15 வயதில் கற்பழிக்கப்பட்டு, பாலியல் தொழிலில் தந்திரமாக தள்ளப்பட்ட நீலூ - நான் கடந்து வந்த பாதை #8

Posted By:
Subscribe to Boldsky

நமது வாழ்வில் நாம் காணும் சின்ன, சின்ன சறுக்கல், தோல்விகளை கண்டு, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தடுமாறும் நம்மில் பலருக்கு நீலூ தன் வாழ்வில் கடந்து வந்த பாதை நிச்சயமாக நம்பிக்கையும், தைரியம் அளிக்கும்.

Pushed into Prostitution and Raped At 15, This Young Woman’s Life Is A Story Of Hope & Courage

Image Courtesy

Humans of Bombay என்ற ஃபேஸ் புக் பக்கத்தில் நீலூ பகிர்ந்து கொண்ட கதை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாய்மை!

தாய்மை!

எல்லா பெண்களும் புனிதமாக கருதும் தாய்மை நிலையை நீலூ மிக கொடூரமான வகையில் அடைந்தார். யூனிபார்ம் அணிந்த ஒரு நபரின் வலுக்கட்டாயத்தினால் நீலூவின் உலகம் 15 வயதிலேயே முற்றிலுமாக மாறி போனது.

தப்பி ஓட்டம்!

தப்பி ஓட்டம்!

அவன் தப்பிவிட்டான். ஆனால், நீலூ 15 வயதில் இளம் தாயாகி நிர்கதியாய் நின்றாள் நீலூ அவளை மட்டுமின்றி, தனது மகளையும் காக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டாள்.

பிச்சை!

பிச்சை!

"தான் அவனால் கருவுற்று இருப்பதை அறிந்த போதே அவன் தப்பி ஓடிவிட்டான். நான் என்ன செய்வது என்று தெரியாமல். ஆரம்பத்தில் கோவிலில் தங்க ஆரம்பித்தேன். அப்போது கோவிலுக்கு அடிக்கடி வரும் நபர் வீட்டு வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றார்."

ஏமாற்றம்!

ஏமாற்றம்!

அந்த நபரை நம்பி நீலூ புனே சென்றார்...

"ஆனால், அந்த நபர் என்னை விபச்சாரத்திற்கு ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டார். முதல் ஐந்து மாதங்கள் நான் எதற்கும் ஒத்துழைக்காமல் இருந்தேன். நான் எத்தனை அழுதும், கெஞ்சியும் கூட அங்கு இருந்தவர்கள் என்னை விடுவிக்கவில்லை."

மகளுக்காக...

மகளுக்காக...

"ஆனால், எனது மகளை வளர்க்க வேண்டும், அவளுக்கு உணவளிக்க வேண்டும் என்றால் நான் இந்த வேலையை தவிர வேறு எதையும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்தேன். பிறகு, அவளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதால் ஒத்துழைக்க ஆரம்பித்தேன்."

துன்பங்கள்!

துன்பங்கள்!

"நான் ஒத்துழைக்காத காலக்கட்டத்தில் தடிகள் கொண்டு என்னை வலுவாக தாக்கி துன்புறுத்தினர். என்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அடைத்தனர். மகளுக்கு உணவளிக்க மாதாமாதம் நான்காயிரம் ரூபாய் தேவைப்பட்டது."

எச்.ஐ.வி!

எச்.ஐ.வி!

"இந்த காலக்கட்டத்திலேயே நான் டி.பி மற்றும் எச்.ஐ.வி நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தேன். புரோக்கர்கள் மற்றும் குடிமகன்களால் பெரிதும் பாதிக்கப்பட்டேன். அவர்களிடம் இருந்து அனுதினம் போராட வேண்டியிருந்தது."

விடிவுகாலம்!

Purnata எனும் அரசு சாரா உதவி நிறுவனம் மூலமாக நீலூவின் வாழ்வில் விடிவுகாலம் பிறந்தது. இப்போது நீலுவின் மகள் ஹாஸ்டலில் வசித்து வருகிறார்.

யாரோ செய்யும் தவறுக்கு, யாரோ ஒருவர் பாதிக்கப்படுகிறார். யாரோ ஒருவரது பேராசைக்கு யாரோ ஒருவர் பலியாகிறார். பல இன்னல்களை கடந்து வந்திருக்கும் நீலூவின் வாழ்க்கை இனிமேலாவது இனிமையாக அமையட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pushed into Prostitution and Raped At 15, This Young Woman’s Life Is A Story Of Hope & Courage

Pushed into Prostitution and Raped At 15, This Young Woman’s Life Is A Story Of Hope & Courage
Please Wait while comments are loading...
Subscribe Newsletter