சந்தன கடத்தல் வீரப்பனின் மறுப்பக்கம், தன் மகளையே கொன்ற கொடூர தந்தை!

Posted By:
Subscribe to Boldsky

சத்தியமங்கலம், சந்தன மரம் என்றாலே ஒருவரின் பெயர் தான் இன்று வரையிலும் பலருக்கு ஞாபகம் வரும், சந்தன கடத்தல் வீரப்பன். ஒரு காட்டு ராஜா போல வாழ்ந்த நபர்.

சட்டத்தால் பிடிக்க முடியாத வீரப்பனை சூழ்ச்சியால் தான் பிடிக்க முடிந்தது என்றும் வீரப்பனின் மரணத்தின் போது ஊடகங்கள் பல எழுதின. சந்தன கடத்தல், பிரபலங்களை பிணைக்கைதியாக பிடித்து வைத்தது என வீரப்பன் மீது பல குற்றசாட்டுகள்.

The Dark Side of Veerappan, A Badass Dad Who Killed His Own Daughter

சந்தன கடத்தல் வீரப்பன் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

ஆனால், வீரப்பன் வாழ்ந்த கிராம மக்கள் வீரப்பன் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதன் என்றும், தங்களுக்கு பாதுகாப்பே வீரப்பன் தான் என்றும் கூறியதையும் நாம் மறந்துவிட முடியாது.

ஆனால், பெற்ற குழந்தையையே கொல்லும் அளவிற்கு வீரப்பனுக்குள் ஒரு கொடூரன் இருந்தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொலை குற்றங்கள்!

கொலை குற்றங்கள்!

மறைந்த சந்தன கடத்தல் வீரப்பன் மீது பல கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால், தான் பெற்ற மகளையே வீரப்பன் கொன்றான் என்ற ஒரு வழக்கும் பதிவாகி இருந்தது. இதை வீரப்பன் வழக்கில் தலைமை அதிகாரியாக செயற்பட்ட கே.விஜயகுமார் அவர்களே கூறியுள்ளார்.

குடும்பத்தின் பாதுகாவலன்!

குடும்பத்தின் பாதுகாவலன்!

வீரப்பன் தனது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து மிகவும் அக்கறை எடுத்துக் கொண்ட நபர். யாராவது தன்னை ஏமாற்ற நினைத்தால் அவரை பழிவாங்காமல் வீரப்பன் விட்டதில்லை.

மது, மாது!

மது, மாது!

வீரப்பன் எப்போதும் போதை மற்றும் பெண்களிடம் இருந்து விலகியே இருந்தார். இவை இரண்டும் தீமை அளிப்பவை என்பது வீரப்பனின் கருத்தாக இருந்தது. மேலும் இவை இரண்டும் தமது பார்வையை மாற்றிவிடும் என்ற அச்சமும் இருந்தது.

முத்துலக்ஷிமி!

முத்துலக்ஷிமி!

அப்போது தான் முத்துலக்ஷ்மி வீரப்பன் மீது விருப்பமாக இருந்தார். வீரப்பனின் கவனத்தையும் ஈர்த்தார். அவரது கவனத்தற்கு எப்போதும் ஒரு நேர்மறை ஆளாக திகழ்ந்தார்.

வீட்டார் எதிர்ப்பு!

வீட்டார் எதிர்ப்பு!

ஆனால், முத்துலக்ஷ்மி வீட்டாருக்கு வீரப்பன் மீது பெரிதாக அபிப்பிராயம் இல்லை. முத்துலக்ஷ்மியின் தந்தை இதை வீரப்பனிடமே கூறினார். வேறு மாப்பிளை பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். வீரப்பன் விடுவதாயில்லை. முத்துலக்ஷ்மியை தூக்கி கொண்டு போய் காட்டு கோயிலில் திருமணம் செய்துக் கொண்டார்.

கர்ப்பிணி!

கர்ப்பிணி!

கர்ப்பமாக இருந்த முத்துலக்ஷ்மி எட்டு மாதங்கள் வரை காட்டில் தான் இருந்தார். பிறகு தான் பிரசவத்திற்கு அவரது வீட்டிற்கு சென்றார். முத்துலக்ஷ்மி வீட்டார் எங்கே இவர் கைது செய்யப்பட்டுவிடுவாரோ என்ற அச்சத்தில் இருந்தனர். சென்னையில் இவரே சரணும் அடைந்தார்.

ஹாஸ்டல்!

ஹாஸ்டல்!

போலீஸ் முத்துலக்ஷ்மியை ஒரு பெண்கள் விடுதியில் தங்க வைத்தனர். பிறகு அவர் வித்யா ராணி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த பெயரை சூட்டியவர் சைலேந்திரபாபு அவர்கள். பிறகு முத்துலக்ஷ்மி அவரது சொந்த ஊருக்கே திரும்ப அனுமதி வழங்கப்பட்டது. இங்கு இவரை மிக அருகாமையில் இருந்து நோட்டம் விட்டனர் போலீசார்.

வீரப்பன் அழைப்பு!

வீரப்பன் அழைப்பு!

குழந்தை பிறந்த ஆரம்ப காலத்தில் பல முறை வீரப்பனிடம் இருந்து அழைப்பு வந்தது. அதை முத்துலக்ஷ்மி மறுத்து வந்தார். பிறகு குழந்தயை விட்டு, முத்துலக்ஷ்மி மட்டும் கடைசியில் காட்டுக்கு வீரப்பனை பார்க்க சென்றார்.

மற்றுமொரு பெண் குழந்தை!

மற்றுமொரு பெண் குழந்தை!

1992-ல் இவர்களுக்கு பிரபா என்ற மற்றுமொரு பெண் குழந்தை பிறந்தது. சின்னபுள்ளை எனும் மருத்துவச்சி தான் பிரசவம் பார்த்தார். அடுத்த வருடமே மற்றுமொரு பெண் குழந்தையும் இவர்களுக்கு பிறந்தது. அந்த நேரத்தில் வீரப்பனால் கொண்டாட முடியாமல் போனது.

பெரிதான கூட்டம்!

பெரிதான கூட்டம்!

ஏனெனில், அப்போது அவர்களுடைய கூட்டத்தில் 100-க்கும் மேற்ப்பட்டவர்கள் இருந்தனர். அந்த நேரத்தில் திம்பம் பகுதிக்கு வீரப்பனின் கூட்டம் நகர துவங்கியது. நகர துவங்கிய நேரத்தில் சிறிதளவு சத்தம் கூட பல தூரம் ஒலிக்கும் அளவிற்கு கேட்டது.

பெரும் பிரச்சனை!

பெரும் பிரச்சனை!

இந்த தருணத்தில் ஒருநாள் அந்த பெண் குழந்தை உடல்நல குறைபாட்டால் மிக சத்தமாக அழுதது. அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். யாரும் எதுவும் பேசவில்லை. அனைவரும் வீரப்பனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர்.

கொலை!

கொலை!

வழியில்லாமல் பிரசவம் பார்க்க தெரிந்த சின்னப்புள்ளை எனும் மருத்துவச்சியை இந்த முறை, வழியில்லாமல் சிசு கொலை செய்ய நோக்கினான் வீரப்பன். எருக்கம்பூ கொடுக்கப்பட்டு அந்த குழந்தையின் மூச்சை நிறுத்தினர்.

அந்த நேரத்தில் முத்துலக்ஷ்மி மட்டுமே கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். இந்த விவரங்களை கருப்புசாமி என்பவர் கர்நாடக எஸ்.டி.எப் குழுவிடம் விசாரணையின் போது கூறியுள்ளார்.

இந்த பதிவு கே.விஜயகுமார் அவர்கள் எழுதி ரூபா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தகவலாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Dark Side of Veerappan, A Badass Dad Who Killed His Own Daughter

The Dark Side of Veerappan, A Badass Dad Who Killed His Own Daughter
Please Wait while comments are loading...
Subscribe Newsletter