For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்யாணம் ஆகாட்டி அவள ட்ரை பண்ணலாம்னு நெனைக்காதீங்க, ஓர் எச்சரிக்கை கடிதம்!

|

அன்புக்குரிய ஆண்களே...,

ஆண்களே! நவநாகரீகம் என்பது உங்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. காலில் மெட்டி அணியும் வழக்கத்தை என்று நீங்கள் துறந்துவிட்டீர்களோ... பிறகு, நாங்கள் ஏன் நெற்றிப்பொட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதில்லை, காலில் மெட்டி அணிவதில்லை, கழுத்தில் தாலி அணிவதில்லை என கேள்வி கேட்கும் உரிமை, அருகதை உங்களுக்கு இல்லை.

திருமணமான பெண் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்ற சட்டத்திட்டங்கள் இருந்தால், திருமணமான ஆணிற்கும் அதே மாதிரியான சட்டதிட்டங்கள் இருக்க வேண்டும் அல்லவா? அது தானே சமநிலை நீதி.

இங்கே, ஆண்கள் ஏன் திருமணமான பெண்கள் மேற்கூறிய அறிகுறிகளுடன் நடமாட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா? ஒரு பெண்ணிடம் அப்ரோச் செய்யும் போது, பேச முயலும் போது அவள் திருமணம் ஆனவளா? ஆகாதவளா என அவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். வேறு எந்த ஒரு நிரப்பப்படாத கோட்டிற்கும் இல்லை. (அதாங்க டேஷ்!)

நீங்கள் இதுவரைக்கும் படித்தது நமது சமூகத்தில் பல பெண்களின் மனதில் புதைந்திருக்கும் கோபம். இனி இங்கே நீங்கள் படிக்க போவது ஒரு பெண் தன் வாழ்வில் கடந்து வந்த (பல பெண்கள் தங்கள் வாழ்வில் அனுதினமும் கடந்து வரும்...) உண்மை நிகழ்வு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷாப்பிங் மால்...

ஷாப்பிங் மால்...

சமீபத்தில் நான் ஒரு ஷாப்பிங் மாலுக்கு எனது இரண்டு குட்டி மகள்களுடன் சென்றிருந்தேன். திடீரென ஒரு இளம் ஆண் என்னை பின் தொடர ஆரம்பித்தான். நான் போகும் இடமெல்லாம் பின் தொடர்ந்தான். ஒரு இடத்தில் நான் நின்றுக் கொண்டிருந்த போது, என்னை நோக்கி அருகே நடந்து வந்தான்... எனக்கு சித்தப்பிரமை பிடித்தது போல ஆகிவிட்டது...

அருகே வந்தவுடன் எந்த ஒரு தயக்கமும் இன்றி, உன்னோடு நண்பனாக இருக்கலாமா? என கேள்வி கேட்டான். (அது நட்பிற்காக அவன் போட வந்த நங்கூரம் இல்லை)

அச்சமயத்தில்...

அச்சமயத்தில்...

அவன் கேள்வி கேட்டு முடிக்கும் அந்த சமயத்தில் என குட்டி தேவதை ஓடிவந்து, ஆனது சட்டையை பிடித்து இழுத்து "அம்மா..." என்று கூவினாள்... எந்த பதிலும் நான் கூறவில்லை... அவனும் எதிர்பார்க்கவில்லை, எதிரெதிர் திசையில் நடந்து சென்றுவிட்டோம்.

அவன் வந்து என்னை அணுகியது நட்பிற்காக அல்ல, நான் திருமணமான பெண்ணிற்கான எந்த அங்க அடையாளத்துடன் இன்றி, இளமையுடனும், வடிவுடனும் இருந்த ஒற்றை காரணம் தான் அவனை என்னிடம் நட்பை கருவியாக கொண்டு அணுக ஊக்குவித்துள்ளது.

ஒரு பெண் திருமணம் ஆகாதவள் என்றால், அவளை அணுகலாம் என்பது எந்த சட்டம் கொடுத்த உரிமை?

மற்றொரு சம்பவம்...

மற்றொரு சம்பவம்...

ஆன்லைனின் உபகரணங்கள் விற்கும் வியாபராம் செய்து வருபவர் எனது தோழி. ஆன்லைன் வியாபாரம் என்பதால், அவளது தொடர்பு எண் பல விளம்பரங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். இது தொழில் ரீதியாக, பொருட்களின் தகவல் ரீதியாக அவளை கஷ்டமர்கள் அணுக வேண்டும் என்பதற்காக கொடுக்கப்படும் எண்.

ஆனால், அந்த எண்ணை யாரும், அதற்காக மட்டும் பயன்படுத்துவது இல்லை. முக்கியமாக நடுவயது சோ கால்டு ரோமியோக்கள்.

தொல்லை...

தொல்லை...

ஒரு அங்கிள், தொழில் ரீதியாக அல்லாமல் கேள்விகள் கேட்க துவங்க, எனது தோழி திருமணம் ஆகிவிட்டது என கூறினாள். அப்போதும் அந்த அங்கிளுக்கு அவள் மீதான மோகம் குறையவில்லை. மீண்டும், மீண்டும் கால் செய்துக் கொண்டே இருக்க, அந்த எண்ணை பிளாக் செய்துவிட்டாள்.

இது போல, எல்லா துறையை சேர்ந்த பெண்களும் தினம், தினம் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் வாழ்ந்து வருகிறார்கள்.

யோசிக்கவே மாட்டீங்களா?

யோசிக்கவே மாட்டீங்களா?

பெரும்பாலான ஆண்கள், காலை எழுந்ததும் ரெடியாகி வேலைக்கு செல்வது, வேலை முடித்து வீடு திரும்பவது என்று தான் வாழ்ந்து வருகிறீர்கள்.

ஆனால், பெண்கள் அப்படி இல்லை. வேலைக்கு சென்றாலும் கூட, சமையல் செய்ய வேண்டும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும், பிறகு வேலைக்கு செல்ல வேண்டும், மீண்டும் மாலை பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டிற்கு பத்திரமாக அழைத்து வர வேண்டும். நீங்கள் வீடு திரும்பிய பிறகு உங்கள் வயிறு "பசி" என கத்தும் முன்னர் தட்டில் சாப்பாடு ரெடியாக இருக்க வேண்டும்.

ஓரமா போய் பேசித்தொலை!

ஓரமா போய் பேசித்தொலை!

இதற்கெல்லாம் நடுவே, காணாததைக் கண்டது போல, கண்களால் எடைப்போட்டு, தேகத்தை உரசி பிழிந்து, அடல்ட் ஜோக்குகளில் சிறைப்பிடித்து எங்களை நோகடிப்பீர்கள்.

எத்தனை முறை தான் நினைவுப்படுத்துவது, உங்கள் வீட்டில் இருக்கும் அதே பெண்களை போன்றவள் தான் நானும் என்பதை...

பேசுறது தான் பேசுற... காதுப்பட பேசி தான் உச்சம் அடையனுமா? ஓரமா போய் பேசித்தொலைய வேண்டியது தானே...

ரேண்டம் ரோமியோஸ்...

ரேண்டம் ரோமியோஸ்...

நான் அணிந்திருக்கும் பேன்ட், ஷர்ட் உடைக்குள் மறைந்திருக்கும் தாலி உங்கள் கண்களுக்கு புலப்படாமல் போகலாம், அதற்காக என்னை ட்ரை பண்ணலாம் என அணுக வேண்டாம். உண்மையாகாவே திருமணமாகாத பெண்ணாகவே இருப்பினும், அவளை அணுக உங்களுக்கு உரிமை இல்லை.

காதலை தெரிவிப்பதற்கும், நட்பென்ற வார்த்தை பயன்படுத்தி நம்பர், ஃபேஸ்புக் ஐடி கேட்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன.

உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெண், இப்படி ஒரு ஆணை அணுகி, உன் கூட பிரெண்டா இருக்கலாமா? உன் நமபர் கொடு... என தெருவில் அலைந்துக் கொண்டிருந்தால் என்ன செய்வீர்கள்? அதையே உங்கள் வீட்டு ஆண் மகன்களுக்கும் செய்யுங்கள். உருப்படட்டும்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

If a Woman is not Married, It Does not Mean That She is Available!

Dear Men, We May Not Look "Married" But I Swear It Doesn't Mean We're "Available".
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more