தன் சொந்த ஊரிலிருந்து வெளியேறிய ஒரு விவசாயி குடும்பத்தின் பயணக்கதை!!

Posted By:
Subscribe to Boldsky

வியர்வை நாற்றம் குடலைப் பிரட்ட மூச்சைக் கூட எதிரிலிருப்பவர்களிடமிருந்து கடன் வாங்கி இழுக்க வேண்டிய கட்டாயத்தில் அவ்வளவு நெருக்கமாக உட்காந்திருந்தோம். நேற்று இரவிலிருந்து காலை மடக்கிக் கொண்டும் ஒரே மாதிரி உட்கார்ந்திருக்கிறோம்.

சிலர் மடியில் எங்கள் வாரிசுகளும்,உடமைகளும், சாமான்களும் கிடந்தது.இடம் கிடைக்காது என்று நினைத்து முதல் ஆளாக ஏறியது எவ்வளவுப் பெரியத் தவறு என்று ஏறியதிலிருந்து புலம்பிக் கொண்டே வருபவர்களுக்கு இனி மெல்லப் புரியும் ஊரிலிருந்து கிளம்பியிருக்கவே கூடாது என்று. இன்றும் பொழுது சாயப்போகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதையும் யோசிக்க கூடாது :

எதையும் யோசிக்க கூடாது :

எங்கள் வாகனத்தை கடக்கும் தார்ச்சாலைகள் பளபளப்பாக மின்னிக் கொண்டிருந்தது. ஒதுங்க கூட நிழல் இல்லை. பத்து இருபது வருசத்துக்கு முன்னாடி இந்த இடத்துல என்னென்ன விளஞ்சதோ எத்தன பேர மிதிச்சுட்டு போய்ட்டு இருக்குமோ என்று நினைக்கையிலேயே மனம் கனமாக இருந்தது.

கண்ணை இருக்க மூடி தலையை தொங்கப்போட்டுக் கொண்டான் வேலு எதையும் யோசிக்க கூடாது... புள்ளக்குட்டிய நல்லா படிக்க வைக்கணும் பெரியாள் ஆகணும் என்று சொல்லிக் கொண்டான்.

Image Courtesy

சதைக்குவியல் :

சதைக்குவியல் :

மாலை டீக்காக ஹைவேஸ் கடை முன்பாக அவர்களின் லாரி நிறுத்தப்பட்டது. கண்ணுக்கு எட்டிய தூரம் முழுக்க மனித சடலங்கள் கூடவே ஆங்காங்கே ஆடு,மாடு,கோழி கிடந்தது. சில குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடந்தது.

சில செத்து அழுகி புழுக்கள் மொய்க்க கொழகொழவென உரு தெரியாமல் சிதைந்திருந்தது. அந்த இடத்தை பார்ததுமே வேலுவுக்கு பயங்கர அதிர்ச்சி என்ன மனுசங்கயா நீங்க இந்த இடத்துல எப்டி நின்னுக்குட்டு திங்கிறீங்க?

யோவ்... பெருசு உக்காந்து திங்கிற ஹோட்டல்ல தான போவீகளோ.. ஐஞ்சு நிமிசத்துல வண்டி கிளம்பீரும் வந்து வயித்த நிரப்புயா அதட்டலான குரலில் என் மகன் வயதொத்தவன் அதட்டடிய போது தான் சுயநினைவுக்கே வர முடிந்தது.

தரையில் இறங்கவே பதட்டமாய் இருந்தது. சதைக்குவியலில் கால்கள் சொதக் சொதக் என்று உள்ளே செல்வதாய் தோன்றியது. வேட்டியை மேலே தூக்கியபடி அங்கும் இங்கும் கால் வைத்து பதட்டமாக நடந்து வரும் வேலு யாவருக்கும் வேடிக்கை காரனாய் தெரிந்தான்.

Image Courtesy

தன்மானம் விட்டுத்தரலாமா? :

தன்மானம் விட்டுத்தரலாமா? :

எட்டிப்பாக்காதீக... கிணற்றுப் பக்கம் போனாலே பஞ்சுவிடம் இந்த வார்த்தைகள் வராமல் இருக்காது.

"ஒண்ணும் பாக்கலடீ. கொஞ்சமாவது தண்ணீ ஏறிருக்கான்னு பாத்தேன்.ம்ம்ஹூம் எங்கிட்டு வர்றது அவனவன் மோட்டார போட்டு இழுத்தா? மதியத்துக்கு சோறு வடிச்சிட்டியா..

பதிலேதும் இல்லை.

பள்ளிகூடத்துக்கு... என்று ஆரம்பித்தவர் வாயை மூடிக் கொண்டார். பணத்தை கேட்டால் எங்கே செல்வது? ஏன் நீ குடுத்து வச்சிருக்கியா ஸ்கூல்ல ஃபீஸ் கட்ட என்று கேட்டுவிட்டால் உயிர் வாழ இன்னும் என்னவெல்லாம் கொடுக்கணுமோ?..

Image Courtesy

புதிய இடம் :

புதிய இடம் :

இரவு நெருங்கும் வேலையும் அவ்வளவு அனலாக இருந்தது. நாற்பது மாடி கட்டிடம் துவங்கப்பட்ட இருபதாம் மாடியின் போதே எதோ பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது. மீதம் கட்டிமுடிக்க வேண்டும் போல எங்களை அழைத்து வந்தவன் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தான்.

இங்க தான் உங்களுக்கு ஆறு மாசம் வேல தினமும் கையில 200 ரூபா கொடுத்துருவாங்க மூணு வேல சாப்பாடு சரிதான. அதோ அங்கன தங்கிடலாம் என்று கைகாட்டிய இடத்தில் புதர்மண்டிக்கிடந்தது பழைய டயர்கள்,பயன்படுத்தாது வீணடிக்கப்பட்ட சாமான்கள் கிடந்தது.

அங்கயா? அங்க எப்பிடி இருக்க முடியும்?

காலைல ஏழு மணிக்கு காண்ட்ராக்டர் வந்துருவார் எல்லாரும் தயாராயிருங்க என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக கிளம்பிவிட்டார்.

Image Courtesy

யாவரிடமும் ஒரே பதில் :

யாவரிடமும் ஒரே பதில் :

யப்பா சாமி போதும் பொறந்துட்டோம் சாவுறதுக்கு தைரியம் பத்தல... என்ன செய்ய முடியும் இதவுட்ட வேற நாதி எங்க?... நெல்லும் கரும்பும் விளஞ்ச பூமி இது.

இப்ப ஒரு புல்லு கூட முளைக்கல அது இதுன்னு என்னென்னமோ மாத்தி மாத்தி போட்டு பாத்தாச்சு. இயற்கை உரம், சொட்டு நீர்ன்னு கடன்காரன் ஆனது தான் மிச்சம் . நூறு நாள் வேலன்னு கூட்டிட்டு போய் பத்து நாள்ல அனுப்பிட்டாங்க அதுக்கே இன்னும் கூலி வர்ல

முச்சந்தியில் இருக்கும் விநாயகரிடம் புலம்புவதைத் தவிர அவனுக்கும் வேறு நாதியில்லை. அங்கே யாரை நிறுத்தி பேசச்சொன்னாலும் இப்படியான விரக்தியான பதில்கள் தான் வரும்.

Image Courtesy

விடையில்லா கேள்விகள் :

விடையில்லா கேள்விகள் :

இடத்தை சுத்தம் செய்து,சமதளமாக்கி மூங்கில் கம்புகளை நட்டு தார்பாயை விரிக்க மினி வீடு தயார். ஏழு வீடுகள் உருவானது. ஓரத்தில் நான்கு அடுப்புகள் மூட்டப்பட்டன .

கரண்ட்டு? தண்ணீ? எங்க குளிக்கிறது? சாமான் எங்க வைக்க? மளிகை சாமான் எங்க விக்கும்? ஹிந்திகாரனுகளா இருக்காங்க? புள்ளைங்க ஸ்கூல் எங்க சேக்குறது? ஊர்லயே ஃபீஸ் கட்ட முடியல இப்படி அவர்களிடம் எழும் எந்தக் கேள்விக்கும் யாரும் விடை சொல்ல தயாராக இல்லை.

Image Courtesy

மிகப்பெரிய சுழல் :

மிகப்பெரிய சுழல் :

நம்மல நம்பி நாலு உசுரு இருக்கு அதுகல பட்டினி போட முடியுமா? எங்கனயாவது ஊர விட்டு போய் கூலி வேல செய்யலாம்னு இருக்கேன்.

பெரியப்பா இறுக்கமாக இருந்தார்.

குடும்பத்துக்கு பெரியவர். ஊரில் தலைகட்டு. பலரும் கேட்டார்கள் ஆனால் யாரும் அதிர்ச்சியாகவில்லை. ஆமாமா நம்ம பொழைக்கணும்னா வெளிய போய்த்தான ஆகணும். இங்கிருந்து தப்பித்துக் கொள்கிறான் என்ற நிம்மதியா இதை விட மிகப்பெரிய சுழலில் சிக்கப்போகிறானே என்கிற தவிப்பா என்று தெரியவில்லை.

Image Courtesy

தொலைக்க ஒன்றுமில்லை :

தொலைக்க ஒன்றுமில்லை :

ஏறு,சேரு, சகதி, நாத்து, செடி, உரம்,தண்ணீ என்று உழன்ற எங்களுக்கு மண்,சிமெண்ட்,கம்பி,கற்கள், செங்கல் புழுதி, சுண்ணாம்பு கசப்பாய் இருந்தது.

தரையிலேயே பரந்து விரிந்து கிடந்த எங்களுக்கு 40 மாடிக் கட்டிடம் புதுசு தான். ஊரில் தலைநிமிர்ந்து நடந்தவர்கள் இன்று எவனுக்கோ கும்பிடு போட்டுக் கொண்டிருக்கிறோம். கூலிக்காக கையேந்தி நிற்கிறோம்.

உழைப்பு.... உழைப்பு..... உழைப்பு இதைத் தவிர வேறு எந்த மூலதனமும் இன்றி ஊரிலிருந்து அகதியாய் வெளியேறி நாடோடியாய் திரியும் எங்களிடம் தொலைக்க இனி ஒன்றும் இல்லை. இந்த உயிரைத் தவிர!

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, life
English summary

Story about refugee family

Story about refugee family
Story first published: Wednesday, August 30, 2017, 15:10 [IST]
Subscribe Newsletter