நான் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்ஸ் திருப்பி வாங்கிக்கொடுங்க - கோர்டில் கேஸ் போட்ட ஆண்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றெல்லாம் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவே இருந்தாலும், திருமண தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் காதல் உறவை வளர்த்துக் கொள்கிறார்கள். இதில் நிறைய ப்ளஸ், மைனஸ் இருக்கிறது.

ஏனெனில், திருமண மேடை ஏறி நின்ற நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் இன்று வரை மாதம் ஒன்று செய்திகளில் அடிப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.

இப்படி ஒரு நபரின் வாழ்வில் நடந்த சம்பவம் தான் இது. இடைப்பட்ட நாட்களில் தான் திருமணம் செய்துக் கொள்ள போகும் பெண்ணுக்கு கொடுத்த பல காஸ்ட்லி பரிசுகளை திரும்ப பெற்று தாருங்கள் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் அந்நபர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிட்னி ஜோடி!

சிட்னி ஜோடி!

சிட்னியில் ஒரு ஜோடி தங்கள் திருமண நாளை எதிர்நோக்கி காதல் உறவில் பயணித்துக் கொண்டிருந்தது. திடீரென நடந்த பிரச்சனையால் அந்த ஆண் திருமணத்தை கேன்சல் செய்துவிட்டார்.

அதுமட்டுமின்றி, அந்த இடைப்பட்ட நாட்களில் காதலித்த போது அந்த பெண்ணுக்கு அளித்த 10 இலட்ச ரூபாய் மதிப்பிலான காஸ்ட்லி பரிசுகளை திரும்ப அவரிடம் இருந்து பெற்றுத்தருமாறு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார்.

எட்வின்!

எட்வின்!

எட்வின் வின்னி சூவிற்கு நிச்சயத்தின் போது 10 லட்ச ரூபாய் மதிப்பிலான வைர மோதிரத்தை அளித்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக திருமணத்திற்கு பத்து நாட்களே இருக்கும் சூழலில் திருமணன் எட்வினால் கேன்சல் செய்யப்பட்டது. மேலும், தான் அளித்த அந்த வைர மோதிரம் மற்றும் பல காஸ்ட்லி பரிசுகளை திரும்ப கொடுக்குமாறு அவர் பெண்ணிடம் கூறியுள்ளார்.

பரிசுகள்!

பரிசுகள்!

வைர மோதிரம் மட்டுமில்லாது, வைர நெக்லஸ், விலை உயர்ந்த கைப்பை, வாட்ச், ஐ- போன் மற்றும் டாலர் பணம் உட்பட தான் அளித்த அனைத்து பரிசுகளையும் திரும்பத்தருமாறு சிட்னி நீதிமன்றத்தில் எட்வின் வழக்கு தொடர்ந்தார்.

சம்மதம்!

சம்மதம்!

இதை விசாரித்த நீதிமன்றம் காதலி வெளிப்பாட்டில் பரிமாறி கொண்ட பொருட்களை திரும்ப தர கூறுவது எப்படிப்பட்ட கருத்து, இதற்கு எப்படி தீர்ப்பு கூறுவது என கலந்தாலோசித்து கொண்டிருக்க, இரு குடும்பத்தாரும், அவரவர் கொடுத்த பொருட்களை திரும்பி தர சம்மதம் கூறினார்.

இன்டர்நெட் வைரல்!

இன்டர்நெட் வைரல்!

நீதி மன்றத்திலேயே வைத்து அந்த பெண், எட்வின் அணிந்திருக்கும் ஷூ நான் பரிசளித்தது, அதை திரும்பி கொடு என கேட்க, அங்கேயே அவர் அதை கழற்றி கொடுத்துள்ளார்.

2015 முதல் ஒருவரை ஒருவர் அறிந்த இந்த ஜோடி, திடீர் பிரச்சனையால் நீதிமன்றம் ஏறி தங்கள் பிரச்சனையை உலகறிய செய்த சம்பவம் உள்ளூர் ஊடகங்களில் இருந்து சர்வதேச ஊடகங்கள் வரை வைரல் செய்தியாக உருவெடுத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Man sues ex-fiancee for not returning $15,500 engagement ring after HE called off the wedding!

marriage cancel, court case love gifts, $15,500 engagement ring , HE called off the wedding!
Subscribe Newsletter