For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பள்ளி தேர்வில் தோல்வி அடைந்த பிறகு, தங்கள் கனவுகளை எட்டி பிடித்த 9 இந்திய பிரபலங்கள்!

தோல்வியே வெற்றியின் முதல் படி, இதற்கு உதரணமாக திகழும் ஒன்பது இந்தியர்கள்.

|

பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தான் ஒருவரது வாழ்க்கை வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா? என தீர்மானிப்பதாக இருந்தால், இந்த உலகில் ஒரு சில லட்சங்களுக்கு மேல் மக்கள் தொகையே இருந்திருக்காது.

பள்ளி கல்வி மட்டுமே ஒரு மனிதனை வெற்றியாளனாக மாற்றி விடுவதில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என அவர்களை பேட்டி கண்ட ஊடகங்களுக்கு கூட தெரியாது.

இதோ! பள்ளி தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும், வாழ்க்கையில் வெற்றிகரமாக பயணித்து காட்டி இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழும் இந்தியர்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பி சி முஸ்தபா!

பி சி முஸ்தபா!

படிப்பறிவற்ற கேரளாவின் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் பி சி முஸ்தபா. இவர் ஆறாவது தேர்விலேயே தோல்வியுற்றவர். இதன் பிறகு இவர் விவசாய வேலைகள் செய்திருக்கிறார். ஆயினும், படிப்பை கைவிட்டுவிடக் கூடாது என மீண்டும் முயற்சி செய்தார்.

கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் இவர் படித்தார். இப்போது 62 கோடி ரூபாய் வருமானம் செய்து வரும் உணவு தயாரிப்பு நிறுவனத்தின் தலைவாரக இருக்கிறார்.

Image Source

அக்ஷய் குமார்!

அக்ஷய் குமார்!

உலகம் அறிந்த நடிகர். தனது நடிப்பாற்றலுக்காக தேசிய விருது வென்றவர். ஆனால், இவர் தனது பள்ளி தேர்வில் தோல்வி அடைந்தவர்.

சமீபத்தில் கூட இவர் தனது வாழ்வில் கண்ட தோல்விகள் குறித்தும், அதன் பிறகு தனது கனவுகளை எப்படி எட்டிப்பிடித்தார் என்பது பற்றியும் விவரமாக கூறியிருந்தார்.

விர் தாஸ்!

விர் தாஸ்!

இந்தியாவின் தலை சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர் விர் தாஸ். நெட்ஃபிளிக்ஸ்-ல் தனது சொந்த நிகழ்சிகளை நடத்தி வருகிறார். ஆனால், பள்ளியில் படிக்கும் போது இவர் மிகவும் குறைந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்.

இவர் ஒருமுறை முகநூலில் தான் வாங்கிய மதிப்பெண் பட்டியலை பகிர்ந்திருந்தார். மேலும், அதில்.. மாணவர்களே, ஒருவரின் குணத்தை, வாழ்க்கையை இந்த மதிப்பெண்கள் மட்டும் முடிவு செய்துவிட முடியாது என்றும் ஊக்கம் அளிக்கும் வகையில் பேசி இருந்தார்.

சந்தீப் மகேஸ்வரி!

சந்தீப் மகேஸ்வரி!

இந்தியாவின் பெரிய தொழில் முனைவோர்களில் ஒருவர் சந்தீப். இவர் கல்லூரியில் இருந்து பாதியிலேயே வெளியேறியவர். இவர் பிறகு ஃப்ரீலான்சர் புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார். பிறகு இமேஜ் பசார் என்ற இந்திய புகைப்படங்கள் விற்கும் இணையதளத்தை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

பிஸ்வா கல்யாண் ராத்!

பிஸ்வா கல்யாண் ராத்!

பிஸ்வா கல்யான் ராத் என்பவர் இந்தியாவை சேர்ந்த யூடியூப் விளாகர் (Vlogger). இவர் பல வைரல் வீடியோக்களை தயாரித்து பதிவு செய்துள்ளவர்.படித்து முடித்து வேலை கிடைக்காமல் திண்டாடிய இவர் பதட்டம் கொண்டு, எட்டு கிலோ உடல் எடை குறைந்து ஓரிரு ஆண்டுகள் தவித்துக் கொண்டிருந்தவர் தான். ஆனால், இப்போது இந்தியாவிற்கு தெரியும் அளவு பிரபலம் அடைந்துள்ளார்.

கைலாஷ் கட்கர்!

கைலாஷ் கட்கர்!

கைலாஷ் கட்கர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தில் தான். குடும்ப சூழலால் பத்தாவது படித்து முடிக்க முடியாமல் பள்ளியை விட்டு வெளியேறிவர். இதனால் நல்ல வேலை கிடைக்கவில்லை. கேஜெட்டுகள் கொண்டு வேலை செய்ய ஆர்வம் இருந்த இவர், சிறிய ரேடியோ, கால்குலேட்டர் சரி செய்யும் கடையை நடத்தி வந்தார்.

பிறகு மெல்ல, மெல்ல கம்ப்யூட்டர் கற்றார், தானே தனது சொந்த சிந்தனை மற்றும் கற்பனை வளர்த்து தொழில்நுட்பத்தில் புதுமைகள் புகுத்தினார். இப்போது இவர் 200 கோடி வர்த்தகம் செய்து வரும் கியூக் ஹில் டெக்னாலஜியின் நிறுவனர். ஆன்டி வைரஸ் மென்பொருள் தயாரித்து வருகிறார்கள்.

பிரேம் கணபதி!

பிரேம் கணபதி!

இந்திய தொழில் முனைவர், தொழில் அதிபர் பிரேம் கணபதி. தோசா பிளாசாவின் உரிமையாளர். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். இவரது வீட்டில் மொத்தம் இவரையும் சேர்த்து ஏழு பேர்.

பத்தாவது மட்டுமே முடித்த கையேடு இவர் தனது கனவுகளை அடைய மும்பை சென்றுவிட்டார். அங்கு ஒரு தமிழரின் உதவியால் சிறிய பேக்கரியில் வேலை பெற்றார். இரண்டே ஆண்டுகளில் சிறிய தோசை தொழிலில் இறங்கினார். இப்போது இது நியூசிலாந்து, ஓமன், அரபி நாடுகளில் பறந்து விரிந்து பெரிய நிறுவனமாக மாறி நிற்கிறது.

சுபாஷ் சந்திர!

சுபாஷ் சந்திர!

ஊடகத்துறையில் சக்திவாய்ந்த நபராக திகழ்பவர் சுபாஷ். இவர் ஹரியானாவில் ஹிசார் எனும் கிராமத்தில் பிறந்தவர். இப்போது Zee தொலைக்காட்சி நிறுவனராக மட்டுமின்றி பல தொழில் செய்து வெற்றி பெற்றவாரக திகழ்ந்து வருகிறார்.

கல்பனா சரோஜ்!

கல்பனா சரோஜ்!

கல்பனா மகாராஷ்டிராவில் பிறந்தவர். 12 வயதிலேயே பெற்றோர்களால் குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டவர். இவரது கணவர் மற்றும் அவரது வீட்டார்களால் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானவர். தற்கொலை செய்துக் கொள்ளவும் முயன்றவர்.

பிறகு, அரசிடம் இருந்து நிதியுதவி பெற்று, தையல் தொழில் ஆரம்பித்து, அதில் வெற்றிக் கண்டு ஃபர்னீச்சர் தொழில் துவங்கி... படிப்படியாக முன்னேறி... நஷ்டத்தில் ஓடிய கம்பெனிகளை எல்லாம் வெற்றிகரமாக மாற்றி காட்டிய திறன் பெற்றவராக திகழ்ந்து வருகிறார் கல்பனா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Failure is the Stepping Stone to Success: And Look at These Nine Living Examples!

Failure is the Stepping Stone to Success: And Look at These Nine Living Examples!
Story first published: Monday, May 29, 2017, 12:52 [IST]
Desktop Bottom Promotion