For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் சனிக்கிழமை கடுகு எண்ணெயால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்?

ஏன் சனிக்கிழமை கடுகு எண்ணெயால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்வது நல்லது என இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Suganthi Rajalingam
|

ஏன் சனி பகவானுக்கு எண்ணெய் அபிஷேகம்? சனி கிரகத்திற்கு அதிபதியாக விளங்குபவர் தான் சனி பகவான். ஓன்பது கிரகங்களில் சனி கிரகமும் ஒன்று. இவையே நவ கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது. சனி பகவான் கழுகு, எருமை அல்லது காகத்தை தன்னுடைய வாகனமாக கொண்டு அமர்ந்திருப்பார். இவர் சூரிய பகவானுடைய மகனாக பிறந்தவர்.

ஒவ்வொரு வாரமும் வரும் சனிக்கிழமையில் இவர் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டு இவருடைய அருளை பெற மறக்க மாட்டார்கள். இந்த நாளில் வெள்ளம் போல் பக்தர்களின் கூட்டம் கோவில்களில் நிரம்பி வழியும்.

புனித வழிபாடு, மலர் அர்ச்சனை போன்றவற்றை மேற்கொள்வர். இவற்றையெல்லாம் விட சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஊற்றி வழிபடுவர். எதனால் இப்படி செய்கிறார்கள் என்று தெரியுமா. இதற்கான காரணம் சிறியது என்றாலும் இதற்கு பின்னாடி ராமாயணத்தில் இருக்கும் கதை அற்புதமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சனி பிறந்த கதை

சனி பிறந்த கதை

சனி பகவான் கடவுள் சூரிய பகவானுக்கும் அவரது நிழலாக இருந்த அவரது மனைவி சாயாவுக்கும் மகனாக பிறந்தார். அவரது நிழலருகிலே வைத்துக் கொண்டு தன்னுடைய கணவர் சூரிய பகவானையும், மூன்று மகன்களையும் காப்பாற்றினார். அவரது நிழல் மூன்று மகன்களை தந்தது. அவர்கள் சனி, மனு மற்றும் தப்தி ஆவர்.

சரி வாங்க ஏன் சனி பகவானுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர் என்பதை பற்றி பார்க்கலாம்

யார் பலசாலி?

யார் பலசாலி?

ராமனுடைய படை சீதையை மீட்டெடுக்க ஸ்ரீ அனுமானுடன் சேர்ந்து இலங்கைக்கு பாலம் அமைத்தனர். இந்த பாலத்தின் மூலம் எளிதாக இலங்கையை அடையலாம் என்று அவர்கள் எண்ணினர்.

அப்போது ஒரு நாள் அனுமான் ஸ்ரீ ராமனை நோக்கி வழிபட்டார். அப்பொழுது தீடீரென்று சனி பகவான் தோன்றி அனுமானை சண்டைக்கு அழைத்தார். நீ ரொம்ப பலசாலி வீர அனுமான் என்று எல்லாரும் கூறுகின்றனர் அப்போ என்னுடன் சண்டைக்கு வா யார் பலசாலி என்று பார்த்து விடலாம் என்று சனி பகவான் கூறினா

அனுமானின் பதில்

அனுமானின் பதில்

உடனே அனுமான் சனி பகவானிடன் ரெம்ப பணிவாக நான் ஸ்ரீ ராமனை தரிசிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். என் எண்ணத்தை சிதறடிக்காமல் நீங்கள் சென்றால் நல்லது என்று பதில் கூறினார்.

ஆனால் சனி பகவானோ அவர் கூறியதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் மறுபடியும் சண்டைக்கு வம்பிழுத்தார். இதனால் கோபமடைந்த அனுமான் தன்னுடைய வாலால் சனி பகவானை இறுக்க கட்டி சிறை வைத்து விட்டார். சனி பகவான் எப்படி முயன்றும் அவரால் அனுமானின் பிடியிலிருந்து வெளி வர முடியவில்லை.

சனி பகவான் காயமடைதல்

சனி பகவான் காயமடைதல்

அனுமான் தன்னுடைய வாலை நெறுக்கி பிடிக்க பிடிக்க தாங்க முடியாமல் சனி பகவான் பலத்த காயமடைந்தார். அவருக்கு இரத்தம் வழிந்தோடியது.

சனி பகவான் அனுமானின் கோபத்தை பார்த்த பிறகு தன் தவறை நினைத்து அவரிடம் மன்னிப்பு கேட்டார். அனுமானும் அவரை மன்னித்து தன்னுடைய பிடியிலிருந்து விடுதலை செய்தார். இனிமே எக்காரணத்தை கொண்டும் ராமர் பக்தர்கள் மற்றும் அனுமான் பக்தர்களுக்கு எந்த வித இடையூறும் செய்யமாட்டேன் என்று உறுதியளித்தார்.

காயத்திற்கு மருந்து

காயத்திற்கு மருந்து

சனி பகவான் அனுமானின் பிடியிலிருந்து வந்த பிறகு தன்னுடைய காயத்திற்கு மருந்து தரும் படி கேட்டார். அதன் படி கடுகு எண்ணெய் உன் வலிக்கு மருந்தாக அமையும் என்று அனுமான் கூறி வழங்கினார்.

இப்படி தான் வந்தது கடுகு எண்ணெய் அபிஷேகம்

எனவே தான் கடுகு எண்ணெய் கொண்டு சனி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் அப்படி செய்வதால் நம்முடைய பிரச்சினைகள், கஷ்டங்கள், வலிகள் எல்லாம் காணாமல் போய்விடும் என்ற நம்பிக்கையும் பக்தர்களுக்கிடையே உள்ளது.

 சனி பகவான் ஆசியை பெறுதல்

சனி பகவான் ஆசியை பெறுதல்

சனி பகவானின் உக்கிர பார்வையிலிருந்து தப்பிக்க அவருக்கு கடுகு எண்ணெய் அபிஷேகம் செய்யும் போது சங்கடங்கள் தீர்த்து அருள் புரிவார்.

சமூக அக்கறை

மேஷம் சனி பகவான் ஏழைகளின் கடவுளாக உள்ளவர். எனவே சனிக்கிழமைகளில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணெய் மற்றும் புதிய ஆடை கொடுப்பதன் மூலம் அவரின் அருள் கிடைக்கும்.

 அனுமான் வழிபாடு

அனுமான் வழிபாடு

மேஷம் சனி பகவான் ஏழைகளின் கடவுளாக உள்ளவர். எனவே சனிக்கிழமைகளில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணெய் மற்றும் புதிய ஆடை கொடுப்பதன் மூலம் அவரின் அருள் கிடைக்கும்.

ஆல்கஹால் தவிருங்கள்

மேலும் சனியின் நன்மை பார்வை எப்போதும் உங்களுக்கு கிடைக்க ஆல்கஹால், புகையிலை மற்றும் சிகரெட் பழக்கத்தை கைவிடுவது நல்லது.

நேர்மை

சனி பகவான் கண்டிப்பாக பக்தர்களின் நேர்மை மற்றும் உண்மை நடவடிக்கையை கொண்டே அவர்களுக்கு அருள் பொழிவார். இந்த நடவடிக்கையே உங்களுக்கு வெற்றி, நல்ல உடல் நலம் மற்றும் வசதியை பெற்றுத் தரும்.

அனுமான் வழிபாடு

சனி பகவானை சந்தோஷப் படுத்த அனுமானை வழிபடுவது மற்றொரு வழியாகும். ஏனெனில் அனுமான் சனி பகவானை கொடூர ராவணனிடம் இருந்து காப்பாற்றினார். அதற்கு பரிகாரமாக அனுமானை வழிபடும் பக்தர்களின் கஷ்டத்தை தான் நிவர்த்தி செய்வதாக ஒப்புக் கொண்டார். எனவே தான் அனுமான் பக்தர்களுக்கு சனி பகவான் நன்மை அளிப்பார்.

என்னங்க சனி பகவானுக்கு அபிஷேகம் செய்யும் கடுகு எண்ணெய் பற்றிய கதையை தெரிந்து கொண்டோ ம் அல்லவா. நாமும் மனதார கடுகு எண்ணெய் அபிஷேகம் செய்து சனி பகவானின் ஆசியையும், அருளையும் பெறலாமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons why people offer mustard oil to shani bagavan on Saturdays

Reasons why people offer mustard oil to shani bagavan on Saturdays
Story first published: Saturday, October 7, 2017, 12:34 [IST]
Desktop Bottom Promotion