2.0-வில் சிட்டியின் தாத்தா இவர் தானாம்...

Posted By:
Subscribe to Boldsky

சில தினங்களுக்கு முன்னர் வெளியான 2.O பாடல்களில், ஒரு பாடலில் "ஐசக் அசிமோவ் பேரன்டா..." என்ற வரி இடம் பெற்றிருந்தது. ஐசக் நியூட்டன் தெரியும், இது யார் ஐசக் அசிமோவ் என சிலருக்கு சந்தேகம் எழலாம்.

ஐசக் அச்மோவ் ஒரு யூத அமெரிக்கர். இவர் பிறந்தது ரஷ்யாவில் என்றாலும், படித்து, வளர்ந்து, காலமானது அமெரிக்காவில் தான். இவர் உலகின் புகழ்பெற்ற பாஸ்டன் பல்கலக்கழகத்தில் பயோ-கெமிஸ்ட்ரி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

புத்தகம் படித்து பாடம் எடுப்பது மட்டுமல்ல, இவர் செய்து வந்த வேலை... இவர் ஒரு சிறந்த அறிவியல் புனை கதை எழுத்தாளரும் கூட. இன்னும் சொல்லப்போனால் எப்படி இன்று சுஜாதா அவர்கள் சாமானிய நபர்களும் எளிதாக புரிந்துக் கொள்வது போல என் இனிய இயந்திரா எழுதினாரோ, அப்படி இவர் அமெரிக்காவில் அறிவியல் புனை கதைகள் எழுதிவந்தார்.

ஆனால், இவர் சுஜாதாவிற்கும் முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோபோவின் தந்தை!

ரோபோவின் தந்தை!

அறிவியல் புனை கதைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார் அசிமோவ். இவரது ரோபாட் தொடர் புத்தகங்கள், ஃபவுண்டேஷன் தொடர் புத்தகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இவர் தனது வாழ்நாளில் ஐநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார்.

Image Credit: wikipedia

யூதர்!

யூதர்!

ஐசக் அசிமோவ் 1920ல் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தவர். இவரது சரியான பிறந்த தேதி என்ன என்பது அறியப்படவில்லை. ஜனவர் 2 என குறித்து வைத்துள்ளனர். இவருக்கு மூன்று வயது இருக்கும் போது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.

Image Credit: wikimedia

ஆரம்ப வாழ்க்கை!

ஆரம்ப வாழ்க்கை!

தனது சிறுவயது முதலே அசிமோவ் அறிவியல் புனை கதைகளை படித்து வளர்ந்தவர். ஆனால், இதெல்லாம் வேலைக்காகாத விஷயம் என அசிமோவை அதட்டி வந்தார் அவரது தந்தை.

11வது அகவையில் தனது முதல் சொந்த கதையை எழுதினார் அசிமோவ். 19வது அகவையில் அசிமோவின் புனை கதைகள் நாளேடுகளில் வெளியாக துவங்கியது. மெல்ல, மெல்ல இவருக்கான இரசிகர்கள் உருவாக ஆரம்பித்தார்கள்.

Image Credit:flickr

1958!

1958!

டாக்டர் பட்டம், விமான படையில் மூன்று வருட வேலை என பலவற்றை கடந்து கடைசியாக 1958ல் முழுநேர எழுத்தாளராக மாறினார் அசிமோவ். 1979ல் பாஸ்டன் பல்கலைகழகம் அசிமோவின் எழுத்தை கெளரவம் செய்யும் வகையில் அவருக்கு பயோ-கெமிஸ்ட்ரி பேராசிரியர் பணி அளித்தது.

Image Credit: sketchport

பெபிள் இன் தி ஸ்கை!

பெபிள் இன் தி ஸ்கை!

பெபிள் இன் தி ஸ்கை எனும் தனது முதல் அறிவியல் நாவலை 1950ல் வெளியிட்டார் அசிமோவ். இவரது ஃபவுண்டேஷன் தொடர்கள் இவருக்கு பெரும் புகழை தேடி தந்தது.

கெலாக்டிக் எம்போர் மற்றும் ரோபாட் தொடர்கள் மூலம் இவர் உலகளவில் பெரும் புகழடைந்தார். இதனாலேயே ரோபாட் கதைகளின் முன்னோடி என்பதையும் தாண்டி ஐசக் அசிமோவ் என்றால் ரோபாட் கதைகள் தான் நினைவுக்கு வரும் என்ற வகையில் வரலாற்றில் இடம் பிடித்தார்.

Image Credit: flickr

பிக் த்ரீ!

பிக் த்ரீ!

ஐசக் அசிமோவ், ஆர்த்தர் சி கிளார்க் மற்றும் ஹெயின்லெயின் என்பவர்களை பிக் த்ரீ என அழைக்கிறார்கள். இதற்கு காரணம் இவர்கள் மூவரும் அறிவியல் புனை கதைகள் எழுதுவதில் சிறப்பு மிக்கவர்கள். புகழ் என்பதை தாண்டி வணிக ரீதியிலும் சிறந்த எழுத்தாளர்களாக விளங்கினர் இவர்கள் மூவரும்.

Image Credit: flickr

ஷங்கர் டச்!

ஷங்கர் டச்!

தனது படத்தில் எப்போதுமே ஷங்கர் டச் என்பது போல, இதை ஷங்கரை தவிர, வேறு யாராலும் செய்ய முடியாது, சிந்திக்க முடியாது என சில விஷயங்கள் செய்வார். அதே போல, 2.Oவிலும் ஒரு பாடலில் ரோபாட்டை குறித்த இடத்தில் பெருமை சேர்க்கும் வகையில் ஐசக் அசிமோவின் பேரன்டா என வரிகள் இடம்பெற செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Life of Isaak Asimov

Life of Isaak Asimov
Story first published: Wednesday, November 1, 2017, 11:46 [IST]
Subscribe Newsletter