அம்மாவைத் தவிர வேறு யாரும் நீங்கள் திட்டுவதை பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று தெரியாதா காயத்திரி

Posted By:
Subscribe to Boldsky

திரையில் தோன்றும் கதாநாயகிகள் எல்லாம் எமோஷனல் கேரக்டராகவும், குழந்தைத்தனம் உள்ளவர்களாகவும் தான் காட்டப்படுகிறார்கள். குழந்தைத்தனம் என்றாலே பெண்களுக்குத் தான் இருக்கும் என்ற எண்ணமும் இருக்கிறது. இப்போதெல்லாம் குழந்தைத்தனம் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியவில்லையோ என்றே தோன்றுகிறதல்லவா அதுவும் குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு.

Is BiggBoss Gayathri a kid?

தன்னுடைய குணத்தால்,கோபத்தால் பிக் பாஸ் ரசிகர்களிடையே நெகட்டிவ் கேரக்டராக மனதில் பதிந்திருக்கும் காயத்திரியை குழந்தைப் போல குழந்தை மனம் கொண்டவர், இன்னொசன்ட் என்று திரும்ப திரும்ப சொல்வது சரிதானா

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிப்படை குணம் :

அடிப்படை குணம் :

இன்னொசன்ட் என்பதும் குழந்தைத்தனம் என்பது அடிப்படையில் இரண்டுமே வெவ்வேறு குணநலன்கள்.குழந்தைத்தனம் என்பது எப்போதாவது வெளிப்படும் குணம். அறிவார்ந்தவர்கள் கூட சில சமயங்களில் குழந்தைத்தனமாக பேசிடுவார்கள்,நடந்து கொள்வார்கள். இது பிறரின் மனம் புண்படும்படியாக இல்லாமல் சிரிக்க வைக்கும் விஷயமாக ரசிக்கும் விஷயமாக இருக்கும். எந்த முன்யோசனையும், திட்டமும் இருக்காது. இன்னொரு முறையில் சொல்ல வேண்டுமானால் சில்லரைத்தனமாக என்று கொள்ளலாம். இன்னொசன்ட் என்பது அவர் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து சூட்டப்படும் பெயர்.

பிக் பாஸ் :

பிக் பாஸ் :

பிக் பாஸ் வீட்டில் உள்ள பெரும்பாலானோர் காயத்திரியின் முன் கோபத்தை விவரிக்க வந்தவர்கள். அவர் குழந்தை போல,குழந்தை மனம் உடையவர் என்றே சொல்லிவருகின்றனர். உண்மையில் அவர் குழந்தை மனம் படைத்தவரா? இதற்கு குழந்தை மனம் என்று சொல்ல முடியாது மெச்சூரிட்டி இல்லாமல் நடந்து கொள்கிறார் என்று வேணாலும் சொல்லலாம். ஒருவர் யதார்த்தமாக சொல்லும் வார்த்தைக்கும், யதார்த்தமாக நடந்து கொள்ளும் விதத்திற்கும் ஓர் அர்த்தம் கண்டுபிடித்து அதையே நம்பி தனக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று நினைத்துக்கொள்ளும் காயத்திரி எப்படி ஓர் குழந்தை ஆக முடியும்?

காயத்திரி குழந்தையா? :

காயத்திரி குழந்தையா? :

பிக் பாஸ் வீட்டில் இருந்த சக்தி, இன்னமும் தொடர்கின்ற கணேஷ் மற்றும் ஆரவ் போன்றவர்கள் பல நேரங்களில் காயத்திரி குழந்தையை போல என்று விவரித்திருக்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் சொல்வது உண்மையானால் பார்வையாளர்கள் ஒருவருக்கும் காயத்திரி குழந்தை போல தெரியாதது ஏன்? தவறான பிம்பத்தை நம் முன் திட்டமிட்டு பரப்புகிறார்கள் என்பதே உண்மை.

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் அப்பாவி என்று காயத்திரியை சொல்லவே முடியாது. அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் , பேசும் பேச்சுகளும் தீர்க்கமாக இருக்கும். அத்தனை தெளிவான முடிவை எடுக்கக்கூடியவர். எதுசரி, எது தவறு என்பதில் சின்ன குழப்பம் கூட இல்லமால் செயல்படக்கூடியவர். முகத்திற்கு நேராக வசைபாடிடும் தைரியம் உண்டு. தான் செய்வது சரி என்று 100க்கு 200 சதவீதம் நம்புகிறார். எடுத்ததற்கெல்லாம் கோபத்தின் உச்சிக்கே சென்று பொருட்களை கீழே போடுவது, விருட்டென எழுந்து வருவது, முகத்தை அஷ்டகோணலாக்கி எதிரில் இருப்பவரை எரிச்சல் படுத்துவது போன்றவற்றை எல்லாம் செய்யும் காயத்திரியை எப்படி ஒரு குழந்தையுடன் ஒப்பிட முடியும்.

போட்டி உலகம் :

போட்டி உலகம் :

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில் பணியாற்றுகிறேன். இப்படி கோபப்பட்டால் தான் என்னால் வேலை வாங்க முடியும் என்று சொல்லும் காயத்திரியை எப்படி ஆண்களே குழந்தை குழந்தை என்று வர்ணிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர் பணியாற்றும் துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் ஆண்களின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது ஆனால் எல்லாப் பெண்களும் இவரைப் போல கோபப்படுவது இல்லை.

என் வாழ்க்கையில் நடந்த பிரச்சனையின் போது தைரியமாக நானே சமாளித்தேன். உதவிக்கு என் உறவுகள் கூட யாரும் வரவில்லை என்று தான் ஒரு போல்டானவர் என்பதை அவரே ஒப்புக்கொண்ட பிறகும் ஏன் அந்த குழந்தை என்ற முகமுடி.

எச்சரித்த கமல் :

எச்சரித்த கமல் :

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், ஒவ்வொருவரும் வெவ்வெறு புண்புலன்களில் இருந்து வந்திருக்கலாம் ஆனால் இந்த வீட்டிற்க்குள் எல்லாரும் சமம் தான் என்று சொன்னார் கமல். ஆனால் உள்ளே எல்லாரும் சமமாக நடத்தப்பட்டார்களா என்றால் நிச்சயம் இல்லை. குறிப்பாக காயத்திரி, லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க்களின் போது, முட்டையை உடைப்பது, முகத்தில் பேஸ்ட் அப்பிக் கொள்வது போன்ற விளையாட்டுகளுக்கு மறந்தும் காயத்திரியை யாரும் அழைக்கவில்லை. அதைவிட காயத்திரியை மரியாதையாக மாஸ்டர் என்றும் மேடம் என்றும் தான் அழைக்கிறார்கள்.

தயவு செய்து வேண்டாம் :

தயவு செய்து வேண்டாம் :

சட்டென கோபம் கொள்வதும், கோபத்தில் அசிங்கமான வார்த்தைகளை எந்த முன்யோசனையுமின்றி கொட்டுவதும், பின்னர் கோபம் கொள்வதை என்னால் உடனடியாக குறைத்துக் கொள்ள முடியாது. நான் கெட்ட வார்த்தை பேசுவதை ஏன் டிவியில் காட்ட வேண்டும் என்று இவ்வளவு ‘தெளிவாக' பேசும் காயத்திரியை தயவு செய்து இனி குழந்தையுடன் ஒப்பிடாதீர்கள். எங்கள் வீட்டுக் குழந்தை ஒரு போதும் இப்படி இருப்பதில்லை.

எங்கள் குழந்தைக்கு தெரியாது :

எங்கள் குழந்தைக்கு தெரியாது :

உண்மையிலேயே காயத்திரி சொன்ன, ‘விஷம்', ‘மூஞ்சியும் முகரகட்டையும்', ‘வெளில வரட்டும் கைய கால ஒடைக்கிறேன்' போன்ற வார்த்தைகள் எல்லாம் எங்கள் குழந்தைக்கு சொல்லத்தெரியாது. சொல்லவும் சொல்லாது. இவை எல்லாவற்றையுடம் விட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிடும் கமல் கெட்ட வார்த்தைகள் பேசுவதாக விமர்சிப்பதைக் கூட அவரால் தாங்க முடியவில்லை. அதை திசை திருப்ப முயற்சிக்கிறாரே தவிர தான் திருந்துவதற்கு முயற்சி எடுக்கவில்லை.

ஒரே ஒரு வேண்டுகோள் :

ஒரே ஒரு வேண்டுகோள் :

தான் என்ற அகங்காரமும், சீனியர் என்ற கர்வமும் பல இடங்களில் மேலோங்குவதை பார்வையாளர்களால் உணர முடிந்தது. தன்னை யாரும் கேள்வி கேட்ககூடாது, விமர்சிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் தன்னைப் பற்றி ஒருவர் சொல்லிவிட்டாலே அவர் பரம விரோதியாக நடத்திடும் காயத்திரி நிச்சயமாக குழந்தை மனம் படைத்தவர் அல்ல. அம்மாவைத்தவிர வேறு யாருக்கும் என்னை திருத்த உரிமையில்லை என்று சொல்லும் காயத்திரிக்கு, அம்மாவைத் தவிர வேறு யாரும் தான் திட்டுவதை பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று தெரியவில்லை.

தைரியமானவர், போல்டான கேரக்டர் என்று பாராட்டிக் கொள்ளுங்கள். ஆனால் குழந்தை என்ற அடைமொழி மட்டும் வேண்டவே வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, life
English summary

Is BiggBoss Gayathri a kid?

Is BiggBoss Gayathri a kid?
Subscribe Newsletter