For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இரத்தம் உறையவைக்கும் பண்டையக் கால அடிமை வர்த்தகம் பற்றிய உண்மைகள்!

  |

  மூடர் கூடம் என்ற படத்தில் வரும் மாம்பழம் வசனத்தை போல தான் பண்டையக் காலத்தில் மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். கொஞ்சம் வலுவாக உள்ளவன் ஓரிடத்தை ஆக்கிரமிப்பு செய்துக் கொண்டு, பிறகு அங்கே வந்தவனை இது என்னிடம், இங்கே நீ இருக்க வேண்டும் என்றால் நான் சொல்வதை செய்ய வேண்டும், இல்லையேல் நீ இங்கு உயிர்வாழ முடியாது என்பது போல தான் வாழ்ந்து வந்துள்ளனர்.

  பிறகு அரசாட்சி, அடிமைத்தனம் என்பது மெல்ல, மெல்ல அதிகரித்து உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற கோட்பாடுகள் வகுக்கப்பட்டு வலுவிருப்பவன் வல்லவனாகவும், வலிவிழந்து காணப்பட்டவன் அடிமையாகவும் வாழ்ந்துள்ளனர். உலகளவில் காணும் போது மற்றப் பகுதிகளை காட்டிலும், ரோமானியர்கள் மத்தியில் தான் இந்த அடிமைத்தனம் மேலோங்கி காணப்பட்டுள்ளது.

  எப்படி? யார், யார்? எந்தெந்த வகையில் அடிமைகளானார்கள், அவர்கள் விடுதலை பெற எத்தனை கடினமான விஷயங்களை கடந்து வந்தனர் என்பது குறித்து இங்கே காணலாம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  அடிமைகள் எண்ணிக்கை!

  அடிமைகள் எண்ணிக்கை!

  பண்டையக் காலத்து ரோமாபுரியில் தான் அதிகப்படியான அடிமைகள் இருந்ததாக அறியப்படுகிறது. முதலாம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த நபர்களில் 90% பேர் ரோமாபுரியில் இருந்து அடிமைகளாக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்ற தகவலும் அறியப்படுகிறது.

  Image Credit: commons.wikimedia

  விகிதம்!

  விகிதம்!

  பண்டையக் காலத்தின் முடிவிற்கு பின் அடிமைகளை விடுவித்த பிறகு, அடிமைகளின் எண்ணிக்கை விகிதம் எடுத்து பார்த்த போது இருபது இலட்சம் பேரில் நால்வரில் மூவர் என்ற விகிதத்தில் அடிமையாக இருந்து வந்தது அறியவந்தது.

  Image Credit: commons.wikimedia

  பண்டைய ரோமபுரி!

  பண்டைய ரோமபுரி!

  பண்டையக் காலத்து ரோமபுரியில் சதுர்னாலியா (Saturnalia) என்ற விழா கொண்டாடி வந்துள்ளனர். இந்த ஒரு நாள் மட்டும் எஜமான்கள் அடிமைகளாகவும், அடிமைகள் எஜமாங்களாகவும் தங்கள் பாத்திரத்தை மாற்றிக் கொள்வார்களாம்.

  MOST READ: இந்த உணவுகளை காலையில் சாப்பிட்டால் நாள் முழுக்க தூங்கி கிட்டே இருப்பிங்க...!

  Image Credit: commons.wikimedia

  இன்று!

  இன்று!

  இன்றைய மாடர்ன் உலகில் அடிமைத்தனம் இல்லை என நாம் கருதுகிறோம். ஆனால், இன்றும் ஆட்கடத்தல் முறையில், உலகின் பல பகுதிகளில் மனிதர்களை கடத்தி அடிமைகளாக விற்று வருகிறார்கள். இது பலருக்கும் தெரிவதில்லை. இன்றைய கணக்கில் உலகில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அடிமைகள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

  Image Credit: commons.wikimedia

  ஸ்பார்டகஸ்!

  ஸ்பார்டகஸ்!

  பண்டையக் காலத்து ரோமாபுரியில் அடிமைகள் நிறைய பேர் இருந்தனர். இவர்களில் ஸ்பார்டகஸ் என்ற அடிமை மிகவும் பிரபலமானவன். இவர் த்ரஷியன் தோற்றத்தில் இருந்து வந்த அடிமை என கூறப்படுகிறது. ரோம் நாட்டின் அடிமைகளில் எல்லா காலத்திலும் இவர் தான் சிறந்தவராக இருந்தார். ரோமின் கிளாடியேட்டர்பயிற்சி முகாமில் இருந்த 73 கி.பி-யில் இவர் தப்பித்துள்ளார்.

  Image Credit: wikipedia

  78 பேர்!

  78 பேர்!

  இவர் மட்டுமின்றி, இவருடன் 78 பேரை சேர்த்து தப்பித்துள்ளார். ரோம் இராணுவத்தை ஸ்பார்டகஸ் மற்றும் அவனது படை இரண்டு ஆண்டுகள் எதிர்த்து வந்தனர். இவர்கள் இறந்த உடல்களை ஆயுதம் ஏந்த வைத்து பெரிய படை போன்ற பிம்பத்தை ஏற்படுத்தினர். இதனால், தொலைவில் இருந்து கண்டால் பெரும் படை திரண்டிருப்பது போன்ற பிம்பம் தெரியும்.

  Image Credit: wikipedia

  மரணம்!

  மரணம்!

  கடைசியாக, ரோம இராணுவத்தால் ஸ்பார்டகஸ் கொலை செய்யப்பட்டார். ஸ்பார்டகஸ் இறந்த போதிலும், அவனது பெயர் என்றும் இறக்கவில்லை. இன்றளவும், ரோம வரலாற்றில் அழியாத பெயர் கொண்டிருப்பவன் ஸ்பார்டகஸ். இன்றும் பல புத்தகம், டிவி சீரியஸ், படங்கள் என ஸ்பார்டகஸ் பெயரை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

  Image Credit: commons.wikimedia

  6000 பேர்!

  6000 பேர்!

  ஸ்பார்டகஸ் மற்றும் அவனது 78 பேர் கொண்ட படையை அழிக்க ரோம இராணுவம் 6,000 அடிமைகளை திரட்டிக் கொண்டு பெரும் படையாக சென்றது என வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

  MOST READ: சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் இந்த சீனித்துளசி உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும்

  Image Credit: commons.wikimedia

  ரோமாபுரியில் அடிமைத்தனம்!

  ரோமாபுரியில் அடிமைத்தனம்!

  உலகில் வரலாற்றில் ரோமர்களிடத்தில் தான் அடிமைகள் கொண்டிருப்பது பெருமளவு இருந்ததாக தெரியவருகிறது. அடிமைகள் வைத்திருப்பது என்பது செல்வந்தர்களின் கௌரவமாக மட்டும் அங்கே காணப்படவில்லை. ஏழைகள் கூட ஒன்று அல்லது இரண்டு அடிமைகளை வைத்திருந்த நிலை ரோமாபுரியில் காணப்பட்டுள்ளது.

  Image Credit: wikipedia

  செல்வந்தர்கள்!

  செல்வந்தர்கள்!

  ஏழைகளிடமே ஒன்றல்லது, இரண்டு அடிமைகள் எனில், பெரும் செல்வந்தர்களிடம் எத்தனை அடிமைகள் இருந்திருப்பார்கள் என எண்ணி பாருங்கள். நீரோவிடம் (Nero) நானூறுக்கும் பெறப்பட்ட அடிமைகள் இருந்ததாக அறியப்படுகிறது. ரோமாபுரியை சேர்ந்த கயஸ் கேசிலிஸ் இசிடரஸ் இறந்த போது மட்டும், அவரிடம் நான்காயிரத்து நூற்று அறுபத்தி ஆறு அடிமைகள் இருந்ததாக அறியப்படுகிறது.

  Image Credit: commons.wikimedia

  அடிமை தேவை?

  அடிமை தேவை?

  அடிமைகள் கொண்டிருக்க ரோமானியர்கள் ஏராளமான காரணங்கள் கொண்டிருந்தார்கள். போக்குவரத்து, சுரங்கம் தோண்டுவது, வீட்டு வேலைகள் செய்வது, நிலம் சுத்தம் செய்ய, விவசாயம் செய்ய, கால்நடைகளை பார்த்துக் கொள்ள, பராமரிக்க என அடிமைகளை பல காரணங்களுக்காக ரோமானியர்கள் கொண்டிருந்தனர். இவர்கள் அடிமைகளை ஆரோக்கியமாக பராமரிக்கவில்லை. இவர்களிடம் இருந்த அடிமைகள் மிகவும் நோய்வாய்ப்பட்டு, உடல்நலம் குன்றிய நிலையில் தான் இருந்துள்ளனர்.

  Image Credit: wikipedia

  அடிமைகள் கொள்முதல்!

  அடிமைகள் கொள்முதல்!

  அடிமைகளை பல வகையில் இவர்கள் கொள்முதல் செய்துள்ளனர். போரில் தோற்றவர்கள், கைதானவர்கள், திருட்டு, கொள்ளை சம்பவங்களில் பிடிப்பட்டவர்கள், வணிகம் செய்ய வந்து வாங்கப்பட்டவர்கள் மற்றும் காலம், காலமாக அடிமைகளாக இருந்து வந்தவர்கள். இது போல பல நிலைகளில் அடிமைகளை கொள்முதல் செய்துள்ளனர் ரோமானியர்கள்.

  Image Credit: commons.wikimedia

  10,000!

  10,000!

  ஒரு தருவாயில், ஒரே நாளில் பத்தாயிரம் அடிமைகளை வர்த்தக ரீதியாக இத்தாலிக்கு அனுப்பியதாக வரலாற்று குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது. பெரும்பாலும், திருட்டு, கொள்ளை சம்பவங்களில் பிடிபடும் நபர்களை வர்த்தகத்தில் ஈடுபடும் போது அடிமைகளாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். பொதி சுமக்க, கப்பல் ஓட்ட, கட்டுமான வேலைகளில் ஈடுபடுத்த இவர்களை அடிமைகளாக பயனடுத்தியுள்ளனர்.

  Image Credit: commons.wikimedia

  விடுதலை!

  விடுதலை!

  ரோமானியா சமூகத்தில் ஒரு அடிமையை விடுதலை செய்யும் உரிமை அந்த அடிமையின் உரிமையாளருக்கு இருந்தது. இதை மனுமிஷன் (manumission) என கூறியுள்ளனர். இது பல வகையில் நிறைவேற்றியுள்ளனர். ஒரு அடிமையின் நேர்மை, வேலையை கண்டு மனம் மகிழ்ந்து விடுதலை செய்தல், அல்லது அந்த அடிமை மூலமாக பெற்ற அதிக லாபம் காரணமாக விடுதலை செய்வது, அல்லது போதுமான அடிமைகள் இருக்கும் போது நீண்ட காலம் அடிமை சேவகம் செய்தவர்களை விடுதலை செய்வது.

  MOST READ: தம்பதியர் புணர்தலுக்கு பின் குளிக்க வேண்டியதன் கட்டாயம் என்ன?

  Image Credit: commons.wikimedia

  ஆச்சரியங்கள்!

  ஆச்சரியங்கள்!

  சில தருணங்களில் அடிமையில் இருந்து விடுதலை பெற்றாலும், அதே உரிமையாளரிடம் சம்பளத்திற்கு வேலை செய்யும் நபராக தொடர்வார்கள். சில சமயங்களில் விடுதலையும் கொடுத்து, அந்த அடிமைக்கு கூடுதல் அடிமைகள் கொடுத்து, அவருக்கு உரிமையாளர் அந்தஸ்து கொடுப்பார்கள். சிலர் ரோமாபுரி குடிமகனாக மாறி அங்கேயே வாழ்ந்தும் வந்துள்ளனர்.

  Image Credit: commons.wikimedia

  நானூறு டாலர்கள்!

  நானூறு டாலர்கள்!

  1850-களில் தோராயமாக ஒரு அடிமைக்கு நானூறு டாலர்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததாம், தனக்கு வேண்டிய அடிமையை அவர்கள் சந்தையில் இந்த பணத்தை கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். இந்த பணத்தின் இன்றைய மதிப்பு 12,000 டாலர்கள் என கூறப்படுகிறது.

  Image Credit: commons.wikimedia

  பிரிட்டிஷ் ராஜ்ஜியம்!

  பிரிட்டிஷ் ராஜ்ஜியம்!

  பிரிட்டிஷ் ராஜ்ஜியம் தனக்கு கீழ் இருந்த அரசாட்சி இடங்களில் அடிமைகளை வாங்கும், விற்கும் முறைக்குக் தடை விதித்த போது. அன்று வரை அடிமைகள் கொண்டிருந்த 46,000 மேல்தட்டு மக்களுக்கு இழப்பீடு என்ற முறையில் தானாக முன்வந்து பணம் கொடுத்து, அடிமைகளுக்கு விடுதலை கொடுத்தது. ஆனால், இந்த 46,000 பேரிடம் இருந்து விடுதலை பெற்ற எட்டு இலட்சம் பேருக்கு ஒரு நயாப்பைசா கூட தரப்படவில்லை.

  Image Credit: wikipedia

  1526 - 1867!

  1526 - 1867!

  1526 முதல் 1867 வரை ஆப்ரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு கடல் வழியாக 12.5 மில்லியன் மக்கள் அடிமைகளாக அனுப்பட்டுள்ளனர். ஆனால், இதில் இந்த கப்பல் பயணத்தை கடந்து அந்த பக்கம் உயிருடன் சென்றவர்கள் எண்ணிக்கை வெறும் 10.7 மில்லியன் தான். பயணத்தின் நடுவே பசி, கொடுமை, சித்திரவதை, தப்பித்தல் காரணங்களால் ஏறத்தாழ 1.8 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

  MOST READ: தீபாவளி வேற வருது... தீக்காயம் ஏதாவது பட்டா உடனே என்ன செய்யணும்? தெரிஞ்சிக்கோங்க...

  Image Credit: commons.wikimedia

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Shocking Facts About Ancient Period Slavery System!

  Shocking Facts About Ancient Period Slavery System!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more