என் குழந்தை ஒரு விபச்சாரியை கண்டு சிரிக்க எனக்கு விருப்பமில்லை... நான் கடந்து வந்த பாதை #11

Posted By:
Subscribe to Boldsky

ஓர் விலைமாது தாயின் கண்ணீர் கதை....

"நான் அவனை கொல்ல ஒருபோதும் விரும்பியதில்லை. அதற்கு மாறாக, அவன் எனது வாழ்வில் என்னுடன் சேர்ந்திருக்க தான் ஆசைக் கொண்டேன். ஆனால், எனக்கு தெரியும், யார் அவனை கண்டுபிடிக்க முடிந்தால், அவனை கொல்ல தான் முயற்சி செய்வார்கள்.

https://www.facebook.com/gmbakash/photos/a.262454117152683.63612.260876280643800/1355344911196926/?type=3

Image Courtesy: GMB Akash

என்னால் அவனை மாதக்கணக்கில் யாரிடமும் கூறாமல் மறைத்து வைக்க முடியும். சில நாட்களில் காலை உறங்க செல்லும் போது, எனக்கு நானே கேட்டுக் கொள்வேன், என் வாழ்வில் இணைய மாட்டான் என தெரிந்த ஒருவனை தண்டித்து என்ன பயன்? அவன் என்னுடன் இணைவான் என்ற ஒரு "நாளை" இல்லவே இல்லை...."

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அச்சமின்றி!

அச்சமின்றி!

"என் வாழ்வில் நான் அவனுடன் மட்டும் தான் அச்சமின்றி பேசி வந்தேன். என்னை பிரிய மாட்டேன் என வாக்குறுதி அளித்து, வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க செய்தவனும் அவன் மட்டுமே."

மேடம் இதை அறிந்தார்...

மேடம் இதை அறிந்தார்...

"ஒரு நாள் என் மேடம் நான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தார். என் வயிற்றில் வளரும் குழந்தையை கொன்று விட வேண்டும் என முயற்சி செய்தார். அடித்து, உதைத்த போதிலும் நான் அதற்கு இணங்கவில்லை.

அவரது கால்களை விடாமல் பிடித்துக் கொண்டு அழுதேன், கெஞ்சினேன். நான் வாழ ஒரு வாய்ப்பு அளியுங்கள் என கேட்டுக் கொண்டேன். ஒரு அளவிற்கு மேல், அவர் என்னை தள்ளுவதை விடுத்து, செவிக் கொடுத்து கேட்க ஆரம்பித்தார்."

வருத்தப்படுவாய்...

வருத்தப்படுவாய்...

"நீ இந்த குழந்தையை பெற்றெடுத்தால் நிறைய வருத்தப்படுவாய் என கூறினார். வாழ்நாள் முழுக்க இது உனக்கு வலியை தரும் என கூறினார். நேரம் வந்தது, குழந்தையும் பிறந்ததது. "

அதிக இரத்தப்போக்கு!

அதிக இரத்தப்போக்கு!

"குழந்தை பிறந்த நேரம் எனக்கு ஈனு கால வலிப்பு ஏற்பட்டது. நிறைய இரத்தபோக்கு உண்டானது. அந்த கடுமையான நேரங்களிலும் கூட நான் என் குழந்தையுடன் பேசுவதை நிறுத்தவில்லை. அவனது காதருகே மெல்லிய குரலில் என்னால் முடிந்த வரை அவனுடன் பேசினேன். நீ பெரிய பயணம் மேற்கொள்ள் வேண்டும் என அவனுக்கு அறிவுரைத்தேன்."

மூன்று மாத குழந்தை...

மூன்று மாத குழந்தை...

"அப்போது அவன் மூன்று மாத குழந்தை. அவனுக்கு பறவைகள் என்றால் மிகவும் பிரியம். ஆனால், நாங்கள் கூண்டில் அடைப்பட்டு கிடந்ததால், அவனுக்கு பறவைகளை காட்ட முடியாமல் போனது."

மீண்டும் சென்றேன்...

மீண்டும் சென்றேன்...

"எனக்கான வாடிக்கையாளர்களை மீண்டும் எதிர்கொள்ள வேண்டிய சூழல், கட்டாயம் ஏற்பட்டது. மீண்டும் பாலியல் தொழிலில் வேலை செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும், என்றோ ஒருநாள் என் குழந்தை என்னை மிகவும் வெறுக்க போகிறான் என்ற அச்சம் மட்டும் என்னை தொற்றிக் கொண்டே இருந்தது."

சிரித்தான்!

சிரித்தான்!

"ஆனால், அவன் எனக்கு அப்போது அளித்த பரிசு அவனது புன்னகை தான். ஒவ்வொரு முறையும் என்னை பார்க்கும் போது அவன் சிரிப்பான். மூன்றுமாதம் 21 நாட்கள் ஆன நிலையில் அவனுக்கான வாழ்க்கை அவனை தேடி வந்தது."

குழந்தை அற்ற தம்பதி!

குழந்தை அற்ற தம்பதி!

"குழந்தைகள் இல்லாத ஒரு தம்பதி, எனது குழந்தையை தத்தெடுத்துக் கொண்டனர். ஆனால், எனது மேடம் முராதை (Murad) அவர்களிடம் கொடுக்காதே, உன்னால் அவன் இல்லாமல் வாழ முடியாது என கூறினார். ஆனால், எனக்கென்னவோ, முராத் அவர்களுடன் செல்வது தான் சரி எனப்பட்டது."

கை நிறைய பணம்!

கை நிறைய பணம்!

"அந்த பெண் எனது பையில் ஒரு கட்டு பணம் கொண்டு வந்து கொடுத்தார். அவர்கள் கடைசியாக ஒருமுறை முராதை என்னிடம் காண்பிக்க அருகில் வந்தனர். அவர்கள் நகரும் போது அந்த பணத்தை அவர்களிடமே கொடுத்து அனுப்பினேன்..."

பறக்க செய்யுங்கள்...

"எனது மகன் கூண்டில் பறவையாக இருப்பதை நான் விரும்பவில்லை. அவன் ஆகாயத்தில் பறக்க வேண்டும். உங்களால் முடிந்தால் அதை மட்டும் செய்யுங்கள் என அந்த தம்பதியிடம் கேட்டுக் கொண்டேன்."

"என் மகன் ஒரு விபச்சாரியை கண்டு சிரிப்பதில் எனக்கு விருப்பமில்லை....."

- மெமோதா

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

I do not want my child to smile at a prostitute, A Story of Momota!

I do not want my child to smile at a prostitute, A Story of Momo
Please Wait while comments are loading...
Subscribe Newsletter