அன்னை தெரசா பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரத்தில் இதே நாள் 1910 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆக்னஸ் . இளவயதிலிருந்து படிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவரான இவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். இதனால் எப்போதும் தன்னைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். யாரிந்த ஆக்னஸ்? இது பெற்றோர் வைத்தப் பெயர். அவருக்கு மக்கள் வைத்தைப் பெயரைச் சொன்னால் சட்டென உங்களுக்குத் தெரிந்து விடும். ஆக்னஸுக்கு நாம் வைத்த பெயர் 'அன்னை தெரசா' அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எந்த நாள் பிறந்தநாள் ? :

எந்த நாள் பிறந்தநாள் ? :

ஆகஸ்ட் 26 ல் பிறந்தாலும், தான் திருமுழுக்கு எனப்படும் Baptism எடுத்த தினமான ஆகஸ்ட் 27 ஐ தான் பிறந்த நாளாக கருதினார். இளவயதிலேயே தந்தையை இழந்ததால் வறுமை சூழலில் தான் வளர்ந்தார் ஆக்னஸ் .

Image Courtesy

சிறிய பென்சில் :

சிறிய பென்சில் :

அன்னைத் தெரசா தன்னைப் பற்றிக்குறிப்பிடும் போது, அன்பின் கடிதத்தை இவ்வுலகத்திற்கு எழுதுகின்ற இறைவனின் கரங்களில் இருக்கும் சிறிய பென்சில் மட்டுமே நான் என்பார்.

Image Courtesy

தெரசா பெயர்க்காரணம் :

தெரசா பெயர்க்காரணம் :

1929 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தடைந்தார் ஆக்னஸ். அங்கே இருக்கும் விதிகளின் படி, புதிதாக வந்து சேர்பவர் பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். அதன்படி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சகோதரி தெரசா மார்டின் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் பணிவிடை செய்வதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொள்ள நினைத்தவர்.

அதற்கு அவரது உடல்நிலை இடம் கொடுக்க வில்லை. ‘காசநோய்' காரணமாக தனது 24-ம் வயதில் இயற்கை எய்தினார். அவர்களது நினைவாக தனது பெயரை "தெரசா" என்று மாற்றிக் கொண்டார்.

Image Courtesy

மருத்துவப் பயிற்சி :

மருத்துவப் பயிற்சி :

தன்னை "செவிலியர்" பணியில் மேம்படுத்திக் கொள்ள விரும்பிய தெரசா அதற்காக பாட்னாவில் உள்ள செயின்ட் ஃபேமிலி மருத்துவமனையில் மருத்துவ பயிற்சிகளை எடுத்துக்கொண்டார். அங்கு அவர் பலவிதமான நோய்கள் பற்றியும், அவற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் முறைகள் பற்றியும் முறையாக கற்றுக் கொண்டார்.

Image Courtesy

முதல் குழு :

முதல் குழு :

தெரசாவின் சிஷ்யைகள் பத்துப் பேரைக் கொண்ட முதல் சேவைக்குழு உருவானது. சமூக சேவைகளுக்கான ஆரம்பம் பள்ளிக்கூடம் கட்டுவதுதான் தனது முதல் நோக்கமாகக் கொண்டு, 1949-ம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மோத்திஜில் என்ற பிரபலமான குடிசைப் பகுதிக்குச் சென்றனர்.

அது பல பகுதிகளைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களும், ஏழைகளும் ஒன்றாக வசித்த பகுதி. முதல் கட்டமாக அங்குள்ள ஏழைக்குழந்தைகள் பற்றிய தகவல்களை குறித்துக்கொண்டு, குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்தார்.

அவர்களின் ஆதரவுடன், முதலில் வெறும் 5 குழந்தைகளுடன் கரும்பலகை கூட இல்லாமல் தண்ணீர்த் தொட்டியின் நிழலில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம் குறுகிய நாட்களில் மெல்ல மெல்ல எண்ணிக்கை உயர்ந்து 46 குழந்தைகளை எட்டியது.

Image Courtesy

மருத்துவமனை :

மருத்துவமனை :

நோயால் தனது வீட்டின் வாசற்படியில் மயங்கிக்கிடந்த ஒரு பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றும், பண வசதி இல்லாத கால தாமதத்தால் அந்த பெண் இறக்க நேரிட்டாள். இந்த ‘கோர சம்பவத்தை' அனுபவித்த அன்னை தெரசா "சிறிய அளவில் மருத்துவமனை" ஆரம்பிப்பது என முடிவு செய்தார்.

Image Courtesy

சாரிட்டி :

சாரிட்டி :

அக்டோபர் 7, 1950-ம் ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டிஸ் என்ற அறக்கட்டளையை துவங்கினார். இதன் மூலம் பசியால் வாடுகின்றவர், வீடின்றி தவிக்கின்றவர், கண்பார்வை இல்லாதவர், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர் என தன்னால் முயன்ற அத்தனை உதவிகளையும் பாரபட்சம் இல்லாமல் செய்து வந்தார்.

Image Courtesy

காளிகட் இல்லம் :

காளிகட் இல்லம் :

கவனிப்பார் இல்லாமல், வாரிசுகளால் புறக்கணிக்கப்படுகின்ற முதியவர்களுக்கு கருணை இல்லம் உருவாக்க விரும்பினார் அன்னை தெரசா. அரசாங்க உதவியுடன் ‘காளிகட்' என்னுமிடத்தில் ஹீக்ளி நதிக்கரையின் அருகில் கிடைக்கப்பெற்ற "நிர்மல் ஹ்ருதய்" என்ற கட்டிடத்தை முதியோர் காப்பகமாக மாற்றினார். இதன் பெயர்தான் பின்னாளில் "காளிகட் இல்லம்" என்றானது.

Image Courtesy

சிசுபவன் :

சிசுபவன் :

செப்டம்பர் 23, 1955-ம் ஆண்டு முதன் முறையாக சிசுபவன் ஆரமப்பிக்கப்பட்டது. இதன் மூலம் ஊனமுற்ற குழந்தைகள், மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள், குப்பைத்தொட்டி மற்றும் சாக்கடைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் என அனைவரும் இந்த காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

Image Courtesy

தொழு நோயாளிகளுக்கு :

தொழு நோயாளிகளுக்கு :

1957-ல் முதல் முறையாக தொழுநோயாளிகளுக்கான நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கினார். பிறகு அதே ஆண்டில் தொழுநோய் மருத்துவமனை ஒன்றையும் ஆரம்பித்தார். இங்கு இலவசமாக உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.

இதற்கு "காந்தி பிரேம் நிவாஸ்" என்று பெயரிடப்பட்டது. மேலும் "தொழுநோயாளிகளின் தினம்" என்ற ஒன்றை அறிவித்து அந்நாளில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினார்.

Image Courtesy

போப் கார் ஏலத்தில் :

போப் கார் ஏலத்தில் :

அன்னைத் தெரசா யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம்.ஒரு முறை போப்பாண்டவர் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தனது சுற்றுப்பயணத்திற்காக பயன்படுத்திய விலையுயர்ந்த காரை அன்னை தெரசாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்.

சொகுசு காரில் பயணம் செய்வதற்கு சிறிதளவும் விருப்பமில்லை ஆனாலும் அதனை மறுக்கவும் விருப்பமில்லை. எனவே புன்னகையோடு ஏற்றுக்கொண்டார்.

அடுத்த நிமிடமே அந்தக் காரை ஏலம் விடுமாறு கோரிக்கை விடுத்தார். அந்தப் பணத்தை அறகட்டளை நிதியில் சேர்த்துக் கொண்டார். இது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த சம்பவம் இது.

Image Courtesy

தொண்டன் :

தொண்டன் :

உலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளில் நான்காயிரம் தன்னார்வு தொண்டர்களோடு கூடிய 600 சேவை மையங்கள் உருவாக்கப்பட்டன.

மார்ச் 13, 1997-ல் அறக்கட்டளையின் பொறுப்புக்கள் அனைத்தையும் நிர்மலாவிடம் ஒப்படைத்து விட்டு சாதாரண தொண்டராகவே தனது பணியினை தொடர்ந்தார் அன்னை தெரசா.

Image Courtesy

ஆசிர்வதிக்கப்பட்டவர் :

ஆசிர்வதிக்கப்பட்டவர் :

கிருஸ்துவ மரபின்படி ஒருவர் இறந்த பிறகு அடுத்த ஐந்து வருடங்களில் ஏதாவது ஒரு அதிசயம் அவரது பெயரில் நிகழ்ந்தால் "ஆசிர்வதிக்கப்பட்டவர்" என்ற பட்டம் வழங்கப்படும். அதன் படி இங்கு பெர்ஸா என்ற பெண்மணி வயிற்று வலியால் துடித்ததாகவும், அன்னைத் தெரசாவின் படத்தை வயிற்றில் வைத்தவுடன் வலி குறைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து, அக்டோபர் 19, 2003-ல் வாடிகன் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் 3 இலட்சம் பேர் முன்னிலையில் தெரசாவுக்கு ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

Image Courtesy

கௌரவம் :

கௌரவம் :

1962-இல் அமைதி மற்றும் உலகப் புரிந்துணர்வுக்கான மகசேசே விருது, 1972-இல் பாப்பரசர் 23-ஆம் அமைதிக்கான பரிசு, காபிரியேல் விருது, சர்வதேச புரிந்துணர்வுக்கென ஜவஹர்லால் நேரு விருது,

1973-இல் டெம்பில்டன் விருது, 1977 ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம், 1979 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு, 1980-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பாரத் ரத்னா விருது,

1982 ல் பெல்ஜியம் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம், 1985-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மிக உயர் விருதான விடுதலைக்கான அதிபர் பதக்கம், சுதந்திரத்திற்கான பிரசிடன்ஸியல் விருது,

1996ல் அமெரிக்காவின் கௌரவப் பிரஜை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற அன்னை தெரசா 1997-ஆம் ஆண்டில் இறந்தார். இவரின் இறப்புக்குப் பின்னர் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.

வேறொரு நாட்டில் பிறந்த இந்தியப் பிரஜையாக இறந்த ஒரே நபர் அன்னைத் தெரசா மட்டுமே. இவரது இறப்பிற்கு முழு ராணுவ மரியாதை வழங்கப்பட்டது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, life
English summary

Life history of mother Theresa

Life history of mother Theresa
Story first published: Saturday, August 26, 2017, 14:20 [IST]
Subscribe Newsletter