ஃபேஸ்புக் லைவில் தற்கொலை: 19-வது மாடியில் இருந்து குதித்து மும்பை மாணவர் மரணம்!

Posted By:
Subscribe to Boldsky

தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன என்பது கடந்து, ஃபேஸ்புக் லைவில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன என கூறும்படியான சூழல் உருவாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக தான் இருக்கிறார்கள்.

Mumbaiwala Arjun Bharadwaj Killed Himself and Streamed it on Facebook Live!

நேற்று மும்பையை சேர்ந்த அர்ஜுன் என்ற இளைஞர் இதே போன்று ஃபேஸ்புக் லைவில் தனது தற்கொலை முயற்சியை ஒளிப்பரப்பு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அர்ஜுன் பரத்வாஜ்!

அர்ஜுன் பரத்வாஜ்!

அர்ஜுன் பரத்வாஜ் மூன்றாம் ஆண்டு பி.காம் பயின்று வந்த மாணவர். இவர் நர்சீ மோந்ஜி வர்த்தக மற்றும் பொருளியல் கல்லூரியில் படித்து வந்தவர் ஆவர்.

மன அழுத்தம்!

மன அழுத்தம்!

மன அழுத்தம் காரணமாக இவர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இவர் கல்லூரியிலும், இவரது மரணத்திற்கு மன அழுத்தம் தான் காரணம் என கூறியுள்ளனர்.

தாஜ் ஹோட்டல்!

தாஜ் ஹோட்டல்!

23 வயதே ஆன அர்ஜுன் மும்பையில் உள்ள தாஜ் லேன்ட் என்ட்ஸ் எனும் ஹோட்டலின் 19-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை முகநூலிலும் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அர்ஜுன்.

ஃபேஸ்புக் லைவ்!

ஃபேஸ்புக் லைவ்!

தற்கொலை செய்துக் கொள்ளும் முன் தான் மது அருந்துவது உள்ளிட்டவை அடங்கிய அந்த காணொளிப்பதிவு ஃபேஸ் லைவில் பதிவேற்றம் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காணொளிப்பதிவு அர்ஜுனின் டைம்லைனில் இருந்து ஃபேஸ்புக் நீக்கிவிட்டது.

தற்கொலை!

தற்கொலை செய்து கொள்வது பற்றி பேசிக் கொண்டிருந்த அர்ஜுன். கடைசியாக சாகும் முன் தான் கண்ட காட்சி என ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

மும்பை போலீஸ் ட்விட்டர் பதிவு!

இது குறித்து மும்பை போலீஸ் ட்விட்டரில் செய்த பதிவு....

ஏன்? எதனால்?

ஏன்? எதனால்?

தற்போதைய இளைஞர் மத்தியில் எளிதாக மன அழுத்தம் அதிகரித்துவிடுகிறது. வாழ்க்கையில் போராட இவர்கள் தோற்கிறார்களா? அல்லது தோல்வியை தாங்கிக்கொள்ளும் வலிமையின்றி இருக்கிறார்களா? என தெரியவில்லை.

அதிகரிக்கும் தற்கொலைகள்!

அதிகரிக்கும் தற்கொலைகள்!

கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் உலகம் முழுக்க பல இளைஞர்கள் மன அழுத்தம் காரணமாக ஃபேஸ்புக் லைவ் செய்து தங்கள் தற்கொலையை ஒளிப்பரப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காணொளிப்பதிவு!

19-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்வதை ஃபேஸ்புக் லைவில் ஒளிப்பரப்பிய மும்பை இளைஞர் - காணொளிப்பதிவு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mumbaiwala Arjun Bharadwaj Killed Himself and Streamed it on Facebook Live!

Mumbaiwala Arjun Bharadwaj Killed Himself and Streamed it on Facebook Live!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter