For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உளவு பார்த்ததற்காக தூக்கிலிடப்பட்ட கவர்ச்சி நடன மாது - வரலாற்று பக்கங்கள்!

உளவு பார்த்ததற்காக தூக்கிலிடப்பட்ட கவர்ச்சி நடன மாது - வரலாற்று பக்கங்கள்!

|

இன்றைய உளவாளிகள் கருப்பு கண்ணாடி, கருப்பு சூட் அணிந்து ஹைடெக் அளவில் உலவி வருவார்கள். பெரும்பாலும் இன்றிய உளவாளிகள் ஆண்களாகவே இருக்கிறார்கள்.

ஆனால், அன்று அப்படி இல்லை. கவர்ச்சியை தான் உளவு பணி செய்ய சிறந்த கருவியாக கருதியுள்ளனர். இது பண்டையக் கால போர்களில் இருந்து உலகப் போர் வரையிலும் நீடித்துள்ளது.

அரச இரகசியங்கள், போர் இரகசியங்கள் அறிந்துக் கொள்ள கவர்ச்சி மாதுவை அனுப்பி வைத்து, அவர்கள் மூலம் கலவி உறவாடி தகவல் திரட்டியுள்ளனர் அந்நாளின் அரசியல் ராஜ அதிகாரிகள்.

இந்த மாடர்ன் உளவாளிகளுக்கும், ஓல்டன் உளவாளிகளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை மரணம் தான். இன்று சிக்குபவர்களுக்கும் மரணம் தான் தண்டனை. அன்று சிக்கியவர்களுக்கும் மரணம் தான் தண்டனை.

மரணம் என்றால் எளிதாக அல்ல, மற்ற உளவாளிகளுக்கு அச்சமூட்டும் வகையில் கொடூரமான வகையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

அப்படி ஜெர்மன் நாட்டுக்கு உளவாளியாக இருந்து முதலாம் உலக போரின் போது பிரெஞ்சு காரர்களிடம் சிக்கி மரண தண்டனை பெற்ற நடன மாது தான் இவர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்கரெட்டா ஜெல்லே!

மார்கரெட்டா ஜெல்லே!

மதா ஹேரி என பரவலாக அறியப்பட்ட இந்த கவர்ச்சி நடன பெண்ணின் உண்மை பெயர் மார்கரெட்டா ஜெல்லே. 1900களில் வெளியான சில போட்டோ கார்டுகளை வைத்து பார்க்கும் போது மதா ஹேரி அக்காலத்தில் ஓர் உலகளாவிய புகழ்பெற்ற கவர்ச்சி நடன பெண்ணாக இருந்திருக்க கூடுமோ என கருத வைக்கிறது.

தூக்கிலிடப்பட்டார்...

தூக்கிலிடப்பட்டார்...

ஜெர்மன் உளவாளியாக இருந்துக் கொண்டு முதலாம் உலக போரின் போது பிரெஞ்சு காரர்களை உளவு பார்த்த காரணத்திற்காக மதா ஹேரியை தூக்கிலிட்டு கொன்றனர் என தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

வைரல்

வைரல்

ஏறத்தாழ மதா ஹேரி இறந்து நூறாண்டுகளுக்கு மேலான பிறகு அவரது புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படங்களில் மதா ஹேரியின் வளைவு, நெளிவுகள் கொண்ட டான்ஸ் ஸ்டெப்களில் போஸ் கொடுத்திருப்பது போல இருக்கிறது.

கோவில் நடனம்!

கோவில் நடனம்!

இந்த படங்கள் பாரிஸில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதா ஹேரி ஆசியாவின் கோவில், தேவ ஆலயங்களில் ஆடப்படும் உணர்வு ரீதியான நடனம் கற்றவர் என்றும் கூறப்படுகிறது.

கண்டனம்!

கண்டனம்!

முதலாம் உலக போரில் மதா ஹேரி உளவு பார்த்த காரணத்தால் ஆயிரக்கணக்கான பிரெஞ்சு வீரர்கள் உயிரிழந்தனர். இதற்காக அவர்கள் மதா ஹேரியை எதிர்த்து பெரும் கண்டனம் நிறைவேற்றினார்கள்.

8 வயதில்...

8 வயதில்...

மதா ஹேரியின் 18 வயதில், இவரது தாய் இறந்த பிறகு, இவரது தந்தையும் உடைந்து போனார். பிறகு ஒரு நாள், இராணுவ வீரர் ஒரு திருமணத்திற்கு பெண் வேண்டி செய்திருந்த விளம்பரத்தை கண்டு மதா ஹேரி அதற்கு விண்ணப்பித்தார்.

திருமணம்!

திருமணம்!

அந்த இராணுவ வீரரையே மணந்தார். அந்த இராணுவ வீரர் மதா ஹேரி கொடுமைப்படுத்தினார். தவறான உறவில் ஈடுபட்டு வந்தார், மற்ற பெண்களுடன் தகாத உறவில் இணைந்து வந்தார். இத்தனைக்கும் நடுவில் அவருடன் இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்தார் மதா ஹேரி.

பிரிவு!

பிரிவு!

மதா ஹேரியின் மகன் உயிரிழந்தார். மகளை மதா ஹேரியுடன் இருந்து பிரித்தார் அந்த கொடுமை கார இராணுவ வீரர். கணவன் - மனைவி பிரிந்தனர். பிரிவுக்கு பிறகு பாரிஸ் சென்றுவிட்டார் மதா ஹேரி. அங்கே தான் தியேட்டர்களில் தான் கற்ற நடனத்தை அரங்கேற்றம் செய்ய துவங்கினார் இவர்.

நிலைமை மாறியது!

நிலைமை மாறியது!

ஆரம்பத்தில் தவிர்த்த போதும், சில நாட்களிலேயே மதா ஹேரிகவர்ச்சி நடன மாதுவாக மாறினார். நடனம் ஆடிக் கொண்டே தான் உடுத்தியிருக்கும் உடை மற்றும் நகைகளை அவிழ்த்து எறியும் ஸ்ட்ரிப் நடன வகையில் நடனமாட துவங்கினார்.

புரளிகள்!

புரளிகள்!

மதா ஹேரி அந்த ஊரின் செல்வந்தர்கள், அரசியல்வாதிகள், வங்கி கணக்கர்கள் என பலருடன் உறவில் இணைத்திருந்தார் என புரளிகள் பரவியுள்ளன.

பிறகு, மிகுதியான செலவு, ஆடம்பர வாழ்க்கையிலிருந்து வெளிவர முடியாமல். பணத்திற்காக ஜெர்மன் உளவாளியாக மாறியுள்ளார் மதா ஹேரி.

இந்த உளவு வேலையின் போது பிரெஞ்சுகாரர்களிடம் சிக்கி, தூக்கு தண்டனை பெற்ற உயிரிழந்தார் மதா ஹேரி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mata Hari, An Exotic Dancer Who Executed By French For Spying in World War I

Mata Hari, An Exotic Dancer Who Executed By French For Spying in World War I
Story first published: Wednesday, November 15, 2017, 15:53 [IST]
Desktop Bottom Promotion