ஜெயலலிதாவின் நிறைவேறாத மூன்று ஆசைகள் - #JayalalithaDesires

Subscribe to Boldsky
ஜெயலலிதாவின் நிறைவேறாத மூன்று ஆசைகள்- வீடியோ

கோமளவல்லி... இது தான் "அம்மா" என்று தமிழகத்தில் அனைவராலும் அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் இயற்பெயர்.

எப்படி ஒரு தனி மனுஷி... இந்த கட்சியை தனியாளாக வழிநடத்தி சென்றார்? ஆணாதிக்கம் கொண்டுள்ள தமிழக அரசியலில் தனி ஒருத்தியாக எப்படி இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார்? என முன்பை விட இப்போது தான் மக்கள் மத்தியில் மிகுந்த வியப்பு ஏற்படுகிறது. விளங்காத அறிக்கைகைகள், பிறழும் செயற்பாடுகள் என அவ்வளவு அக்கப்போர்கள்.

ஜெயலலிதா மிகுந்த செல்வாக்கும், செல்வமும், அதிகாரமும் கொண்டிருந்தார் என்பது மட்டுமே நமக்கு தெரிந்த விஷயங்கள். உலகறிந்த ஒரு அரசியல்வாதி, இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த நபர்.

அவர் நினைத்தால் எதை வேண்டாலும் அடையலாம் என்ற எண்ணம் தான் நம்மிடையே இருக்கிறது. ஆனால், தனது வாழ்வில் அவர் விரும்பிய மூன்றே மூன்று ஆசைகள் கூட அவரால் அடைய முடியவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படிப்பு!

படிப்பு!

பணக்காரன், ஏழை, நடுத்தர வாழ்க்கை நடத்துபவன் என உலகில் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அனைவரிடமும் இருக்கும் முதல் ஆசை.... தாங்கள் விரும்பியதை படித்து, அந்த வேலை / தொழிலில் சிறந்த விளங்க வேண்டும் என்பது தான். இந்த ஆசை ஜெயலலிதா அவர்களுக்கும் இருந்தது. ஆனால், கிடைத்ததா என்பது தான் பெரிய கேள்விக்குறி.

கோல்ட் ஸ்டேட் அவார்ட்!

கோல்ட் ஸ்டேட் அவார்ட்!

பத்தாம் வகுப்பு வரை தான் படித்திருந்தார் செயலலிதா. பத்தாம் வகுப்பு மாநில அளவிலான மெட்ரிகுலேஷன் தெரிவில் முதல் இடம் பிடித்தமைக்காக அரசிடம் இருந்து கோல்ட் ஸ்டேட் விருது பெற்றிருக்கிறார் ஜெயலலிதா. இவருக்கு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இருந்து படிக்க சலுகை கிடைத்தது என்றும், அதை இவர் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

வழக்கறிஞர்!

வழக்கறிஞர்!

ஜெயலலிதாவின் அப்பா ஒரு வழக்கறிஞர். இவரை போலவே தானும் படித்து ஒரு வழக்கறிஞர் ஆகவேண்டும் என்ற கனவுக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ஆனால், குடும்ப பொருளாதார சூழலின் காரணமாக அம்மாவின் வலுக்கட்டாயத்தின் பேரில் நடிப்பு துறையில் நுழைந்தார் ஜெயலலிதா. இப்படி தான் ஜெயலலிதாவின் முதல் கனவானப் படிப்பும், வேலையும் தகர்ந்து போனது.

அப்பா!

அப்பா!

இவரது தந்தை ஜெயராம் ஒரு வழக்கறிஞர். ஆனால், அவர் அந்த துறையில் சிறப்பாக வேலை செய்யவில்லை. சொத்துக்களை செலவு மட்டுமே செய்து வந்தார். ஜெயலலிதாவிற்கு இரண்டு வயது இருக்கும் போதே அவர் இறந்துவிட்டார். இதன் பிறகே 1950-ல் ஜெயலலிதா பெங்களூரில் இருந்த தாத்தா வீட்டிற்கு பெயர்ந்துள்ளார். இவரது அம்மா வேதவல்லி (இயற்பெயர்) என்கிற சந்தியா (சினிமா பெயர்) ஆரம்பக் காலத்தில் கிளர்க் வேலைக்காக டைப்ரைட்டிங் பயின்றுள்ளார்.

சினிமா அறிமுகம்!

சினிமா அறிமுகம்!

பிறகு 1953 சந்தியா என்ற பெயரில் சினிமாவில் நடிக்க துவங்கினார். இப்படி தான் ஜெயலலிதாவின் வாழ்வில் சினிமா அறிமுகமானது. 1950 - 1958 வரை தனது தாத்தா - பாட்டியின் அரவணைப்பில் பள்ளி படித்து வந்தார் ஜெயலலிதா. அப்போது கோடை விடுமுறை நாட்களில் மட்டுமே தனது அம்மாவை காணும் வாய்ப்பு பெற்றிருந்தார் என கூறப்படுகிறது.

அம்மாவுடன்...

அம்மாவுடன்...

1958ல் தனது அத்தையின் திருமணத்திற்கு பிறகே ஜெயலலிதா மெட்ராஸ் இடம் பெயர்ந்து தனது அம்மாவுடன் ஒன்றாக வாழ துவங்கினார். சிறு வயதிலேயே பல்வேறு இடங்களில் வாழ்ந்த காரணத்தால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை சரளமாக பேச கற்றிருந்தார் ஜெயலலிதா.

நடனம்!

நடனம்!

மெட்ராஸில் இருந்த போது ஜெயலலிதா கர்நாடிக சங்கீதம், வெஸ்டர்ன் கிளாஸிக்கள் பியானோ மற்றும் பரதம், குச்சிப்புடி, மோகினியாட்டம், மணிபுரி, கத்தக் போன்ற பல்வேறு நடன கலைகளும் கற்றிருந்தார். பரதம் கே.ஜே. சரசாவிடமும், குச்சிப்புடி பத்மபூஷன் டாக்டர் வேம்பதி சின்ன சத்தியம் அவர்களிடமும் கற்றுத் தேர்ந்திருந்தார்.

சிவாஜி கணேஷன் பாராட்டு!

சிவாஜி கணேஷன் பாராட்டு!

1960 மே மாதத்தில் மைலாப்பூரில் இருந்த ரசிக ரஞ்சனி சபாவில் தனது முதல் அரங்கேற்றத்தை நடத்தினார் ஜெயலலிதா. அந்த அரங்கேற்றத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஜெயலலிதாவின் நடன திறமையை கண்டு வியந்த நடிகர் திலகம். எதிர்காலத்தில் ஜெயலலிதா சிறந்த நடிகையாக வருவார் என பாராட்டி சென்றுள்ளார்.

நடிப்பு!

நடிப்பு!

நன்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை அம்மாவின் ஆசையால் நடிப்பு துறைக்கு திசை மாறியது. தனது முதல் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கன்னட திரையுலக சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் நடித்த ஸ்ரீ சைல மகாத்மே என்ற படத்தில் நடித்திருந்தார். அப்போது இவரது வயது 13.

முதல் இடம்!

முதல் இடம்!

தான் அடி எடுத்து வைக்கும் எந்த துறையாக இருந்தாலும் அதில் சிறந்து செயற்பட்டவர் ஜெயலலிதா. சிறப்பு என்று மட்டுமல்ல... முதன்மை இடத்தையும் தக்கவைத்துக் கொண்டவர் என்ற பெருமை கொண்டிருக்கிறார். படிப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண். நடிக்க துவங்கிய சில படங்களில் இருந்து தான் நடிப்பு துறையில் இருந்து விலகும் வரை முதன்மை நடிகையாகவே திகழ்ந்தார் ஜெயலலிதா. இறக்கும் வரையிலும் முதல்வராகவும் இருந்தார்.

பாடகி!

பாடகி!

1969ம் ஆண்டு கே.வி. மகாதேவன் இசையில் அடிமை பெண் படத்தில், வாலி எழுதிய அம்மா என்றால் அன்பு என்ற பாடலை முதல் முறையாக சினிமாவில் தனது சொந்தக் குரலில் பாடி இருந்தார் ஜெயலலிதா. பிறகு, நான் என்றால் அது, கண்களில் ஆயிடம், இரு மாங்கனி போல், மெட்ராஸ் மையில் என எம்.எஸ்.வி, ஷங்கர் கணேஷ், கந்தசாலா வெங்கடேஸ்வர ராவ்போன்றவர்களின் இசையில் 11 பாடல்களை சினிமாவில் பாடியிருந்தார்.

இது போக குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் மாரியம்மா, முத்து மாரியாம்மா, காலி மகமாயி, தங்க மயிலேறி வரும் எங்கள் வடிவேலன் என மூன்று ஆன்மீக பாடல்களும் பாடியுள்ளார்.

இவர் பாடிய மாறி வரும் உலகினிலே என்ற பாடல் வெளிவரவில்லை என கூறப்படுகிறது.

செல்வசீமாட்டி!

செல்வசீமாட்டி!

பார்ன் இன் சில்வர் ஸ்பூன் என்பார்களே... அப்படி தான் ஜெயலலிதா பிறந்தார். ஆனால், ஏழ்மையும் கண்டிருந்தவர். நடிப்பின் மூலம் உலகில் இருந்த எல்லா ஆடம்பரத்தையும் கண்டவர். பணம் என்பதோ, செல்வங்கள் என்பதோ இவருக்கு பெரிய பொருட்டாக தெரியவில்லை. இவரது இரண்டாத ஆசை மிகவும் எளிமையானதாக இருந்தது. ஆனால், அதுவும் இவருக்கு கிடைக்கவில்லை.

ஹவுஸ் வைஃப்!

ஹவுஸ் வைஃப்!

ஜெயலலிதாவின் இரண்டாவது ஆசை மிக எளிமையான ஹவுஸ் வைஃப்பாக இருக்க வேண்டும் என்பது தான். ஆனால், அதுவும் கைக் கூடவில்லை. இவருக்கும் தெலுங்கு நடிகர் சோபன் பாவுக்கும் இடையே காதல் உறவு இருந்தது என கூறப்படுகிறது. இன்றளவும் சிலர் இது புரளி என்றும், சிலர் இது உண்மை என்றும் கூறி வருகிறார்கள். இருவருமே இறந்துவிட்ட நிலையில், இதுக்குறித்து அலசுவது உகந்ததல்ல.

குடும்பத் தலைவி!

குடும்பத் தலைவி!

ஆனால், ஜெயலலிதா தான் அனைத்து சுகங்களையும், ஆடம்பரத்தையும் அனுபவித்துவிட்டேன். எனக்கு இப்போது தேவை ஒரு இயல்பான வாழ்க்கை. எனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அனைத்து பெண்களையும் போல ஒரு ஹவுஸ் வைஃப்பாக, சிறந்த குடும்பத் தலைவியாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அது நிறைவேறாமல் போய்விட்டது.

அம்மா!

அம்மா!

ஜெயலலிதா மற்றுமொரு நிறைவேறாத ஆசையாக இருந்தது அம்மா ஸ்தானம். திருமணம் நடக்காமல் போன காரணத்தால் இந்த கனவும் நிறைவேறாமல் போனது. இன்று நான் தான் ஜெயலலிதாவின் அம்மா என்றுக் கூறிக் கொண்டு சிலர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வது அவரது ஆன்மாவை கொச்சைப்படுத்தும் வகையில் தான் இருக்கிறது.

அம்மா என்று அழைக்க ஒரு குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பியவர். ஆனால், இன்று ஒரு மாநிலம் முழுக்க அவரைப் விரும்புவோரும், எதிர்ப்போரும்... அவர் இருந்த போதும், இறந்த பிறகும் கூட... பேச்சுக்கு, பேச்சு அம்மா, அம்மையார் என்றே அழைத்து வருகிறார்கள்.

நிறைவேறாத ஆசைகள்!

நிறைவேறாத ஆசைகள்!

ஜெயலலிதா இறந்த போது, அவரை விரும்பியவர்களை காட்டிலும், அவரை எதிர்த்தவர்களே மிகுந்த வருத்தம் கொண்டிருந்தார்கள். அதற்கான சாட்சியை நாம் ஊடகங்களின் வாயிலாக நன்றாகவே கண்டிருக்கிறோம்.

ஜெயலலிதா கொண்டிருந்த நிறைவேறாத மூன்று ஆசைகள் எல்லா மனிதர்களுக்கும் இருப்பது தான். ஆனால், குறைந்தபட்சம் ஒன்று, இரண்டாவது அனைவரும் அடைந்துவிடுவார்கள். ஆனால், இந்த சாதாரன ஆசைகள் கூட ஜெயலலிதாவிற்கு நிறைவேறாத ஆசைகளானது அவரது துரதிர்ஷ்டம் தான் போல!

"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற அந்த கம்பீர குரலை மீண்டும் இனி ஒரு போதும் கேட்க முடியாது...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Three Unfulfilled Desires of Jayalalitha Jayaram!

    Three Unfulfilled Desires of Jayalalitha Jayaram!
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more