உங்கள் குழந்தை உண்மையில் அதிஷ்டசாலி தானா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

Posted By:
Subscribe to Boldsky

நமது வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை அனுபவத்தின் மூலமாகவும், ஒரு சில விஷயங்களை பிறரது அனுபவத்தின் மூலமாகவும் கற்றுக்கொள்ள முடியும். அனைத்தையும் தன் அனுபவத்தின் மூலமாக மட்டுமே பட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று இருந்தால், வாழ்க்கையில் பல அடிகளை பெற வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி பாதை மாறி செல்ல கூட வாய்ப்புகள் உள்ளது. இந்த பகுதியில் ஞானிகளின் பொன் மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை அடிப்படையாக கொண்டு வாழ்க்கையை நடத்தினால், நீங்கள் ஊரோ போற்றும் அளவிற்கு நல்வாழ்க்கை வாழலாம்.

some life quotes for bright life

1. நாம் காட்டும் பணிவிற்கும் மரியாதைக்கும் பிரதிபலனாக ஏதேனும் ஒரு நன்மையைப் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்போம் எனில் நம்மிடம் உண்மையான அன்பு உருவாகாது.

- விவேகானந்தர்.

2. செல்வங்களின் சுமையை ஏற்றிக் கொண்டு இன்பம் எனும் செங்குத்துப் பாதையில் ஏறிச் செல்வது ஒரு மனிதனுக்குக் கடினம்.

- முகம்மது நபிகள்.

3. தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகளே தேவையில்லை.

- ஃபிராங்கிளின்.

4. சிந்திக்காமல் பேசத் தொடங்குவது, குறி பார்க்காமல் அம்பை விடுவது போன்றது.

- ஆஸ்கர் ஒயில்ட்.

5. தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அவற்ரை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்.

- லெனின்.

6. சிறிய தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளைத் தவிர்க்க முடியாது.

- கன்ஃபூசியஸ்.

7. ஒழுக்கம் என்பது வெள்ளைக்காகிதம் போன்றது. ஒரு முறை கறை பட்டால் மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியாது.

- ஹாவ்ஸ்.

8. கடினமான வேலைகளைச் செய்வதில் மகிழ்ச்சியடைபவர்களே எப்போதும் புகழ் பெறுகிறார்கள்.

- மகாகவி மில்டன்.

9. ஆரோக்கியம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.

- ஹால்டேன்.

10. தேவைக்கு மேலுள்ள பொருள், தேவையில்லாதவற்றை வாங்கவே பயன்படும்.

- தோரோ

11. அக்கறை உள்ள பெற்றோரும், அலமாரி நிறையப் புத்தகங்களும் வாய்க்கப்பெறும் குழந்தையே அதிர்ஷ்டசாலி.

- ஜான் மெக்காலே

Read more about: insync, life, baby, குழந்தை
English summary

some life quotes for bright life

here are the some life quotes for bright life
Story first published: Saturday, September 9, 2017, 11:23 [IST]
Subscribe Newsletter