For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் ஏன் அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறார்கள் தெரியுமா?

பெண்கள் எப்போதும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட உணர்சிவசப்படுபவராக இருக்கிறார்கள். இதற்கான காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

|

ஆண்களை விட பெண்கள் எப்போதும் கொஞ்சம் எமோசனலான ஆட்களாக இருப்பார்கள். அதனை வெளிப்படுத்துவதிலும் பெண்களுக்கு தான் முதலிடம். சட்டென ரியாக்ட் செய்வதும், அவர்களுக்கு கைவந்த கலை. எளிதாக உணர்சிவசப்பட்ட அழுதிடும் பெண்களை அவர்களது இந்த எமோஷனல் ரியாக்‌ஷன்களுக்கு என்ன காரணம் என்று யோசித்திருக்கிறோமா?

பெண்கள் தாங்கள் சந்திக்கும் எமோஷன்களை கையாளத்தெரியாமல் தன் இயல்பிலிருந்து சட்டென மாறுவதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வளர்ப்பு முறை :

வளர்ப்பு முறை :

நம் குடும்பங்களில் வளர்க்கப்படும் குழந்தைகள் ஆண், பெண் என்ற வேறுபாடுகளை காட்டி வளர்ப்பது இதில் முக்கிய பங்காற்றுகிறது, சிறுவயதிலிருந்து மனதில் தோன்றும் விஷயங்களை பயமில்லாமல் வெளியில் சொல்லலாம் என்ற எண்ணம் பெண்களுக்கு ஏற்படுவதில்லை.

அதே போல இன்னொருவரை சார்ந்த வளர்க்கப்படும் பெண்கள், அவர் இல்லை அல்லது அவர் தன்னை விட்டு போகப்போகிறார் என்று யூகிக்கும் போதே அதனை அறிவுப்பூர்வமாக அணுக முடியாமல் தவிக்கிறார்.

ஹார்மோன் :

ஹார்மோன் :

மிக முக்கிய காரணங்களில் ஒன்று இது. மாதவிடாய் காலங்களில் இயற்கையாகவே பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்ந்திடும்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகப்படியாக சுரக்கும். இதனால் எரிச்சல்படுவதும், கோபமாக இருப்பதும், மன அழுத்தம் ஏற்படுவதும் உண்டு.

பாதுகாப்பின்மை :

பாதுகாப்பின்மை :

சமூகத்தின் அழுத்தம் காரணமாக பெண்கள் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க நினைக்கிறார்கள். பிறரது அங்கீகாரம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் எப்போதும் ஆர்வத்துடன் இருப்பார்கள். தங்களை அழகுப்படுத்திக் கொள்வதும் இதில் ஓர் அம்சம் தான்.

பிறரைச் சார்ந்தே வாழ பழக்கப்படுத்திய பெண்களுக்கு தன்னால் முடியும் தனியாக சமாளிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை இருக்காது. எப்போதும் பாதுகாப்பில்லாமல் உணர்வதாலும் பெண்கள் எமோஷனலாக இருக்கிறார்கள்.

நண்பர் கூட்டம்

நண்பர் கூட்டம்

ஆண்களுக்கு நண்பர்கள் வட்டம் அதிகம். இக்கட்டான சூழ்நிலை வரும் போது உதவிக்கு யாரை அழைக்க வேண்டும் எப்படி அணுக வேண்டும் போன்றவையெல்லாம் தெரிந்திருக்கும், ஆனல பெண்களுக்கு அப்படியல்ல அவர்களை களத்தில் விட்டால் தானே.

எங்கே ஏமாந்துவிடுவார்களோ ஏமாற்றப்பட்டு விடுவார்களோ என்று பயந்து எச்சரிக்கை செய்கிறேன் என, அவர்களை யாரையும் நம்ப விடாமல் நண்பர்கள் கூட்டத்தையும் சேர்க்கவிடாமல் செய்ததும் ஓர் காரணம்.

பெண்களின் அனுதாபம் :

பெண்களின் அனுதாபம் :

பெண்கள் என்றாலே வீட்டை குழந்தைகளை பராமரிப்பவர், அக்கறையாக இருப்பவர் போன்ற பிம்பங்களுடன் சேர்த்து தாய்மை என்ற மிகப்பெரிய பொறுப்பு பிம்பத்தையும் சுமத்தப்படுகிறது.

சமையல், வீட்டு வேலை,கணவன்,குழந்தைகள் இது தான் உலகம் என்று கற்றுத்தரப்படுகிறது அவர்களுக்காகவே தான் நீ என்று ஓர் பெண்ணுடைய உலகமே சுருக்கப்படுகிறது. இதை விட்டு வெளியே வர முடியாமல் உள்ளேயும் இருந்து சமாளிக்க முடியாமல் தவிப்பதும் ஓர் காரணம்.

சமூகம் :

சமூகம் :

பெண்கள் உணர்சிப்படுவதை இந்த சமூகம் அங்கீகரிக்கிறது. பெண்கள் அழுவதை அல்லது உணர்சிவசப்படுவது என்பது அவர்களுக்கு சாதராண விஷயமாக அணுகுகிறார்கள்.

பெண்ணென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பிம்பமும் ஏற்படுத்தி வைத்திருப்பதால் பெண்களும் இதுவே வழி என்று நினைத்து விடுகிறார்கள்.

அணுகுமுறை :

அணுகுமுறை :

ஒரு பிரச்சனையை அணுகும் விதமும் அதனை தீர்க்கப்போவதை நினைத்து பயமும் ஓர் காரணம். தன்னால் சமாளிக்க முடியாவில்லையெனில் என்று தோன்றுகிற பயம் பெண்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.

பெண்கள் நாடகமாடுகிறார்கள், பிறரின் கவனத்தை ஈர்க்க இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என அவர்களின் உணர்சிகளை புறம்பேசுவதற்கு முன்னால் அதற்கு நீங்களும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life
English summary

Reasons here why Women are emotional

Reasons here why Women are emotional
Story first published: Wednesday, August 16, 2017, 11:38 [IST]
Desktop Bottom Promotion