பப் களில் நடனமாடி மகிழ்விக்கும் பெண்கள் உண்மையில் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இன்றைக்கு பலருக்கும் பப் அறிமுகமான ஒன்றாக இருக்கிறது. அங்கே இருக்கும் ஸ்ட்ரிப்பர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது அவர்கள் எல்லாம் யார் என்று தெரியுமா? அவர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒரு கணம் நாம் சிந்தித்திருப்போமா?

யாரிந்த ஸ்ட்ரிப்பர்கள்? கவர்ச்சியான உடையணிந்து பப்களில் வருபவர்களுக்கு மது அல்லது குளிர்பானத்தை பரிமாறுவார்கள், கவர்சியான நடனம் ஆடி வந்தவர்களை மகிழ்விப்பார்கள் இறுதியாக பணம் கொடுக்க கொடுக்க அவர்களின் ஆடை ஒவ்வொன்றாக கழட்டுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முன் அபிப்ராயம் :

முன் அபிப்ராயம் :

பப், ஸ்டிர்ப்பர் க்ளப் என்று சொன்னாலே நம் மனதில் ஏற்கனவே இருக்கும் முன் அபிப்ராயத்தின் படி அவர்கள் எல்லாம் பாலியல் தொழிலாளர்கள் என்ற எண்ணம் மேலோங்குகிறது. ஆனால் உண்மை அதுவா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கிறது.

அங்கிருக்கும் இரண்டுப் பெண்கள் தங்களின் வாழ்க்கையையும் எதற்காக இங்கே இப்படி நடனமாடுகிறார்கள் என்பதையும் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு சொல்கிறார்கள்.

ஆசிரியர் :

ஆசிரியர் :

ஒருத்தி தன்னுடைய கணவனாலேயே ஸ்ட்ரிப் டான்ஸராக விடப்பட்டிருக்கிறாள். முதலில் அவளுக்கு இதில் விருப்பமே இல்லையாம். ரீமா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவள் சிறுவயதில் படித்து தகுதி வாய்ந்த ஆசிரியராக தேர்ச்சிப் பெற்று ஆசிரியராக பணியாற்றுக் கொண்டிருக்கிறாள்.

ஆசிரியப் பணிக்கு ஏற்ற வருமானம் கிடைத்திருக்கிறது. ஆனால் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மனைவியை ஸ்ட்ரிப் டான்சராக செல்ல உத்திரவிட்டிருக்கிறான் ரீமாவின் கணவன்.

பணம் சம்பாதிக்கும் வழி :

பணம் சம்பாதிக்கும் வழி :

திருமணத்திற்கு பிறகு அதிகரிக்கும் செலவினங்களால் கடனும் அதிகரித்துக்கிறது. இந்நிலையில் தன்னுடைய நண்பர்கள் இப்படிச் செய்து நிறைய பணம் சமாதிக்கிறார்கள் நீயும் ஏன் செய்யக் கூடாது என்று சொல்லி ஸ்ட்ரிப் டான்ஸராக மனைவியை கட்டாயப்படுத்தியிருகிறான் அவள் கணவன்.

வேறு வழியின்றி ஸ்ட்ரிப் டான்ஸராக பணியாற்றும் ரீமா தினம் தினம் பயந்து கொண்டே தான் பணியில் ஈடுபடுகிறார். தனக்கு தெரிந்தவர்கள் நண்பர்கள், உறவினர்கள், மிக முக்கியமாக தன்னுடைய மாணவர்கள் யாரும் இங்கே வந்துவிடக்கூடாது இந்தக் கோலத்தில் தன்னை பார்த்து விடக்கூடாது என்பது தான் அவரது முழு நேர வேண்டுதலாக இருக்கிறது.

கணவன்மார்களின் ரகசிய காப்பு :

கணவன்மார்களின் ரகசிய காப்பு :

பல ஆண்கள் தங்கள் மனைவி பணத்திற்காக யாராவது ஒருவர் முன்னிலையில் உடைகளை களைத்து நிற்பது அருவருப்பான விஷயம் யாரும் விரும்பமாட்டார்கள் ஆனால் என் கணவன் அப்படியல்ல என்கிறார் விரக்தியாக.

இங்கு பணியாற்றும் பெரும்பாலானோர் ஏதோ ஒரு வகையில் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள். இது உன்னுடைய வேலை பணத்திற்காக செய்கிறாய். இந்த வேலை முடிந்து வீட்டிற்கு வந்து உன்னுடைய அன்றாட வேலைகளை கவனிக்க வேண்டும் என்றே தான் எங்களுக்கு கணவன்மார்கள் சொல்லி அனுப்புகிறார்கள்.

தப்பான அபிப்ராயங்கள் :

தப்பான அபிப்ராயங்கள் :

காலையில் ஆசிரியர்.இரவில் ஸ்ட்ரிப் டான்ஸர் என்று இரட்டை குதிரையில் சாவரி செய்திடும் எனக்கு ஓய்வு என்பது தேவை என்று பாவப்பட்ட கணவன் ஒருபோதும் நினைப்பதில்லை என்று கவலை தெரிவித்திருக்கிறார் ரீமா.

அதோடு தன்னுடைய வேலை குறித்து தன்னுடைய குடும்ப உறவுகள் யாரிடமும் தெரிவிக்கவில்லையாம். எங்களுக்குள் பேசிக்கொண்டு நாங்கள் யாரும் குடும்பத்தாரிடம் எங்களின் இந்த வேலை குறித்து வெளியில் சொல்லிக் கொள்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம். ஏனென்றால் இதனைச் சொன்னால் முதலில் அவர்கள் பயப்படுவார்கள்.

பிறகு எங்களைப் பற்றி தப்பான அபிப்ராயங்களை வளர்த்துக் கொள்வார்கள் என்கிறார்.

பிறரிடம் நிரூபிக்கத் தேவையில்லை :

பிறரிடம் நிரூபிக்கத் தேவையில்லை :

எனக்கு தெரியும் மனதளவில் நான் எப்படி இந்த வேலையை அணுகுகிறேன் என்று எனக்கு மட்டுமே தெரியும் ஆனால் பிறரிடம் சென்று என்னை நிரூபிக்கவோ அல்லது புரியவைக்கவோ என்னால் முடியாது.

அதனால் என்னுடைய இந்த வேலை குறித்து வெளியில் பேசுவதை,பகிர்வதை தவிர்த்துவருகிறேன் என்கிறார். அதோடு இதிலேயே லேப் டான்ஸிங் டேபிள் டான்ஸிங்,கவுச் டான்சிங் என்று பல வகைகள் இருக்கிறது.

பட்டம் பெற :

பட்டம் பெற :

இவரைப் போலவே ஹெப்சி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் வருத்தங்களை பகிர்ந்திருக்கிறார். தன்னுடைய உறவினர்கள் நண்பர்களிடமிருந்த தன்னுடைய இந்த வேலையை ரகசியமாகவே வைத்திருகிறார்.

இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு பப்பில் ஸ்ட்ரிப் டான்ஸராக பணியாற்றி வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு யுனிவர்சிட்டியில் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்பது இவரது கனவாம்!

பணத்திற்காகவா இப்படி? :

பணத்திற்காகவா இப்படி? :

ரீமாவைப் போலவே இவரும் தன்னுடைய வேலையை பிறரிடம் சொல்வதில்லை காரணம், உண்மையில் இருப்பதை விட பல மடங்கு கேவலமானதாகத் தான் பார்க்கப்படுகிறது. அதோடு கேவலம் பணத்திற்காக இப்படி விலைபோக வேண்டுமா என்று சர்வ சாதாரணமாக எங்களைப் பார்த்து கேட்பார்கள்.

அந்த கேவலமான பணத்தை பெற நாங்கள் நிர்பந்திக்கப்படுகிறோம். இங்கே வருவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிர்பந்தங்கள் இருக்கும். வேறு வழியின்றி இங்கே வந்தவர்கள் தான் அதிகம். இங்கே அதிகமாக திருமணமான பெண்கள் தான் இருக்கிறார்கள்.

Image Courtesy

பாலியல் தொல்லை :

பாலியல் தொல்லை :

அலுவலகத்தில் கணினிக்கு முன்னால் உட்கார்ந்து கீ போர்டை தட்டி பணம் சம்பாதிப்பது மட்டுமே வேலையல்ல உங்களுக்கு பணம் சம்பாதிக்கத் தெரிந்த வழி அதுவென்றால் எங்களுக்கு இது அவ்வளவு தான்.

உங்களை விட இங்கே அதிகப்படியான இம்சைகள் எங்களுக்கு தொடரும். அலுவலகத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லை கொடுத்தால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இங்கே ஏன் உனக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்று கேள்வி கேட்பார்கள்.

Image Courtesy

விடிய விடிய :

விடிய விடிய :

அதே போல எல்லா இரவுகளில் கை நிறைய பணம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது வருகின்ற கஸ்டமர்களை பொறுத்தே அது அமையும். சிலர் விடிய விடிய இங்கே உட்கார்ந்திருப்பார்கள் அவர்கள் இருந்தால் நாமும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

வெளியில் இந்த வேலை குறித்து யாரிடமும் சொல்லிக் கொள்வதில்லை என்பதால் விடியற்காலை ஐந்து மணி வரை இங்கே பணி முடித்துவிட்டு அடுத்ததாக 8 மணி வகுப்பு கிளம்ப வேண்டியிருக்கும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Life story of stripper

Life story of stripper