அசிங்கமோ... அருவெறுப்போ மொத்தமாய் கரைந்திடும் பொழுதுகள்!

Posted By:
Subscribe to Boldsky

காத்திருக்கும் ரயிலில் விழுந்துவிடலாம் என்று தான் இருந்தது. உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து தண்டவாளம் ஐந்தடி தூரம் கூட இருக்காது.

நான் விழுந்துவிட்டால் சர்வ நிச்சயமாய் இறந்துவிடுவேன். முகம் சிதைந்துவிடும் கை கால்,சதை எல்லாம் பிய்த்து தொங்கும், அதோ.... அங்கே கழிவு நீர் ஓடும் சாக்கடையில் என் குருதியும் ஒன்றோடு ஒன்றாக கலந்து........ நினைக்கையிலேயே உமட்டிக் கொண்டு வந்தது.

Main problems facing by today youth

Image Courtesy

இப்போது ஆங்காங்கே நிற்பவர்கள் எல்லாரும் கூட்டம் சேர்ந்துவிடுவார்கள் எல்லாருடைய கண்களும் என்னைச் சுற்றியே தான் இருக்கும்.

விழுந்து தான் பார்ப்போமே... அசிங்கமோ அருவெறுப்போ என்று எழுந்துவிட்டேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரண வாக்குமூலம் :

மரண வாக்குமூலம் :

ஐயோ.. இறப்பதற்கு முன்னால் கடிதம் ஒன்று எழுதப்பட வேண்டுமே.... டெம்ப்லேட் வசனமாக அதில் என் சாவுக்கு யாரும் காரணமல்ல என்பதையும் மறக்காமல் குறிப்பிட வேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டேன். மீண்டும் உட்கார்ந்து என் கைப்பையிலிருந்த நோட்பேடை எடுத்து எழுதினேன்.

மகிழ்வுடன் தான் செல்கிறேன். வருத்தப்பட வேண்டாம்.

என் சாவுக்கு யாரும் காரணமில்லை என்று எழுதி கீழே ஒரு ஸ்மைலி போட்டு வைத்தேன்.

பணம் :

பணம் :

சாக வேண்டும் என்று நான் நினைத்தால் மட்டும் போதுமா? அந்த ரயில் ஓட்டுநரும் நினைக்க வேண்டுமல்லவா.... இன்னும் இங்கே ரயில் வந்தபாடில்லை.

சரி ரயிலுக்காக காத்திருக்கும் சில நிமிடங்களில் இறப்பதற்கான காரணத்தை உங்களிடம் சொல்கிறேன்.

பொழுது போக வேண்டுமே.....

நான். என் அடையாளம் வேண்டாம், ஆண், பெண் ,திருநங்கை, திருநம்பி இப்படி எதோ ஒரு உயிர். உங்களில் ஒருவனாய் 27 வருடங்களாக வாழ்ந்தவன். எனக்கு என் அடையாளம் பிரச்சனையில்லை .

பணம். பணம் தான் முழு முதற் பிரச்சனை. உண்மையா உழைச்சு சாப்டணும்னு சிந்திக்கும் தந்தையை பெற்றது.

அடுப்பங்கரையை விட்டு வெளியே வர யோசிக்கும் அம்மையைப் பெற்ற வரம், இவற்றுடன் சாபக்கேடாய் வீட்டின் தலைப்பிள்ளையாய் பிறத்த கேடா என்று தெரியவில்லை.

பிரச்சனை :

பிரச்சனை :

வீட்டின் கடனை அடைக்க வேண்டும். வயோதிகப் பெற்றோருக்கு ஓய்வளிக்க வேண்டும். எனக்கு அடுத்துப் பிறந்தவர்களின் வாழ்க்கையை நன் முறையில் அமைத்துத் தர வேண்டும்.

வீட்டில் விசேஷம் வைத்தாலே நான்கு தலைமுறைக்கு முந்தையை பிரச்சனையை கிளப்பி, சண்டையிடும் உறவுகளை எல்லாம் ஒன்றிணைத்து தலைக்கு மேல் கடன் வாங்கி உயிரையே பணயம் வைத்து வரதட்சனை கொடுத்து அனுப்பும் எங்கள் வீட்டுப் பெண் மறுபடியும் செலவு வைத்துவிடக்கூடாதே என்ற ஏக்கத்துடன் கடக்கும் நாட்கள் எல்லாம் கொடூரமானவை.

வருடமொரு முறை ஏற்றும் வீட்டு வாடகை, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று விடப்பட்ட தண்ணீர் இந்த மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை என்றானது,

நடுநடுவே வரும் மொய்ப்பணச் செலவுகள், நண்பர்களின் கொண்டாட்டம் என்ற பெயரில் வரும் திண்டாட்டம், அலுவலகத்தில் சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆன பின்பும் ஐம்பது சதவீதத்தை தாண்டாத இன்க்ரீமெண்ட் ,

இவற்றுடன் ஏறும் விலைவாசிகள்,ஆதார் இணைப்பு சங்கதிகள் , எனப் பல சிக்கல்கள்.

இன்றைய தலைமுறை :

இன்றைய தலைமுறை :

இன்றைய யுகத்தினருடன் போட்டிப் போட முடியாமல் பழைய மாடல் போனை மறைப்பது போல அண்டர் கிரவுண்டில் நிற்கும் வண்டி என்னைப் பார்த்து இளிப்பதை தவிர்க்க முடியாது.

ஊரைவிட்டு ஹோட்டலில் தவம் கிடந்து மெல்லக் கொன்றுடும் விஷத்தை உணவென விலை கொடுத்து வாங்குவது,

நான் தான் முகேஷ் என்ற குரலை மனதில் நினைத்தபடியே பற்ற வைக்கும் சிகரெட்டின் விலையாவது இனி ஏறக்கூடாது என்ற வேண்டுதலுடன் தங்கியிருக்கும் கூட்டிற்கு வந்தால் பேச்சுலர் தான நிறைய தண்ணீ எதுக்கு? பேச்சுலர் தான அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க பேச்சுலர் தான...... என்று பேச்சுலர் வாழ்க்கையே வெறுக்க வைத்திருக்கும்.

இதற்கு நடுவே ஒரு காதல், நிறைய சண்டை கொஞ்சம் சாரி.... என மனஸ்தாபங்களுடன் நகரும் இந்த காதலாவது தொடர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் இன்றைய நாளை முடித்திருக்கிறேன்.

இவற்றோடு என் சினிமா கனவுகள் மெல்ல எழுமே..... ஆண்டவா!

கரைதல் :

கரைதல் :

பட்டியலில் பலவற்றை மறந்திருக்கலாம். ஆனால்.... எதோ சத்தம் கேட்கிறது. ரயில்வே ஸ்டேஷன் ஸ்பீக்கரில் ஒலிக்கும் குரல் அது.... தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இரண்டு மணி நேரம் ரயில் தாமதமாக வருமாம்.

கொடுமை.

அட!, இரண்டு மணி நேரம் காத்திருந்து நினைத்ததை முடித்துவிடலாமா? என்று யோசிக்கக்கூட தோன்றவில்லையே .

மனதிலிருந்த வரை சமாளிக்க முடியாத பிரச்சனைகளாக இருந்தவை உங்களிடம் பகிர்ந்த பின் கொஞ்சம் லேசாகவே இருக்கிறது.

இங்கே சிகரெட் எங்கே கிடைக்கும் என்று தேட எழுந்து கொண்டேன்..... ஒரு தம் இழுத்து விடும் புகையில் எல்லாமே கரைந்து போகும்... கரையட்டும். மொத்தமும் கரையட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, life
English summary

Main problems facing by today youth

Main problems facing by today youth
Story first published: Friday, August 18, 2017, 14:01 [IST]
Subscribe Newsletter