அப்பா உளவாளி, அம்மா கடத்தல் காரர்; சூப்பர்ஸ்டார் நடிகரின் கடந்த காலம் - #LifeOfCelebs

Posted By:
Subscribe to Boldsky

எனது குழந்தை பருவம் சற்றே வித்தியாசமானது. என் அப்பா ஒரு உளவாளி, அம்மா கடத்தல் காரர். எனக்கு ஆறு வயது இருக்கும் போதே அவர்கள் என்னை தனியாக விட்டு சென்றுவிட்டார்கள். நான் ஒரு போர்டிங் பள்ளியில் அங்கேயே தங்கி கல்வி பயின்றேன். தற்காப்பு கலைகள், நாடகம் நடிப்பது, களரி மற்றும் பாடல் பாடுவது போன்றவற்றை கற்றுக் கொண்டேன்.

சிறு வயதில் இருந்தே நான் மிகவும் சுட்டிப்பிள்ளையாக இருந்தேன். துறுதுறுவென எதையாவது செய்துக் கொண்டே இருப்பேன். நீ களைப்படைய மாட்டாய என எனது ஆசிரியர்கள், நண்பர்கள் கேட்டதுண்டு.

அவர்கள் கூறியது போலவே, நான் சோர்வடைந்ததாக என்றும் உணர்ந்ததில்லை. தரையில் பந்தை போல உருண்டு பிரண்டு விளையாடிக் கொண்டே இருப்பேன். இதனால் எனக்கு அனைவரும் பவ்பவ் என்ற பட்டப்பெயர் வைத்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படிப்பு?!?!

படிப்பு?!?!

கலைகள், கேளிக்கையில் ஆர்வமாக இருந்த எனக்கு படிப்பு பெரிதாக ஏறவில்லை. கொஞ்சம் மந்தமான மாணவன் தான் நான். ப்ரைமரி ஸ்கூலிலேயே நான் தோல்வியடைந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நான் சரியாக படிப்பதில்லை என பலமுறை அடிவாங்கியிள்ளேன்.

Image Source

கேலி, கிண்டல்!

கேலி, கிண்டல்!

நான் அப்போது உடலளவிலும், மனதளவிலும் கொஞ்சம் வீக் என்று தான் கூற வேண்டும். வகுப்பிலேயே நான் தான் வீக்கான மாணவன் என்பதால், யாருக்கும் பொழுது போகவில்லை என்றால் என்னை கூப்பிட்டு கேலி, கிண்டல் செய்து, துன்புறுத்தி இன்பம் காண்பார்கள்.

என்னைவிட மிகவும் வீக்காக ஒருவன் வரும்வரை நான் தான் அவர்களுக்கு விளையாட்டு பொருள். அப்படி ஒருவன் புதிதாக வந்தான். முதலில் அவனை கேலி, கிண்டல் செய்யாமல் இருக்க எதிர்த்து நின்றேன். பிறகு எனக்காக எதிர்த்து நிற்க பழகினேன்.

Image Source

வேலை!

வேலை!

ஒருவழியாக எனது படிப்பு முடிவுக்கு வந்தது. பிறகு வேலையில் சேர்ந்தேன். ப்ரூஸ்லீ படங்களில் ஸ்டன்ட் மேனாக நடிக்க துவங்கினேன். அந்த துறை எனக்கு மிகவும் பிடித்தது. அந்த பெரிய ஈர்ப்பு என்னை மிகையாக கவர்ந்தது. ஆனால், ப்ரூஸ்லீயிடம் அடிவாங்குவது எல்லாம் எளிய காரணம் அல்ல. பல சமயங்களில் நிஜமான அடிவிழும்.

Image Source

விரைவில்!

விரைவில்!

நானாகவே முன்வந்து பல கிறுக்குத்தனமான ஸ்டன்ட் செய்து காண்பித்து மிக வேகமாகா பிரபலமானேன். ப்ரூஸ்லீயின் மரணத்திற்கு பிறகு குங்க்ஃபூ படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். நான் நடித்த அனைத்தும் படங்களும் தோல்வியை தழுவின. என்னால் ப்ரூஸ்லீ போல பின்பற்ற முடியவில்லை. ஓர் நடிகனாக தோற்றேன். ஹாங்காங்கைவிட்டு வெளியேறினேன்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் எனக்கு ஒரு கட்டிட வேலை கிடைத்து. அங்கே வேலை செய்ய துவங்கினேன். ஆயினும், என கனவுகள் என்னை அந்த வேலையை செய்ய விடவில்லை. தோல்வி நிலையானது அல்ல. அதை கடந்தால் தான் வெற்றி என்பதை உணர்ந்தேன். சூழ்நிலைகள் நம்மை கட்டுப்படுத்துவதை நிறுத்த வேண்டும். நாம் தான் அந்த சூழ்நிலைகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதை அறிந்தேன்.

Image Source

புதியவன்!

புதியவன்!

நான் ஒரு புதிய படமாக்கும் ஐடியாவுடன் திரும்பினேன். ப்ரூஸ்லீ போல தற்காப்பு கலை மூலம் ஆக்ஷன் செய்து வெற்றிப்பெற முடியவில்லை என்பதால். தற்காப்பு கலையுடன் நகைச்சுவையை கலந்து நடிக்க திட்டமிட்டேன். இரண்டு ஆண்டுகள் தான். ஆசியாவிலேயே அதிக ஊதியம் பெறும் நடிகராக உருமாறினேன்.

நான் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிப்பெற்றன. எனது நகைச்சுவை கலந்த ஆக்ஷன் யுக்தி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு பெற்றது. உலக அளவில் என் படங்களை மக்கள் ரசித்து பார்க்க துவங்கினார்கள்.

Image Source

பிரச்சனைகள் முளைத்தன!

பிரச்சனைகள் முளைத்தன!

ஊதியம் அதிகம், ஆகையால் பிரச்சனைகளும் அதிகம். என்னை சுற்றி மில்லியன் டாலர்கள் பணம் புரண்டது. கொள்ளையர்கள் என்னிடம் இருந்து எப்படி பணம் பறிப்பது என திட்டமிட்டனர்.

எப்போதுமே எனது தற்காப்புக்காக துப்பாக்கி ஏந்தியே வாழ வேண்டிய நிலை உருவானது. படத்தை காட்டிலும் நிஜ வாழ்க்கையில் தான் அதிகமாக துப்பாக்கியுடன் சுற்றி இருக்கிறேன்.

ஹாலிவுட்!

ஹாலிவுட்!

எனது முதல் படத்தில் இருந்து 34ஆண்டுகள் கழித்து ரம்பில் இன் தி பிராங்க்ஸ் என்ற எனது படம் முதன் முதலில் ஹாலிவுட்டில் ஹிட்டானது. அப்போது எனக்கு 42 வயது. எனது ஐம்பதாண்டு கால சினிமா வாழ்வில் நான் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். எனது உடலில் இருக்கும் எல்லா எலும்புகளும் ஒரு முறையாவது உடைந்திருக்கும். அந்தளவிற்கு பல கடினமான ஸ்டன்ட்களை நானே செய்துள்ளேன்.

Image Source

உலக சாதனை!

உலக சாதனை!

அதிக ஸ்டன்ட் செய்துள்ள ஆக்டிவ் நடிகர் என்ற உலக சாதனை செய்துள்ளேன். ஒருமுறை விமானத்தில் இருந்து இருந்து கீழ் ஒரு ஹாட் ஏர் பலூன் மீது குதிக்க வேண்டிய ஸ்டன்ட்டையும் நானே தான் செய்தேன்.

என்னால் ஏழு மொழிகள் பேச முடியும். நான் ஒரு குரலிசை கலைஞரும் கூட. நான் இதுவரை 20 ஆல்பங்களை வெளியிட்டுள்ளேன்.

Image Source

அச்சம்!

அச்சம்!

இத்தனை ஸ்டன்ட் செய்திருந்தாலும் என வாழ்வில் இன்றும் இரண்டு விஷயங்கள் குறித்து எனக்கு பெரிய அச்சம் இருக்கிறது. ஒன்று ஊசிப் போட்டுக் கொள்வது மற்றொன்று பொதுமேடையில் பேசுவது.

என் பெயர் ஜாக்கி சான். இது தான் என்னுடைய வாழ்க்கை!

வாழ்க்கை நம்மை கீழே தள்ளி அழுத்த தான் முயற்சிக்கும். அதிலிருந்து மீண்டு வர வேண்டுமா, அப்படியே மண்ணோடு புதையுண்டு போக வேண்டுமா என்பது நமது கையில் தான் இருக்கிறது.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Hurdles and Sorrows of Asian Superstar Actor Jackie Chan!

The Hurdles and Sorrows of Asian Superstar Actor Jackie Chan!