன்ற இனிப்பு வகைகள் .


தாம்பூலம் பாக்கெட் நீங்கள் எத்தனை பேரை பூஜைக்கு அழைத்திருக்கிறீர்கள் என்பதை பொருத்து போட்டுக் கொள்ளவும். அதில் சந்தனம், குங்குமம், வளையல், மஞ்சள் சரடு, வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம் மற்றும் சட்டை துணி அதனுடன் காசு போன்றவற்றை சேர்த்து பேக் பண்ணிக் கொள்ளவும்.

பிரசாதத்தை ஒரு தட்டில் வைத்து எல்லாருக்கும் கொடுப்பதற்கு தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

மகாலட்சுமி ஸ்தோத்திரம் மற்றும் வரலட்சுமி விரத கதைகள் கொண்ட புத்தகத்தையும் எல்லாருக்கும் கொடுக்கவும்.

இந்த விரத முறைகளை மேற்கொண்டு மகாலட்சுமியின் அருளை பெற்று சிறப்புடன் வாழலாம்.

English summary

Varamahalakshmi Pooja Muhurtam And The Pooja Samagri

Varamahalakshmi Pooja Muhurtam And The Pooja Samagri
Story first published: Thursday, July 27, 2017, 18:17 [IST]
Desktop Bottom Promotion