கௌரவக் கொலை (எ) ஆணவக் கொலை பற்றி நாம் அறிதிராத திடுக்கிடும் தகவல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

தலித் இளைஞர் சங்கரை ஆணவக் கொலை செய்த சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு தண்டனையும், மற்ற குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள், ஆயுள் மற்றும் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சிறப்பான தீர்ப்பு வழங்கியிருக்கிறார் என ஆணவக் கொலை மற்றும் ஜாதி வெறியாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள் பலர் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.

ஆணவக் கொலை வகையில் சங்கரின் மரணம் முதலாவது அல்ல. ஆனால், இப்படியான அதிரடி தீர்ப்பு முதலாவதாக அமைந்திருக்கிறது. இதன் காரணத்தால் இனிவரும் நாட்களில் ஆணவக் கொலை செய்யவோ, வேறு ஜாதியில் திருமணம் செய்யும் முறையை எதிர்க்கவோ தயங்குவார்கள், அச்சம் கொள்வார்கள்.

ஆணவக் கொலை என்றால் என்ன? இந்த முறை எப்படி பெண்களை பாதிக்கிறது? எந்தெந்த நாடுகள் ஆணவக் கொலைகளை ஆதரிக்கின்றன, எதிர்க்கின்றன? போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆணவக் கொலை!

ஆணவக் கொலை!

ஒரு குடும்பத்தின் கௌரவம் அல்லது மானம் இழக்கும் வகையாக சிலரால் கருதப்படும் செயல்களில் அந்த குடும்பத்தின் பெண் நடந்துக் கொண்டலோ, அவர் வேறு ஜாதியை சேர்ந்த நபரை திருமணம் செய்துக் கொண்டாலோ... அந்த பெண்ணை கொலை செய்வதை கௌரவ கொலை எனப்படுகிறது. அதுவே, அந்த பெண் திருமணம் செய்துக் கொண்ட வேறு ஜாதி ஆணை கொலை செய்தால் ஆணவக் கொலை எனப்படுகிறது.

ஆணாதிக்கம்?

ஆணாதிக்கம்?

மேல்த்தட்டு ஜாதி என பிரிக்கப்பட்டுள்ள பிரிவினரின் குடும்பத்தில் இருக்கும் பெண் வேறு ஜாதியை சேர்ந்த ஆணை திருமணம் செய்துக் கொண்டால் கௌரவக் கொலைகள், ஆணவக் கொலைகள் நடக்கின்றன. இதுவே, அந்த வீட்டை சேர்ந்த ஆண், வேறு ஜாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டால். அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி, கூட்டு மானபங்கம் செய்து கொடுமைப் படுத்துகிறது அந்த மேல்தட்டு ஆணாதிக்க குடும்பம்.

இப்படியான செய்திகளை, நிகழ்வுகளை இந்தியாவில் நாம் அளவுக்கு அதிகமாகவே படித்தும், கண்டும் விட்டோம்.

அடக்குமுறை!

அடக்குமுறை!

நமது இந்திய திருநாட்டில் சுதந்திரம் பெற்றுவிட்ட போதிலும், பல கீழ்தட்டு மக்கள் அடக்கமுறைக்கு ஆளாகினர். அதில் ஒரு வகை தான் இந்த ஆணவக் கொலை. கீழ்தட்டு இனத்தை சேர்ந்த ஒரு ஆண் மேல்தட்டு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப் படுவானா? என தைரியமாக மேடையிட்டு பேசும் துணிவு உள்ள நாடு நம்முடையது.

வன்கொடுமை!

வன்கொடுமை!

மேல்தட்டு ஆண்மகன் விரும்பினால்... சிலநாட்கள் படுத்துவிட்டு செல், எங்கள் வீட்டுக்குள் மருமகளாகும் யோக்கியம் உனக்கு இருக்கிறதா? என கொக்கரிக்கிறது சில சமூகங்கள். காதல் திருமணம் செய்த எத்தனையோ பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, பலரால் கற்பழிக்கப்பட்டு தன் வாழ்வை இழந்த நிகழ்சிகளை நாமே பல முறை கண்டுள்ளோம்.

வழக்கு!

வழக்கு!

1980கள் வரை பெரும்பாலான ஆணவக் கொலைகள், கௌரவக் கொலைகள் குறித்து காவல் நிலையத்திலோ, நீதிமன்றத்திலோ பெரிதாக வழக்கு பதிவாகவில்லை. இதற்கு காரணம், கௌரவக் கொலை என்பது அந்த தனிப்பட்ட குடும்பத்தை சேர்ந்த விஷயமாக கருதப்பட்ட பரிதாப நிலையும் நம் நாட்டில் நிலவியுள்ளது.

பெண்கொடுமை!

பெண்கொடுமை!

பெண்களுக்கு எதிராக பலவகையான கொடுமை நீதிமன்ற மேஜைக்கு வந்ததே இல்லை. கணவன் கொடுமை, உறவினர்கள் வன்கொடுமை, விவாகரத்து பெறுதல், காம இச்சைக்கு பலியானது என ஆணவக் கொலை, கௌரவக் கொலைகள் தாண்டி பல வகைகளில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தை அடைந்ததே இல்லை.

கடந்த 25 ஆண்டுகளாக, பெண்களின் கல்வி உயர்வும், சமூக உணர்வும், தன்னிலை எழுச்சியும் இந்த கொடுமைகளுக்கு எதிராக குரல் எழ வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஆதரவான நாடுகள்!

ஆதரவான நாடுகள்!

உலகின் பல நாடுகள் கௌரவக் கொலைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சட்டங்கள் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும், மத்திய ஆசியா, வடக்கு ஆப்ரிக்கா, அல்பேனியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இப்படியான ஆதரவு சட்டம் இருப்பதாக அறியப்படுகிறது.

ஜார்டன்:

ஜார்டன்:

தண்டனை ஒழுங்கின் 240ம் ஷரத்தின்படி "எந்த நபராவது அவர் மனைவியோ, குடும்பப் பெண்ணோ மற்ற ஆண்களுடன் கள்ளக்காதல் கொள்வது தெரிந்து அவளை கொன்றால் அல்லது காயப் படுத்தினால், அவர் தண்டனையிலிருந்து நீக்கம் அடைவார்." என கூறப்பட்டுள்ளது.

சிரியா:

சிரியா:

ஷரத்து 548 படி "ஒரு ஆண் தன் குடும்பப் பெண்ணை கள்ள காதல் அல்லது வேறு தவறான செயல்களில் கண்டுப்பிடித்து, மரணமோ, கொலையோ செய்திருந்தால், அவரை தண்டனை பெருவதிலிருந்து நீக்கலாம்"

மொராக்கொ:

மொராக்கொ:

தண்டனை ஒழுங்கு ஷரத்து 548 "கொலை, அடித்தல், காயமேற்ப்படுத்தல் இவை ஒரு கணவனால் கள்ளக் காதலுடைய மனைவியின் மேலேயோ அவள் காதலன் மேலேயோ செய்தால், அந்த கணவனின் செயல்கள் மன்னிக்கப் படலாம்"

ஹைடி:

ஹைடி:

தண்டனை ஒழுங்கு ஷரத்து 269 " ஒரு கணவன் தன் மனைவியையோ அல்லது (பெண்) சகவசிப்பவரையோ கள்ளப் காம செய்கைகளில் கண்டுபிடித்து கொலை செய்தால், அவருக்கு மன்னிப்பு"

துருக்கி:

துருக்கி:

துருக்கியில் கௌரவக்கொலை செய்தால் ஆயுள் தண்டனை கிடைக்கும்.

மேலும், பாகிஸ்தான் மற்றும் பாலஸ்தீன நாடுகளில் சட்டங்கள் புறம்பாக இருந்து பிறகு மாற்றப்பட்டன.

பாகிஸ்தான்:

பாகிஸ்தான்:

காரி-காரோ: பாகிஸ்தானில் கௌரவக் கொலைகளை காரி-காரோ என்றே அழைத்து வருகிறார்கள். இவ்வகையான கௌரவக் கொலைகளை பாகிஸ்தானில் சாதரான கொலைகளாக தான் கண்டனர். காவல் நிலையம் மற்றும் நீதி மன்றங்களில் இந்த வழக்குகள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. பிறகு 2004 டிசம்பரில் சர்வதேச நாடுகளின் நெருக்கடியின் பேரில் சட்டத் திருத்தங்கள் கண்டு வரப்பட்டன.

கேலி!

கேலி!

இதன்படி கொலை செய்த நபரின் குடும்பத்தார் பெண்ணின் குடும்பத்திற்கு தண்டனை பணம் அளிக்க வேண்டும் என கூறினார்கள். ஆனால், இது அங்கே கேலியாக தான் காணப்பட்டது. இதற்கு காரணம். பல ஆணவக் கொலைகள் பெண்களின் குடும்பங்களே செய்து வந்தனர்.

கௌரவக் கற்பழிப்பு!

கௌரவக் கற்பழிப்பு!

பாகிஸ்தானின் மனித உரிமை ஆணியம் கூறியுள்ள தகவலின் படி 1998ல் பாகிஸ்தானின் பஞ்சாபில் மட்டுமே 286 கௌரவக் கொலைகள் நடந்துள்ளன. ஒருசில வருடங்களுக்கு முன்னர் முக்தர் மாய் என்ற பெண் கௌரவக் கற்பழிப்புக்கு ஆளானர். இந்நிகழ்வு உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலஸ்தின்:

பாலஸ்தின்:

பாலஸ்தின் பெண்ணுரிமை அறிக்கையின்படி காசா, மேற்க்கு கரைகளில் 1998ல் மட்டுமே 20 பெண்கள் கௌரவக் கொலை செய்யப்பட்டனர் என அறியப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இல்லாமல் மேலும் பல பெண்கள் 'கௌரவ' கொலைக்கு ஆளாகியிருக்கலாம் என பலரால் நம்பப்படுகிறது. இதுப் போன்ற நிகழ்வுகள் இன்னும் ஆங்காங்கே நடந்துக் கொண்டே தான் இருக்கிறது.

தெய்வங்கள்!

தெய்வங்கள்!

தமிழகத்திலும் பல கௌரவக் கொலைகள் நடந்துள்ளன. இந்த ஆணவக் கொலைகளுக்கு பலியான சிலரை தமிழகத்தின் சில பகுதிகளில் கடவுளாக வணங்கி வருகிறார்கள். காத்தவராயன், மதுரை வீரன், முத்துப்பட்டன், சின்ன நாடன், கௌதல நாடன் போன்றவர்கள் சாதிவெறியார்களால் காதலித்த காரணத்திற்கு கொலை செய்யப்பட்டவர்கள். இவர்களை சிறு தெய்வமாக பாவித்து வணங்கி வருகிறார்கள்.

விஞ்ஞானம் மட்டுமே வாழ்க்கை அல்ல. அறிவியலில் மேலோங்கி வளர்ந்து வரும் நாடு என்பதை பெருமையாக கருதும் நம் நாட்டிலேயே தான்.மனிதர்களின் உயிருக்கு மதிப்பே இல்லாமல் கிள்ளுக்கீரையாக பிடுங்கி எறியப்படுகிறது.

சங்கர் - கவுசல்யாவுக்கு கிடைத்த தீர்ப்பு இனிவரும் காலங்களில் இதுபோன்ற கொலைகள் ஏற்படமால் இருக்கவும், தவிர்க்கவும் ஒரு கருவாக இருக்கும் என நம்புவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things To Know About Honour Killing!

Things To Know About Honour Killing!
Subscribe Newsletter