வீட்டில், பெற்றோர்களால் 20 ஆண்டுகள் அறையில் பூட்டி சித்திரவதைப்படுத்தப்பட்ட பெண்!

By: Staff
Subscribe to Boldsky

கண்டோலிம் எனும் கிராமம் கோவாவில் இருக்கிறது. இந்த கிராமம் பானாஜி அருகே அமைந்திருக்கிறது. கண்டோலிம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மனநலம் சரியில்லை என கூறி, 20 ஆண்டுகளாக பெற்றோரால் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார்.

அந்த பெண்ணின் வீட்டருகே வசித்து வரும் மக்கள் சிலர், இப்படி ஒரு பெண்ணை பல ஆண்டுகளாக வீட்டுக்குள் அடைத்துள்ளனர் என புகார் அளித்தே பிறகே போலீஸ் அவரை மீட்டு என்.ஜி.ஒ காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமணம்!

திருமணம்!

(பெயர் குறிப்பிடப்படவில்லை.. ) இருபதுகளின் மத்தியில் திருமணம் நடந்தது அந்த பெண்ணுக்கு..

கோவாவில் கண்டோலிம் எனும் கிராமத்தில் பெற்றோருடன் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வந்த ஒரு சராசரி பெண். எல்லா பெண்களின் வாழ்வில் நடப்பதை போல, அந்த பெண்ணுக்கும் திருமண வயது எட்டியது. வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து மாப்பிளையும் பார்த்தனர்.

மாப்பிளை!

மாப்பிளை!

கோவாவில் வசித்து வந்த பெண்ணுக்கு இந்தியாவின் பெருநகரான மும்பையில் இருந்து மாப்பிளை தேர்வு செய்யப்பட்டார். திருமணம் நடந்து முடிந்தது. பெற்றோரை பிரிந்து தன் கணவனுடன் அந்த பெண் மும்பை புறப்பட்டார்.

அவர் மேற்கொண்ட பயணம் தன் வாழ்வில் 20 வருடங்களை வீட்டு சிறையில் அடைக்க காரணமாகும் என அப்போது அந்த பெண்ணுக்கு தெரியவில்லை.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

மும்பை சென்ற பிறகு தனக்கு தாலி கட்டிய நபர் ஏற்கனவே திருமணமானவர் என்ற உண்மை அந்த கோவா பெண்ணுக்கு தெரிய வந்தது. இதன் காரணத்தால் திருமண வாழ்க்கை குறுகிய காலக்கட்டத்திலேயே முடிவுக்கு வந்தது.

அபலைப் பெண்!

அபலைப் பெண்!

கணவரால் ஏமாற்றப்பட்ட அந்த அபலைப் பெண் பெற்றோருடன் வாழலாம் என முடிவு செய்து மும்பையில் இருந்து கோவா திரும்பினார்.

அந்த பெண் வாழ்வில் பேரதிர்ச்சியாக இருந்தது அந்த தருணம் தான். அவர் எதிர்பார்ப்பிற்கு மாறாக, வாழ்வில் அசம்பாவிதம் தான் அதிகமாக நடந்தது.

அரவணைப்பு?!

அரவணைப்பு?!

கணவனால் ஏமாற்றப்பட்ட மகளை எல்லா பெற்றோரும் அரவணைத்து தான் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், இந்த பெண்ணின் வாழ்வில் எதிர்மாறாக, வீடு திரும்பிய பெண் சுபாவம் மாறாக இருக்கிறது, விசித்திரமாக நடந்துக் கொள்கிறார் என ஒரு தனி அறையில் பூட்டி வைத்தனர்.

கூண்டுக் கிளி!

கூண்டுக் கிளி!

ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல... மொத்தமாக 20 ஆண்டுகள் அந்த பெண் வீட்டின் ஒரு அறையில் சிறைப்படுத்தப்பட்டு வெளியுலகம் காணாமல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கேட்டால், மனநலம் சரியில்லை என பெற்றோரே கூறியுள்ளனர்.

அக்கம், பக்கம்...

அக்கம், பக்கம்...

கடைசியில், வீட்டருகே வசித்து வந்த மக்கள் போலீஸில் புகார் அளித்து அவர் மீட்கப்பட்டார். இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருபது வருடங்கள் ஒரே அறையில் இருந்ததால் அவரது உடல் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

விசாரணை!

விசாரணை!

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. முதற்கட்ட விசாரணை மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பெற்றோர் மற்றும் உறவினர் மத்தியில் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

She Was Locked in Room for 20 Long Years!

She Was Locked in Room for 20 Long Years!
Subscribe Newsletter