அறை எண்: 1046 - மர்மம் விலகாத ஒரு கொடூரமான கொலை வழக்கு!

Posted By:
Subscribe to Boldsky
The Unsolved Mystery Of The Gruesome Murder In Room 1046

Cover Pic Credit: Kansas City Public Library

அன்று பிரெசிடென்ட் ஹோட்டலின் அறை எண்: 1046ல் நடந்த மர்மமான மரணம் கொலையா? தற்கொலையா? ஏதேனும் விசித்திரமான விஷயமா? என பல கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பின. கேள்விகள், சந்தேகங்கள், மர்மங்கள் தான் நீடித்தனவே தவிர, அதற்கான பதில் என இன்றுவரை எதுவும் கிடைக்கவில்லை.

அன்று - ஜனவரி 2, 1935 மதியம் 1:20 மணி. ஒரு தனி நபர் டவுன்டவுன் கன்சாஸ் சிட்டியில் (Downtown Kansas City) இருந்த பிரெசிடென்ட் ஹோட்டலில் அறை எடுத்து தங்க வந்தார். சீப்பு, டூத் பிரஷ் தவிர லக்கேஜ் என அவரிடம் எந்த ஒரு பெட்டியோ, பொருளோ இல்லை. மேல் மாடியில் ஒரு தனிமையான அறைவேண்டும் என கேட்டு வாங்கினார்.

அறை புக் செய்யும் போது தனது பெயரென ரோலாண்ட் டி. ஓவன் என குறிப்பிட்டிருந்தார் அந்த நபர். மேலும், பக்கத்தில் இருந்த ஹோட்டல் அறைகளின் ஒரு நாளுக்கான வாடகை குறித்து ரூம்பாயிடம் கருத்துக்கள் பேசி பகிர்ந்திருந்தார் என அறியப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறை எண்: 1046

அறை எண்: 1046

ரோலாண்டுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அந்த தனிமை அறை பத்தாவது தளத்தில் இருந்தது. அந்த அறை எண்: 1046. அவர் எப்போது அறைக்கு வருகிறார், போகிறார் என்பதே தெரியவில்லை என அந்த ஹோட்டலில் வேலை செய்து வந்தவர்கள் விசாரணையின் போது தெரிவித்திருந்தனர்.

விசித்திரம்!

விசித்திரம்!

பிரெசிடென்ட் ஹோட்டலில் அந்நாளில் வேலை செய்து வந்த ஊழியர்கள் பலர் ரோலாண்டின் நடவடிக்கைகள் விசித்திரமாக இருந்ததாக கூறியிருந்தனர். யாராலும் அவரை பற்றி அறிந்துக் கொள்ள முடியவில்லை. மேலும், பிரெசிடென்ட் ஹோட்டல் அந்த பகுதியில் தொழிலதிபர்கள் தங்கி செல்லும் இடமாக இருந்தது. சிலர் தங்கள் நள்ளிரவு வேலைகளுக்கும் அந்த ஹோட்டலை பயன்படுத்தி வந்தாக அறியப்படுகிறது.

மரணம்!

மரணம்!

ஹோட்டல் ஊழியர்கள் அவரது நடவடிக்கை மீது சந்தேகங்கள் இருந்தாலும் அதை பெரிதாக யாரிடமும் கூறவில்லை. ஆறு நாட்களுக்கு பிறகு ரோலாண்டு தனது அறை 1046ல் இறந்து கிடந்ததை கண்ட பிறகு இத்தனை தகவல்களும் வெளியே வந்தன. அப்போது தான் அந்த அறையில் நடந்த வினோதங்களும் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த அறைக்கு ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்த பெண்ணும் பல அதிர்ச்சி கரமான தகவல்களை கூறினார்.

ஜனவர் 3!

ஜனவர் 3!

ரோலாண்டு பிரெசிடென்ட் ஹோட்டலில் அறை எடுத்த இரண்டாவது நாள். ஹோட்டலின் பணிப்பெண் மேரி சோப்டிக் ரோலாண்டின் அறையை சுத்தம் செய்ய மதியம் 12 மணிக்கு சென்றுள்ளார். பெரும்பாலான அறைகளில் தங்கி இருந்தவர்கள் வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தனர். ரோலாண்டின் அறை மட்டும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

இருட்டு!

இருட்டு!

மேரி ரோலாண்டின் அறையின் கதவை தட்டினார். "அப்பறமா வாங்க.." என ஒரு குரல் மட்டும் கேட்டது. பிறகு சிறுது நேரம் கழித்து மேரி உள்ளே சென்றார். அறை முழுவதும் கும்மிருட்டாக இருந்தது. ஒரு சிறிய ஜன்னலின் துவாரத்தின் வழியாக சன்னமாக ஒளி வீசிக் கொண்டிருந்தது.

மேரிக்கு அச்சம் அதிகரித்தது. அந்த மெல்லிய ஒளியின் வெளிச்சத்தை வைத்து அறையை தன்னால் முடிந்த அளவுக்கு சுத்தம் செய்துவிட்டார்.

மேரி கிளம்பும் போது, "கதவை சாத்த வேண்டாம். என் நண்பர் எனை காண வந்துக் கொண்டிருக்கிறார்" என ரோலாண்டு கூறியுள்ளார். மேரியும் கதவை சாத்தாமல் சென்றுவிட்டார்.

நான்கு மணிநேரம் கழித்து...

நான்கு மணிநேரம் கழித்து...

நான்கு மணி நேரம் கழித்து புதிய டவலை மாற்றி வைக்க மேரி ரோலாண்டின் அறைக்கு சென்றார். அப்போதும் அறை பூட்டாமலோ இருந்தது. ரோலாண்டு முழுவதுமாக உடை அணிந்தப்படி படுத்திருந்தார். அவர் மெத்தையின் அருகே, "டான், நான் இன்னும் 15 நிமிடங்களில் வந்துவிடுவேன்" என்ற குறிப்புடன் ஒரு துண்டு காகிதம் இருந்தது.

ஜனவரி 4, காலை 10.30 மணியளவில்...

மேரி ரோலாண்டின் அறையான 1046-க்கு அறை சுத்தம் செய்ய கிளம்பினார். ரோலாண்டின் அறைக்குள் ஏதோ வித்தியாசமாக பேசிக் கொண்டிருப்பது போல சப்தம் கேட்டது. கதவை தட்டி உள்ளே செல்லலாம் என்ற போது தான். கதவு வெளிப்புறமாக பூட்டி இருப்பதை உணர்ந்தார் மேரி.

மாற்று சாவி!

மாற்று சாவி!

ஒருவேளை யாரும் உள்ளே இல்லை போல. சரி! நாம் அறையை சுத்தம் செய்துவிட்டே செல்லலாம் என தன்னிடம் இருந்த மாற்று சாவியை பயன்படுத்தி கதவை திருந்தார் மேரி. ஆனால், ரோலாண்டு உள்ளே தான் ஒரு இருட்டான பகுதியில் அமர்ந்திருந்தார். மேரி அறையை சுத்தம் செய்ய துவங்கினார்.

திடீரென போன் ரிங்கானது. ரோலாண்டு அவசர அவசரமாக அதை எடுத்து பேசினார், "இல்லை டான். எனக்கு எதுவும் சாப்பிட வேண்டாம். எனக்கு பசியாக இல்லை. இப்போது தான் காலை உணவை உட்கொண்டேன்" என கூறினார். சிறிது இடைவேளையில் மீண்டும், "இல்லை, எனக்கு பசியாக இல்லை" என கூறி போனை கீழே வைத்தார் ரோலாண்டு.

பேசினார்...

பேசினார்...

அப்போது தான் ரோலாண்டு சாதாரணமாக முதன் முறையாக மேரியிடம் பேசினார். இந்த ஹோட்டல் எப்படி? இந்த ஹோட்டலில் மொத்தம் எத்தனை அறைகள் இருக்கின்றன..? யார் இதற்கெல்லாம் இன்சார்ஜ் ? எத்தைகைய மக்கள் இங்கே தங்கி செல்கிறார்கள்? என பல கேள்விகள் கேட்டுள்ளார் ரோலாண்டு.

மேலும், இந்த முறையும், ஹோட்டல் அறைகளின் வாடகையை பற்றி பேசியிருக்கிறார்.

மேரி அனைத்து கேள்விகளுக்கும் அவசர அவசரமாக பதில் கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறிவிடுகிறார்.

பூட்டிய அறைக்குள் ரோலாண்டு இருக்கிறார். அப்போது யார் இவரை வைத்து பூட்டிவிட்டு சென்றது? என அறையைவிட்டு வெளியேறிய பிறகு தான் மேரிக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.

புதிய டவல்கள்!

புதிய டவல்கள்!

ஒரு நாள் கழித்து, மீண்டும் புதிய டவல்களை மாற்றி வைக்க அறை எண்: 1046-க்கு செல்கிறார் மேரி. கதவை தட்டுகிறார். இந்த முறை இரண்டு குரல்கள் கேட்கின்றன. 'நான் புதிய டவல்களை எடுத்து வந்துள்ளேன்' என கூறி வெளியே நிற்கிறார் மேரி. ஓர் ஆழமான குரல் ஒன்று, " எங்களிடம் போதுமான அளவிற்கு டவல் இருக்கிறது. போதும்!' என கூறுகிறது.

ஆனால், முந்தைய நாள் அறையை சுத்தம் செய்யும் போது தான் மேரி அனைத்து டவல்களையும் எடுத்து சென்றிருந்தார். அதற்கு மேல் அவர்களிடம் எதுவும் பேச வேண்டாம் என, மேரி அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

அதே நாள் மதியம்!

அதே நாள் மதியம்!

அன்றைய நாள் மதியம் பிரெசிடென்ட் ஹோட்டலுக்கு புதியதாக இரண்டு கெஸ்ட் வந்திருந்தனர். இவர்களது வருகை இந்த மர்மத்திற்கு ஓர் விடைக் கிடைக்க உதவும் என போலீஸ் நினைத்தது.

முதலாம் நபர் ஜீன் எனும் பெண். தனது காதலனை காண கன்சாஸ் நகரத்திற்கு வந்திருந்தார். அவர் அன்றைய இரவை அங்கே கழிக்க காத்திருந்தார். ஜீனுக்கு ஒதுக்கப்பட்ட அறையின் எண் 1048. இது ரோலாண்டு தங்கியிருந்த அறையில் இருந்து வலது புறமாக அமைந்திருந்தது.

போலீஸ் விசாரணையின் போது, அன்று இரவு ரோலாண்டு அறையில் இருந்து திரும்ப, திரும்ப சப்தம் வந்துக் கொண்டே இருந்தது என அறியப்பட்டது.

ஜீன் வாக்குமூலம்!

ஜீன் வாக்குமூலம்!

பக்கத்துக்கு அறையில் இருந்து மிகுந்த இரைச்சல் சப்தம் வந்துக்கொண்டே இருந்தது. யாரோ, ஒரு ஆணும், பெண்ணும் பேசிக் கொண்டிருந்தது போல இருந்தது. சப்தம் ஓயாமல் வந்துக் கொண்டிருந்ததால் ஹோட்டலின் ஹெல்ப் டெஸ்க்கிற்கு கால் செய்து புகார் செய்யலாம் என கருதினேன். ஆனால், ஏதோ சொந்த தகராறு போல என நினைத்து விட்டுவிட்டேன் என ஜீன் தனது வாக்குக் மூலத்தில் தெரிவித்திருந்தார்.

இரண்டாம் கெஸ்ட்!

இரண்டாம் கெஸ்ட்!

இரண்டாம் கெஸ்ட் சாதாரணமாக தங்க வந்த நபர் அல்ல. அவர் ஒரு கால் கேர்ள். அவர் ஹோட்டல் பிரெசிடென்ட்க்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். பெரும்பாலும் இரவில் தான் வந்து செல்வார்.

ஜனவரி 4ம் தேதியும் அறை எண் 1026-க்கு ஓர் ஆணை தேடி பெல்ஹோப் எனும் அந்த பெண் வந்து சென்றது அறிய வந்தது. அந்த கஸ்டமர் உடனடியாக வரவில்லை என்பதால், மற்ற பல தளங்களில் செக் செய்துவிட்டு திரும்பியுள்ளார் அந்த கால் கேர்ள் பெண்.

இந்த இரு பெண்களின் வாக்குமூலமும் இந்த வழக்கு பெருமளவு உதவும் என போலீஸ் கருதியது.

மறுநாள் காலை!

மறுநாள் காலை!

ஹோட்டல் போன் ஆப்ரேட்டர் பெல்ஹோப்க்கு கால் செய்து, அறை எண் 1046ல் இருக்கும் போன் பயன்படுத்தப் படாமலே கடந்த சில நேரமாக ஆஃபில் இருக்கிறது. நீங்கள் கொஞ்சம் செக் செய்து எங்களுக்கு கூற முடியுமா என கேட்டிருக்கிறார்.

பெல்ஹோப் ரோலாண்டின் அறைக்கு சென்று பார்த்த போது Do Not Disturb என்ற போர்டு தொங்கிக் கொண்டிருந்தது. பெல் அறையின் கதவை தட்டுகிறார். ரோலண்டு உள்ளே வாருங்கள் என கூறுகிறார். பெல் அறை வெளியே பூட்டியிருக்கிறது என பதில் கூறுகிறார். அதற்கான பதில் எதுவும் ரோலாண்டிடம் இருந்து பெல்லுக்கு கிடைக்கவில்லை.

மீண்டும் கதவை தட்டுகிறார். எந்த பதிலும் இல்லை. மதுவருந்தி இருப்பார் போல என கருதி பெல் நகர்ந்துவிடுகிறார்.

ஒரு மணி நேரம் கழித்து...

ஒரு மணி நேரம் கழித்து...

மீண்டும் போன் ஆபரேட்டர் பெல்லிடம் உதவி நாடுகிறார். பெல் சென்று பார்க்கிறார். எந்த பதிலும் இல்லை. மாஸ்டர் கீ பயன்படுத்தி உள்ளே சென்று பார்த்தல் ரோலாண்டு நிர்வாண நிலையில் மெத்தையில் படுத்துக் கிடக்கிறார். போதையில் இருக்கிறார் என கருதுகிறார் பெல்.

பிறகு அருகே சரியான நிலையில் வைக்காமல் இருந்த போனை சரியாக வைத்துவிட்டு நகர்கிறார் பெல்.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து பெல்லுக்கு கால் வருகிறது. அதே அறையில், மீண்டும் போன் உபயோகமற்று கிடைக்கிறது. கொஞ்சம் பார்க்கவும் என. பெல்லுக்கு அதிர்ச்சி. இந்த முறையும் பெல் தன்னிடம் இருந்த சாவியை கொண்டு கதவை திருந்து பார்க்கிறார். உள்ளே சென்று பார்த்தால் பாத்ரூம் கதவுகள் திறந்த நிலையில் இருக்கிறது. ரோலாண்டு இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடக்கிறார்.

திரும்பி பார்த்தல் சுவரெங்கும் இரத்தம் தெறித்துக் கிடக்கிறது. உடனடியகா பெல் போலீஸுக்கு கால் செய்து, செய்தியை கூறுகிறார்.

பிரத பரிசோதனை!

பிரத பரிசோதனை!

போலீஸ் மருத்துவர்களை அழைத்து பிரத பரிசோதனை செய்கிறார்கள். பரிசோதனையில் ரோலாண்டு பல நாட்கள் சித்திரவதைக்கு உள்ளானது தெரியவந்தது. கை, கால்கள், கழுத்து என பல இடங்களில் மிக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவரது நெஞ்சில் பலமுறை கத்தி கொண்டு குத்தியது தெரிய வந்தது. இந்த கத்தி குத்துகளின் காரணமாக ரோலாண்டின் நுரையீரலில் ஓட்டை விழுந்துள்ளன.

மரணம்!

மரணம்!

மருத்துவமனைக்கு எடுத்து சென்ற குறுகிய நேரத்திலேயே ரோலாண்டு இறந்துவிட்டார் என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

ஒருவேளை ரோலாண்டு கால் செய்ய போனை ஒவ்வொரு முறையும் எடுத்திருக்கலாம். ஆனால், காயங்களால் அவர் போனை கீழே போட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. துப்பறிவாளர்கள் வந்து சோதனை மேற்கொண்டார்கள்.

மர்மங்கள் கூடிக் கொண்டே போனது.... ரோலாண்டின் அறையில் துணி என எதுவும் இல்லை. அறை எடுத்த போது ரோலாண்டு கூறிய எந்த தகவலும் ஒத்துப் போகவில்லை. ஹோட்டலில் தரப்பட்ட சோப்பு, டூத் பேஸ்ட் என ஒன்றும் அங்கே இல்லை. கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கருவி என எதுவும் கிடைக்கவில்லை.

கைரேகைகள்!

கைரேகைகள்!

தேடுதலின் போது கிடைத்த ஒரே விஷயம் நன்கு சிறிய கைரேகைகள். அது யாருடையது என இதுநாள் வரை கண்டறிய முடியவில்லை.

விசாரணையின் போது ரோலாண்டு டி ஓவன் என அமெரிக்காவில் அப்படி ஒரு நபர் வாழ்ந்ததாக குறிப்பே இல்லை. யார் ஒருவரும் ரோலாண்டு என்ற நபர் காணாமல் போனதாக, தொலைந்து போனதாக வழக்கு தொடரவில்லை. ரோலாண்டின் மரணம் மட்டுமல்ல, ரோலாண்டு எனும் நபர் யார் என்பதே பெரும் குழப்பமாக இருந்தது.

வேறு ஹோட்டல்...

வேறு ஹோட்டல்...

பிறகு ஜனவரி 1ம் தேதி, இதே தகவல்களுடன் எங்கள் ஹோட்டலில் இது போல ஒரு நபர் தங்கியிருந்தார் என அருகே இருந்த ஹோட்டல் ஒன்று தகவல் கொடுத்தது. அங்கே இருந்த பெயர் யூஜின் கே. ஸ்காட். ரோலாண்டு போல இந்த பெயரும் போலி, இப்படி ஒரு நபர் இருக்கிறார் என்பதற்கு எந்த தடயமும் இல்லை.

நாட்கள் கழிந்தன...

நாட்கள் கழிந்தன...

ஓரிரு மாதங்கள் கழிந்தன... தங்களுக்கு வேண்டியவர்கள், காணாமல் போனவர்கள் என சிலர் இந்த உடலை தேடி வந்தனர். ஆனால், அனைத்தும் வேஸ்ட் ஆப் டைமாக கழிந்தன. கடைசியில் இந்த உடலை வைத்துக் கொண்டு எந்த பயனும் இல்லை என அறிந்து, ரோலாண்டு உடலை புதைத்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தது போலீஸ்.

லவ் ஃபார் எவர் என்ற பெயருடன் ஒரு கடிதம் எழுதி வைத்து இறுதி காரியங்கள் செய்து முடித்தனர்.

ஒரு வருடம் கழித்து...

ஒரு வருடம் கழித்து...

ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து ஒரு பெண் வந்தார்.. அவர் பெயர் ஓக்லேத்ரீ. எனது மகன் ஓவன் / ஸ்காட் பல வருடமாக காணாமல் போயிருந்தார் என கூறினார். அவரது இயற்பெயர் அர்டேமிஸ் ஓக்லேத்ரீ என கூறினார். ஆனால், ரோலாண்டு உடலில் இருந்த தடயத்திற்கும், அந்த பெண்மணி கூறிய தடயங்களுக்கும் ஒத்துப் போகவில்லை.

வருடங்கள் மட்டுமே கழிந்தன... ஆனால், அறை எண்: 1046ல் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. 1935ல் நடந்த மர்மமான மரணம். இந்நாள் வரை ஒரு கோப்பில் மர்மங்களுடன் உறங்கிக் கொண்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Unsolved Mystery Of The Gruesome Murder In Room 1046

The Unsolved Mystery Of The Gruesome Murder In Room 1046
Subscribe Newsletter