For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு கோடி பேரை பலிவாங்கிய சென்னை மாகாணத்தின் மாபெரும் பஞ்சம் - 1876–78!

சென்னை மாகாணத்தில் ஒரு கோடி பேர் இறக்க காரணமாக இருந்த மாபெரும் பஞ்சம் - 1876–78!

|

1876-78 ஆண்டுகளில் ஆங்கிலேயருக்கு கீழ் இயங்கி வந்த இந்தியாவின் ஒரு பகுதியான சென்னை மாகாணத்தில் மாபெரும் பஞ்சம் பீடித்தது. இதை 1876-78-ன் பெரும் பஞ்சம் என்றும், தென்னிந்திய பெரும் பஞ்சம் என்றும் கூறுப்படுகிறது.

The Great Famine of 1876–78, Which Killed Almost 1 Crore People in South India

Image Courtesy

இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்த பஞ்சம் மக்களை பசி, பட்டினியில் வாட்டி எடுத்தது. இந்த பஞ்சத்தின் காரணத்தால் ஏறத்தாழ ஒரு கோடி பேர் உயிரிழந்ததாக செய்தி கோப்புகள் மூலம் அறியப்படுகிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் ஆண்டு!

முதல் ஆண்டு!

சென்னை மாகாணத்தின் மாபெரும் பஞ்சமாக திகழந்த இந்த இரண்டு ஆண்டுகளில், முதலாம் ஆண்டு, சென்னை, மைசூர், பம்பாய், ஐதராபாத் போன்ற மாகாணங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன.

இரண்டாம் ஆண்டு!

இரண்டாம் ஆண்டு!

இதனை தொடர்ந்து இரண்டாம் ஆண்டு வட இந்தியாவின் ஐக்கிய, மத்திய மாகாணங்களின் சில பகுதியிலும் இந்த பஞ்சம் பரவியது. இந்த இரண்டு ஆண்டுகளில் 50 லட்சத்தில் இருந்து ஒரு பேர் நோயாலும், பட்டினியாலும் மாண்டனர்.

இதன் விளைவாக ஆங்கிலேய அரசு பஞ்ச நிவாரண குழுவை உருவாக்கி பஞ்ச விதிகளை வகுத்தது.

சிப்பாய் கலகத்திற்கு பிறகு...

சிப்பாய் கலகத்திற்கு பிறகு...

1858-ல் சிப்பாய் கலகத்திற்கு பிறகு சென்னை மாகாணம் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்து ஆங்கிலேய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

அப்போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் புகைவண்டிகள், தானிய ஊக வாணிகம், புதிய பணப் பயிர்கள், ஏற்றுமதி என பல நவீன முறைகளை இந்தியாவினுள் கொண்டுவந்தனர்.

பெரியளவில் தாக்கம்!

பெரியளவில் தாக்கம்!

இதன் காரணத்தால் உள்ளூர் சந்தைகள் பெரியளவில் பாதிப்படைய துவங்கியது. தானியங்களின் விற்பனை சந்தைப்படுத்தப்பட்டது.

1876-ம் ஆண்டு பருவநிலை மாற்றத்தால், தக்காணப் பீடபூமி முழுவதும் பருவமழை பொழியவில்லை. இதனால் உணவு தானியங்களின் விளைச்சல் பெருமளவு குறைந்தது.

பதுக்கல்!

பதுக்கல்!

தானிய உற்பத்தி குறைந்த போதிலும், ஏற்றுமதியை குறைக்கவில்லை ஆங்கிலேயே அரசு. சந்தைப் பொருளாதாரத்தில் அசையா நம்பிக்கை கொண்டிருந்த காலனிய ஆட்சியாளர்கள், ஏற்றுமதியை தடை செய்து, பற்றாக்குறைக்காமல், பதுக்கல் வேலையில் இறங்கினர்.

இதனால் உணவு தானியங்களின் விலை கட்டுக்கடங்காமல் போனது. விவசாயிகள் அடுத்த வருடத்திற்கான விதை நெல்லை உண்ணும் அளவிற்கு பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பட்டினி சாவுகள்!

பட்டினி சாவுகள்!

அடுத்த வருடம் பயிரிடப்பட்ட நில அளவு பெருமளவு குறைந்து, உணவுப் பஞ்சம் பல மடங்கு தீவிரமடைந்தது. தமிழகத்தின் நெற்களஞ்சியமெனக் திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட பட்டினிச் சாவுகள் அதிகரித்தன. இது குறித்து பஞ்ச நிவாரண குழு உறுப்பினர் வில்லியம் டிக்பி தனது ஃபேமைன் கேம்பைன்ஸ் இன் சவுத் இந்தியா என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

விதிகளுக்குட்பட்ட நிவாரணம்!

விதிகளுக்குட்பட்ட நிவாரணம்!

முதியவர்கள், ஊனமுற்றோர் போன்றவர்களுக்கு மட்டுமே இலவச உணவு வழங்கப்பட்டது. மற்றவர்கள் எல்லாம் கடுமையான வேலைக்கு கூலியாக உணவு பெற்றனர். இவ்வகையில் நிவாரண கூலிக்கு வேலை வாங்கி பல கட்டமைப்பு பணிகள் நடந்தன. அவற்றுள் ஒன்றுதான் பக்கிங்காம் கால்வாய்!

கூலி!

கூலி!

வயது வந்த ஆண் பெண்களுக்கு ஒரு நாளுக்கு ஆறு பைசாவும், 450 கிராம் தானியமும் அளிக்கப்பட்டது. இதை பெறுபவர்கள் மறுநாள் முழுவதும் ஓய்வின்றி உழைக்க வேண்டும். இது நிவாரண திட்டத்தில் டெம்பிள் ஊதியம் (Temple Wage) என்றழைக்கப்பட்டது.

மாண்டவர் எண்ணிக்கை!

மாண்டவர் எண்ணிக்கை!

இந்த பஞ்சத்தின் காலக்கட்டத்தில் மாண்டவர் எண்ணிக்கை என ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு கணிப்பு கூறப்பட்டுள்ளன.

பதிப்பு: ப்ராஸ்பரஸ் பிரிடிஷ் இந்தியா, ஃபிஷர் உன்வின் பதிப்பகம் (1901)

கணித்தவர்: வில்லியம் டிக்பி

எண்ணிக்கை: 1.03 கோடி

பதிப்பு: தி டெமொகிராஃபி ஆஃப் ஃபேமைன்ஸ், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பதிப்பகம் (1996)

கணித்தவர்: அரூப் மகாரத்னா

எண்ணிக்கை: 82 லட்சம்

பதிப்பு: ஃபேமைன் இன் பெசன்ட் சொசைடீஸ், கிரீன்வுட் பிரஸ் (1986)

கணித்தவர்: ரொனால்ட் சீவாய்

எண்ணிக்கை: 61 லட்சம்

பதிப்பு: இம்பீரியல் கசட்டியர் ஆஃப் இந்தியா, இதழ். 3 (1907)

கணித்தவர்: பிரிட்டிஷ் அரசு

எண்ணிக்கை: 55 லட்சம்

மொரீஷியஸ், பிஜி, இலங்கை, பர்மா

மொரீஷியஸ், பிஜி, இலங்கை, பர்மா

இதுபோன்ற பெரியளவில் உயிரிழப்பு எற்படுத்திய பஞ்சங்களின் விளைவுகளால், பஞ்சத்தின் பிடியிலிருந்து தப்பிக்க தென்னிந்தியர்கள் பலர், மொரீஷியஸ், பிஜி, இலங்கை, பர்மா போன்ற பிற காலனிகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்து சென்றனர். இவர்களது வம்சாவளி இன்றும் இந்நாடுகளில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Great Famine of 1876–78, Which Killed Almost 1 Crore People in South India

The Great Famine of 1876–78, Which Killed Almost 1 Crore People in South India
Desktop Bottom Promotion