For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பிணங்களை கட்டிக் கொண்டு படுத்திருந்த குழந்தைகள்!

  |

  சாஜ்டா பானு . கணவனை இழந்த ஓர் விதவைப் பெண் ஐந்து வயதில் அர்ஷத் மற்றும் மூன்று வயதில் சோயப் என இரண்டு குட்டிக் குழந்தைகளுடன் ரயில் பயணம் செய்து கொண்டிருக்கிறாள்.

  சாஜ்டா... பயப்படாதே.. இங்கே வந்து பணத்தை வாங்கிக் கொண்டு நீ திரும்பி விடலாம். இந்தப் பணம் உன் கணவரின் இறப்புக்கு காரணமான நிறுவனம் கொடுக்கப்போகிறது. இது உன் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இது உனக்கு தேவையும் கூட, அதனால் வந்து இழப்பீட்டை வாங்கிக் கொள். அதற்காக கான் எவ்வளவு கஷ்டப்பட்டார் எங்கெல்லாம் அழைந்தார் அதையெல்லாம் மறந்து விட்டாயா? சாஜ்டா பானுவின் உறவினர்கள் கேட்பதில் இருக்கும் நியாயம் புரிந்தது.

  The children who lay with dead corpses

  Image Courtesy

  நிறுவனத்திலிருந்து நஷ்ட ஈடு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல, கணவர் அஷ்ரஃபின் நண்பர் கான் எனக்காகவும் இந்த குழந்தைகளுக்காகவும் எவ்வளவு சிரமப்பட்டார். அவருக்கு நன்றி சொல்வதற்காகவேணும் என் கணவரை தின்ற அந்த ஊருக்குப் போயாக வேண்டும் மனதில் நினைத்துக் கொண்டு தான் வசிக்கும் ஊரிலிருந்து இரண்டு குழந்தைகளுடன் ரயிலேறினாள் அந்த பெண்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  போபால் நினைவிருக்கிறதா? :

  போபால் நினைவிருக்கிறதா? :

  டிசம்பர் 2 1984 ஆம் ஆண்டு விஷ வாயு கசிந்து ஊரையே சுடுகாடாக்கிய தருணம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதனை யாராலும் மறக்க முடியாது தான். அவ்வளவு கோரமான சம்பவத்தை நினைவு கூந்தாலே குலை நடுங்கிப் போகும் கொடூர நிகழ்வு அது.

  இந்த அசம்பாவிதத்திற்கு முதல் பல் சாஜ்டா பானுவின் கணவர் அஷ்ரஃப். போபாலில் இருந்த கார்ஃபைட் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். டிசம்பர் 21 1981 அன்று விஷ வாயு கசிந்து மூச்சுத் திணறி ,ரத்த வாந்தி எடுத்து இறந்து போனார் அஷ்ரஃப். விஷ வாயுவின் முதல் பலி. இந்த விஷம் ஊரையே காவு வாங்கப்போகிறது என்று யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

  Image Courtesy

  யாருக்கு பாதுகாப்பு :

  யாருக்கு பாதுகாப்பு :

  பாதுகாப்பு உடையினை சரியாக அணியவில்லை அதனால் தான் அஷ்ரஃப் இறந்தார். மற்றப்படி வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கை விரித்தது தொழிற்சாலை நிறுவனம்.

  ஆனால் உண்மையில் பிரச்சனை அஷ்ரஃப் அணிந்திருக்க வேண்டிய பாதுகாப்பு உடையில் அல்ல, ரசாயன வாயு அடைத்திருக்கும் கலனில் என்று யாருக்கும் தெரியவில்லை. அதன் பிறகு இரண்டு மூன்று முறை சிறைய அளவில் பாதிப்பு ஏற்பட்டு ஊழியர்கள் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார்கள்.

  Image Courtesy

  மூன்று வருடங்கள் கழித்து :

  மூன்று வருடங்கள் கழித்து :

  சரியாக மூன்று வருடங்கள் கழித்து, நிலமை கை மீறிப் போனது. ஒரு கட்டத்தில் போபாலில் இருக்கும் நிறுவனத்தை எடுத்து விடலாம் அதனால் எந்தப் பயனும் இல்லை என்ற அளவில் அமெரிக்காவில் இருக்கும் தலைமை நிறுவனம் முடிவு எடுத்திருந்தது.

  அதனால் இந்தியாவில் இருக்கும் தொழிற்சாலை கண்காணிப்புகளில் சிக்கல்கள் தெரிய ஆரம்பித்தன.

  இது தொழிற்சாலை அதுவும் கொஞ்சம் கவனிக்க வில்லையென்றால் ஆட்களை பலி கொள்ளக்கூடிய விஷ வாயு கொண்ட தொழிற்சாலை நாம் சும்மாயிருந்தாலும் அது சும்மாயிருக்குமா?

  Image Courtesy

  மூன்று கலன்கள் :

  மூன்று கலன்கள் :

  இ610,இ611,இ619 என்ற மூன்று மிகப்பெரிய கலன்கள் இருந்தன. எந்த நிலையிலும் அவை விரிசலோ, முறிவோ, கசிவோ ஏற்படாத வகையில் மிகவும் உயர்தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு இவை தயாரிக்கப்பட்டிருந்தது.

  ஒரு கலன் அவசியம் காலியாய் இருக்க வேண்டும்.

  ஆனால் வழக்கத்திற்கு மாறாக அன்று மூன்று கலன்களிலும் மிக் நிரப்பப்பட்டிருந்தது. பணியாளர் ஒருவர் E610 அடையாளமிட்ட மிக் கலனை இணைக்கும் வால்வை மட்டும் மூடி, நீரைச் செலுத்தினார். பராமரிப்புப் பணியில் வாடிக்கையாகப் பைப்பைக் கழுவப் பயன் படுத்திய நீர் எதிர்பாராதவாறு, 13000 காலன் மிக் நிரப்பப்பட்ட E610 கலனில் தெறித்து கொட்டியது. மிகச்சிறிய கவனக்குறைவு, உலகையே அச்சுறுத்திய பேரழிவாக மாறித்தொடங்கியது அந்த நிமிடத்திலிருந்துதான்.

  Image Courtesy

  மிக் :

  மிக் :

  மிக் ரசாயனம் மிகவும் வீரியமானது. கொடிய நச்சுத்தன்மைகொண்ட இது நீருடன் கலந்தால் தீவிர வெப்பத்தை வெளியாக்கும் தன்மை கொண்டது. கொஞ்ச நேரத்தில் மிக் கலனின் அழுத்தம் 2 psi ஐ தொட்டுநின்றது. 11 மணிக்கு இரவு ஷிப்ட் குழு வந்தபோது அழுத்தம் 10 psi ஆகக் கலனில் ஏறியிருந்தது. அழுத்தமானியின் எச்சரிக்கையைக்கூட இரவுப்பணி அதிகாரி அலட்டிக்கொள்ளவில்லை.

  இன்னும் சில மணித்துளிகளில் உலகை உலுக்கிப்போடப்போகும் விபத்தை தடுத்து நிறுத்த கிடைத்த கடைசி சந்தர்ப்பத்தை அந்த கணத்தில் தவறவிட்டார் அந்த அதிகாரி. 12:40 நள்ளிரவில் அழுத்தம் 40 psi என உச்ச நிலையை அடைந்திருந்தது. தாங்கமுடியாத அழுத்தத்தால் கலன் உப்பி உடைய ஆரம்பித்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது சரியாக இரவு மணி 12:45.

  Image Courtesy

   நள்ளிரவுச் சோகம் :

  நள்ளிரவுச் சோகம் :

  நிலமை கை மீறிச் சென்றது. அங்கிருந்த 120 அடி உயரப் புகைபோக்கியில் மேல் மட்டத்தில் வாயு பிதுங்கி வெளியேறியது. யோசிக்க நேரமின்றி அதிகாரிகள் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

  காட்டு வெள்ளமாய் கட்டுப்படுத்தமுடியாமல் கிளம்பிய அதன் மீது நீரை பீய்ச்சி அடித்தும், மீறிக் கொண்டு வானில் மிதந்தது மிக் வாயு. காற்றைவிடக் கனமானது என்பதால் கொஞ்சநேரத்தில் காற்றின் தாக்கத்தினால் தாழ்ந்து தரை மட்டத்தில் பரவ ஆரம்பித்தது வாயு. 1:30 மணிக்கு அபாய சங்கு இயக்கப்பட்டது. சில நிமிடங்களில் போபால் நகர மக்கள் கொத்து கொத்தாய் மடிந்து விழ ஆரம்பித்தனர்.

  Image Courtesy

  ரயில் நிலையம் :

  ரயில் நிலையம் :

  போபால் ரயில் நிலையத்தில் மாஸ்டராக இருந்த ஷர்மாவுக்கும் இந்த வாயுவின் நெடி தெரிந்தது. எதாவது சரக்கு ரயிலிருந்து ஏற்பட்ட கசிவாக இருக்கும் என்று நினைத்து சாதரணமாக இருந்தவர். தன் அறையை தட்டி இருவர் பதட்டத்துடன் நிற்பதை பார்த்ததும் விபரீதம் புரிந்தது. இவர் தன்னுடைய்ய அறையிலிருந்து வெளியேறிப் பார்த்தால் குப்பென்று மிக் விஷ வாயு நெடி மூச்சை அடைத்தது.

  அதற்குள் இன்னொருவர் ஓடிவந்து இவர்களை அறைக்குள்ளே தள்ளி கதவை சாத்தினார். ஏசியை ஆஃப் செய்தார்.

  Image Courtesy

  ரயில் போபாலில் நிற்கக்கூடாது :

  ரயில் போபாலில் நிற்கக்கூடாது :

  அப்போது ஷர்மாவின் அறைக்கு ஓர் போன் வந்தது. கார்பைட் தொழிற்சாலையி விபத்து விஷ வாயு ஊரெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. எந்த ரயிலும் போபாலுக்கு வர வேண்டாம் என்றது அந்த குரல்.

  கோரக்பூர் எக்ஸ்பரஸ் போபாலை நோக்கி வந்து கொண்டிருந்தது. போபாலை நெருங்கிவிட்டது அந்த ரயில், இனி எப்படி சிக்னல் கொடுத்து அந்த ரயிலை நிறுத்துவது. அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் கையில் விளக்குகளை ஏந்திக் கொண்டு தண்டவாளத்தில் நடக்கலாம்.

  Image Courtesy

  முன்னேறிக்கொண்டிருந்த ரயில் :

  முன்னேறிக்கொண்டிருந்த ரயில் :

  கையசைத்து வண்டியை தடுத்து நிறுத்தலாம். இதைத் தவிர வேறு வழியில்லை ஏனென்றால் போபாலின் முந்தைய ரயில் நிலையமான விதிசாவிலிருந்து ரயில் புறப்பட்டு விட்டது நடுவில் எந்த சிக்னலும் கிடையாது.

  ஆம், மக்களை காப்பாற்ற வேறு வழியில்லை என்று சொல்லி நான்கு பேர் கையில் விளக்குடன் தண்டவாளத்தில் நடக்க ஆரம்பித்தனர். ஆனால் ரயில் அந்த நான்கு பேரின் உடல்கள் மீது ஏற்றியபடி முன்னேறிக் கொண்டிருந்தது.

  Image Courtesy

  போபாலில் :

  போபாலில் :

  போபாலில் ரயில் நின்றது. பயணிகள் வழக்கம் போல இறங்க ஆரம்பித்தனர் ஸ்டேஷன் மாஸ்டரான சர்மா நிலமையை விளக்கி கத்திக் கொண்டிருந்தார் ஆனால் யாரும் கேட்பதாய் இல்லை. சாஜ்டா பானு தன் இரு குழந்தைகளுடன் இறங்கினாள்.

  அதற்குள் ஷர்மா ஓடிச் சென்று ஆள் க்ளியர் என்று சொல்லி பச்சைக் கொடியை காட்ட ரயில் புறப்பட்டது. இன்னும் கொஞ்சம் தாமதப்படுத்தியிருந்தால் மொத்த பயணிகளும் உயிரிழந்திருப்பர்.

  ப்ளாட்ஃபார்ம் முழுவதும் பிணங்கள். சிலர் வாந்தி எடுத்திருந்தார்கள். கொத்து கொத்தாக கிடக்கிறார்கள். அவளுக்கு எதுவும் புரியவில்லை ஆனால் இருமலும் கண் எரிச்சலும் அவளைப்படுத்தியது.

  இந்நேரத்திற்கு தங்களை அழைத்துச் செல்வதாக சொன்ன கான் இன்னும் வரவில்லையே.... ஸ்டேஷன் மாஸ்டரான ஷர்மா கத்தினார் விஷ வாயு பரவிக் கொண்டிருக்கிறது துணியை ஈரமாக்கி அதனை உங்கள் மூக்கில் கட்டிக் கொள்ளுங்கள்.

  Image Courtesy

  சாஜ்டா வீட்டில் இரண்டாவது பலி :

  சாஜ்டா வீட்டில் இரண்டாவது பலி :

  மூன்றாண்டுகளுக்கு முன்னர் தன் கணவரின் பலிவாங்கிய அந்த வாயு இன்றைக்கு ஊரையே காவு வாங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். ரயில் நிலையத்தின் ஓரத்திற்குச் சென்று பையை இறக்கி வைத்தார்.

  இரண்டு குழந்தைகளையும் உட்கார வைத்து விட்டு துணியை ஈரமாக்கி குழந்தைகளுக்கு கட்டினார்.இவரும் கட்டிக் கொண்டார்.

  கானை தேடிக் கண்டுபிடிக்க, நகர்ந்தார். வழியெங்கும் பிணங்கள், ஆங்காங்கே ரத்த வாந்தி எடுத்தப்படி இறந்து கிடந்தார்கள். சிலர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள். தண்ணீர் தண்ணிர் என்ற அபலக்குரல் கேட்டது.

  Image Courtesy

  அர்ஷத் :

  அர்ஷத் :

  கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கான் இல்லை. அவரும் இக்கூட்டத்தில் சேர்ந்திருப்பாரோ? யாருக்குத் தெரியும். இனியும் இங்கிருந்தால் ஆபத்து எப்படியாவது இங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று சொல்லி குழந்தைகள் இருந்த பகுதிக்குச் சென்றார்.

  அர்ஷத்.. சோயப் எந்திரியுங்கள் உடனடியாக நாம் கிளம்ப வேண்டும் என்று சொல்ல. அர்ஷத் எழுந்தரிக்கவேயில்லை. உசுப்பினாள் வாயில் ரத்தம் வழிய பொத்தென விழுந்தான். இந்த விஷ வாயுவிற்கு சாஜ்டா விட்டில் இரண்டாவது உயிர் பலியாகியிருந்தது.

  Image Courtesy

  மருத்துவமனைக் கூட்டம் :

  மருத்துவமனைக் கூட்டம் :

  மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதியது. இது என்ன வாயு, என்ன அறிகுறிகள் தெரியும் அவர்களுக்கு என்ன சிகிச்சையளிக்கவேண்டும் என்று யாருக்கும் எதுவும் தெரியவில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்திருந்தார்கள். அங்கே சிகிச்சையளிக்க இடமும் இல்லை, மருத்துவர்களும் இல்லை.

  இருந்த இரண்டு மூன்று மருத்துவர்கள் வந்தவர்களுக்கு அவசரத்திற்கு என்ன சிகிச்சையளிக்க முடியுமோ அதனைச் செய்தார்கள். வாந்தி,மயக்கம், மூச்சுத்திணறல்,வயிற்றுப் போக்கு ஆகியவற்றிற்கு மட்டும் மருந்து கொடுத்தார்கள்.

  Image Courtesy

  குழந்தைகள் :

  குழந்தைகள் :

  பல குழந்தைகள் கொண்டு வரும் போதே இறந்திருந்தன. என்ன சிகிச்சையளிக்க வேண்டும் என்பது தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவர்களின் உடலில் சைனைட் பரவியிருக்கிறது. உள்ளுருப்புகள் எல்லாம் வழக்கத்திற்கு மாறாக பயங்கரமாக வீங்கியிருந்தது.

  ஒரு கட்டத்தில் தன் உயிரை காப்பாற்றினால் போதும் என்று சொல்லி இறந்தவர்களை அங்கேயே விட்டுவிட்டு பிறர் வெளியேற ஆரம்பித்தனர். இறந்தவர்களை எங்கே கொண்டு சென்று எப்படி இறுதிக்காரியங்களை செய்வது. இன்னும் சில நிமிடங்களில் என் உயிர் போனாலும் போகலாம்.

  சாலைகளில்,மருத்துவமனை வாசலில் என மக்கள் ஆங்காங்கே சுருண்டு விழுந்து இறந்து கிடந்தார்கள்.

  Image Courtesy

  பிணவறை :

  பிணவறை :

  சிகிச்சையளிக்க பக்கத்து ஊரிலிருந்து மருத்துவக் கல்லூரி மாணவர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேராக பரிசோதித்த போது பெரும்பாலானவர்கள் உடலிலிருந்து ஹைட்ரோ க்ளோரிக் அமிலம் வாசனை வந்தது.

  சாலைகளில்,மருத்துவமனை வாயிலில், என்று வழியெங்கும் பிணங்கள் என்ன இது? அவர்களுகும் ஒரு கணம் அசைவற்று நின்றார்கள்.

  கர்பிணிகள் பலருக்கும் கருச்சிதைவு ஏற்பட்டடிருந்தது. பிணவறைக்குச் சென்றார்கள் அங்கே சிலர் அரை மயக்கமாக இருந்த போதே இங்கே வந்து கிடத்தப்பட்டிருந்தார்கள். அவர்களின் உடலில் தெரிந்த லேசான அசைவுகளை வைத்து அடையாளம் காணப்பட்டு வெளியே கொண்டு வந்து சிகிச்சையளிக்கப்பட்டன.

  Image Courtesy

  பிணங்களைக் கட்டிக் கொண்டு :

  பிணங்களைக் கட்டிக் கொண்டு :

  இந்த கோர விபத்தில் எத்தனை பேர் பலியானார்கள், எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்கிற சரியான விவரங்கள் அரசாங்கத்திடம் கூட இல்லை.

  ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிகப்பட்டிருக்கிறார்கள் என்றும் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்து விட்டார்கள் என்றும் அப்போது செய்திகள் கசிந்தது. அப்போது அந்த மாணவர்களின் கண்களை உறுத்திய இரண்டு சம்பவங்கள்.

  Image Courtesy

  காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது :

  காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது :

  இறந்து கிடந்த தாயின் மார்பகங்களில் ஒரு குழந்தை தாய்ப்பாலை குடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. இன்னொன்று பிணவறைக்கு உள்ளே என்ன ஏதுவென்று தெரியாமல் இருட்டறையில் அதாவது பிணவறையில் கிடத்தப்பட்டிருக்கும் பெற்றோரை கட்டிப்பிடித்தபடி பயத்தில் உறைந்து போயிருந்தன சில குழந்தைகள்.

  அவர்கள் மனரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

  இந்த கோர விபத்திற்கு காரணமான கார்ப்ரைட்டின் சேர்மன் மற்றும் சி இ ஓவான வாரன் ஆண்டர்சனை கைது செய்யாமல், அமெரிக்காவிற்கு வழியனுப்பி வைத்த இந்தியாவைப் பார்த்து இந்தியர்களைப் பார்த்து காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync life
  English summary

  The children who lay with dead corpses

  The children who lay with dead corpses
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more