பெண்கள் வாழவே முடியாத மிகுந்த சிரமமான இடங்கள் இவை !

Posted By:
Subscribe to Boldsky

உலகின் பல பகுதிகள் பெண்கள் மிகவும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் பார்ப்பது,கேள்விப்படுவது எல்லாம் அவற்றில் சிலவற்றை மட்டும் தான். இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் சிரமங்களை எல்லாம் நினைத்தாலே மலைப்பாக இருக்கிறதல்லவா?

இதைவிட பெண்கள் அதிக சிரமங்களை அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேபாளம் :

நேபாளம் :

குழந்தை பிறப்பு என்பது பெண்கள் மரணத்தின் விளிம்பிற்கே சென்று திரும்பும் விஷயம் என்று சொல்லலாம். பிரசவத்தின் போது பெண்களுக்கு பலவகையான கம்ஃபர்ட் ஜோன்களை நாம் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்போம். அதை வைத்தே பணம் பறிக்கும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் நேபாளில் இதை வைத்து பணம் பறிப்பது எல்லாம் சாத்தியமாகாது. ஏன் தெரியுமா? அங்கே பிரசவத்திற்கு மருத்துவமனைக்குச் செல்வதையே பாவமாக பார்க்கிறார்கள். அங்கே 24ல் 1 பெண் குழந்தை பிறப்பின் போது இறந்து போகிறாராம்.

அங்கே இன்னமும் குழந்தைத் திருமணம் நடைமுறையில் இருக்கிறது. அப்படி உரிய நேரத்தில் திருமணம் ஆகவில்லையெனில் குழந்தை விற்கப்படுகிறது.

Image Courtesy

சூடான் :

சூடான் :

உலகிலேயே பெண்களுக்கு எதிராக அதிக வன்முறை நடக்கிற நாடு இது. அங்கே மனைவியை கொடுமைப்படுத்தினால் எந்த சட்டமும் கேள்வி கேட்க முடியாது. அதற்கு எதிரான ஒரு சட்டமும் கிடையாது.

இந்த நாட்டில் பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

Image Courtesy

மாலி :

மாலி :

உலகிலேயே மிகவும் ஏழ்மையான நாடு இது. அவர்களின் அன்றாட வாழ்க்கையே மிகவும் சிரமமானதாக இருக்கிறது. இங்கே பெரும்பாலான பெண்கள் சத்துக்குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இங்கேயிருக்கும் 71 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் 18 வயதிற்கு முன்னதாகவே திருமணம் செய்து கொள்கிறார்கள். இங்கிருக்கும் 25 சதவீத பெண்கள் மட்டுமே எழுதப்படிக்க தெரிந்தவர்கள்.

Image Courtesy

காங்கோ :

காங்கோ :

எந்நேரத்தில் போர் நிகழலாம் என்ற அச்ச சூழ்நிலையில் பயத்தில் வாழ்கிறார்கள் இவர்கள். உலக சுகாதார மையம் கொடுத்த அறிக்கையின் படி, அங்கே இரண்டு லட்ச ரேப் கேஸ்கள் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கிறது. அங்கு நடைபெறும் பாலியல் குற்றங்களில் பாதி மட்டுமே தான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் பல பெண்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள்.

Image Courtesy

ஆஃப்கானிஸ்தான் :

ஆஃப்கானிஸ்தான் :

மிகக் குறைந்த வயதிலேயே இறந்து விடும் மனிதர்கள் இவர்கள். பெண்களின் சராசரி வாழ்நாள் 45 ஆண்கள் மட்டுமே. இங்கே 17 சதவீத பெண்கள் மட்டுமே படித்திருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் கிட்டத்தட்ட 85 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள்.

Image Courtesy

சிரியா :

சிரியா :

ஐ எஸ். ஐ எஸ் படையினரால் இங்கே பலரும் உயிருக்கு பயந்து கொண்டு தான் வாழ்கிறார்கள். இங்கே 14 சதவீத பெண்கள் மட்டுமே பணிக்குச் செல்கிறார்கள். ஐ எஸ்.ஐ எஸ் விதித்த விதிகளின் படி 7 முதல் 15 வயது வரை மட்டுமே பெண்கள் கல்வி கற்க முடியும்.

அதை விட மிகக் கொடுமையாக ஒன்பது அல்லது பத்து வயதுடைய சிறுமிகள் எல்லாம் ஐ எஸ். ஐ எஸ் உறுப்பினர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம்

Image Courtesy

இந்தியா :

இந்தியா :

இந்தியாவில் 39 சதவீத மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒருமுறை பெண்ணுக்கு எதிரான வன்முறை நடக்கிறதாம்.

அதே போல ஒவ்வொரு 29 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பெண் மானபங்கப்படுத்தப்படுகிறார். ஒவ்வொரு 77 நிமிடங்களுக்கு ஒருமுறை பெண்ணொருவர் வரதட்சணை கொடுமையினால் கொல்லப்படுகிறார்.

இங்கேயும் 44 சதவீத பெண்கள் வரை 18 வயதிற்கு முன்னதாகவே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள்.

Image Courtesy

ஏமன் :

ஏமன் :

இங்கே ஆண்களை விட பெண்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானதாக இருக்கிறது. இங்கே கணவனின் அனுமதியின்றி மனைவி வெளியே வரக்கூடாது. இங்கே 52 சதவீத பெண்கள் மிகவும் இளவயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

Image Courtesy

பாகிஸ்தான் :

பாகிஸ்தான் :

இங்கே ஆண்கள் வாங்கிடும் சம்பளத்தை விட 82 சதவீதம் குறைவான சம்பளம் தான் பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது. கணவரின் சொல்படியே நடக்க வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Miserable places where women face many problems

Miserable places where women face many problems
Story first published: Tuesday, October 3, 2017, 11:44 [IST]