கருப்பு சந்தையில் உங்கள் உடல் என்ன விலைக்கு பேரம் போகிறது என தெரியுமா?

Subscribe to Boldsky
How Much The Human Body Is Worth In The Black Market?

Cover Image Credit: scottcarney

நம்மள யாருங்க மதிக்கிறாங்க... இது என்ன வாழ்க்கை என புலம்பும் நபரா நீங்க? அட! இந்த உலகத்துல ஆரோக்கியமா உலாவிட்டு இருக்க ஒவ்வொரு நபரும் கோடீஸ்வரர் தான். எப்படின்னு கேட்கிறீங்களா? நிஜ உலகில் அல்ல. அண்டர்வேர்ல்ட் எனப்படும் கருப்பு உலகில். கருப்பு சந்தை எனப்படும் இல்லீகல் தொழிலில் மனிதரின் உடல் உறுப்புகள் நாம் கற்பனை செய்து முடியாத அளவுக்கு விற்பனைக்கு போகிறது.

ஆம்! இதெல்லாம் இலட்ச ரூபாயா? என நீங்கள் வாய் பிளக்கும் அளவுக்கு விலை வைத்து விற்கிறார்கள். இதற்காக தான் உலகளவில் பல கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. பல நிழல்வுலக திருடர்கள். பெண்களை, சிறு குழந்தைகளை கடத்தி. முதலில் அவர்களை பாலியல் தொழில் இறக்கி பிறகு அவர்கள் மூலம் முடிந்த வரை சம்பாதித்துவிட்டு. கடைசியில் அவர்களை கொண்டு உடல் உறுப்புகளையும் விற்று விடுகிறார்கள்.

இதோ! கருப்பு சந்தையில் மனிதரின் ஒவ்வொரு உடல் உறுப்பும் அதிகபட்சம் எத்தனை விலைக்கு போகிறது என்பதன் பட்டியல்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீரகம் - 1,34,19,290

சிறுநீரகம் - 1,34,19,290

பெரும்பாலும் மனித உடலில் இருந்து திருடி கருப்பு சந்தையில் விற்கப்படும் உடல் உறுப்பாக இருப்பது சிறுநீரகம் தான். ஏறத்தாழ 75% சிறுநீரகங்கள் கருப்பு சந்தையில் விற்கப்படுவதாக சர்வே தகவல்கள் மூலம் அறியப்படுகிறது. எனவே, கருப்பு சந்தையில் சிறுநீரகம் விற்கப்படுவதை கண்டு யாரும் அதிர்ச்சி அடைவதில்லை.

கல்லீரல் - 1,07,35,432

கல்லீரல் - 1,07,35,432

ஒரு ஆராய்ச்சியில், மற்ற நோய்களை காட்டிலும், கடந்த ஆண்டுகளில் கல்லீரல் நோய் மக்கள் மத்தியில் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டது. பலரும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள காத்திருக்கிறார்கள். இதன் காரணமாக தான் கருப்பு சந்தையில் கல்லீரல் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இதயம் - 79,84,477

இதயம் - 79,84,477

லீகலாக ஒருவரிடம் இதயத்தை கேட்டு வாங்கி அறுவை சிகிச்சை செய்ய முடியாது. தானம் செய்த நபர் இறந்திருக்க வேண்டும். இறந்த பிறகு அவரது உடலில் இருந்து சரியான நேரத்திற்குள் அந்த இதயம் எடுக்க வேண்டும். எடுத்த இதயம், பொருத்தப்படும் நபருக்கு சரியாக பொருந்த வேண்டும். மேலும், அந்த இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதனால், இதய மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகவும் கடினமானது. இதனால் தான் கருப்பு சந்தையில் இதயத்திற்கு நிறைய கிராக்கி என்கிறார்கள்.

கருவிழி - 1,02,322

கருவிழி - 1,02,322

சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை பணத்திற்காக தானம் தருபவர்கள் இருக்கிறர்கள். ஆனால், கருவிழி? யாரும் வர மாட்டார்கள். இதயத்தை போலவே, கருவிழியும் தானம் மூலமாக மட்டுமே பெற முடியும். அதிலும், நோய் மூலம் பார்வை இழந்தவர்கள் கதி மிகவும் கடினம். இவர்கள் தான் கருவிழியை கருப்பு சந்தையில் பெற காத்திருக்கிறார்கள்.

எலும்பு மஜ்ஜை - 15,43,218

எலும்பு மஜ்ஜை - 15,43,218

எலும்பு மஜ்ஜைக்கு இத்தனை கிராக்கி இருக்கிறதா என்பதை யாராலும் அறிந்துக் கொள்ள முடியாது. ஆம்! குறுகிய காலத்தில் கிராம் கணக்கில் எலும்பு மஜ்ஜை விற்று பணக்காரர் ஆகலாம் என்கிறார்கள். ஆனால், அரசியல் சட்டம் என்ன கூறுகிறது தெரியுமா? எலும்பு மஜ்ஜையை தானம் செய்யலாமே தவிர, விற்க கூடாது என்கிறது. இது இல்லீகல்.

கரு முட்டை - 8,38,705

கரு முட்டை - 8,38,705

அமெரிக்காவில் ஒரு சட்டம் இருக்கிறது. லீகலாக கரு முட்டையை விற்கலாம். குழந்தை வேண்டும் நபர்கள் ஆரோக்கியமான கரு முட்டைகளை வாங்கி குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால், இதற்கு ஆகும் செலவு மிகவும் அதிகம். இதை குறைத்துக் கொள்ள தான் பலரும் கருப்பு சந்தையை நாடுகிறார்கள். கரு முட்டைக்கு மட்டுமல்ல, ஆண்களின் ஆரோக்கியமான விந்துக்கும் கருப்பு சந்தையில் விலை உள்ளது.

கரோனரி அரிமா (Coronary Artery ) - 1,02,322

கரோனரி அரிமா (Coronary Artery ) - 1,02,322

கரோனரி அரிமா மாற்று அறுவை சிகிச்சைக்கும் அதிக பேர் காத்திருக்கிறார்கள். கருப்பு சந்தையில் இதன் மதிப்பு 1,02,322 ரூபாயாக இருக்கிறது. உறுப்புகளை காட்டிலும் இதை வாங்க நிறைய பேர் காத்திருக்கிறார்களாம்.

சிறுகுடல் - 1,69,015

சிறுகுடல் - 1,69,015

இது மிகவும் அரிதான மற்றும் கடினமானதும் கூட. உலகில் மிக சில மருத்துவர்கள் மட்டுமே சிறுகுடல் மாற்று சிகிச்சை செய்கிறார்கள். பெரும்பாலும் இது தோல்வியில் தான் முடிகிறது. அப்படி இருந்தாலும், இதன் விலை 1,69,015 ரூபாயாக இருக்கிறது. இதையெல்லாம் திருடி தான் கருப்பு சந்தையில் விற்கிறார்கள்.

பித்தப்பை - 81,790

பித்தப்பை - 81,790

பித்தப்பை கற்கள் பிரச்சனை அதிகரித்து காணும் நபர்களுக்கு பித்தப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும், எளிதாக இந்த உறுப்புக்கு தானம் தருவோர்கள் கிடைக்க மாட்டார்கள். எனவே, இந்த சிகிச்சை என்பது மிகவும் கடினமானது.

இரத்தம் - 1677-22,812

இரத்தம் - 1677-22,812

இரத்தம் மிக எளிதாக தானம் கிடைக்கும் பொருள். ஆயினும், சில அரிய வகை இரத்தங்கள் வங்கியில் கூட இருக்காது. அதை தேடிப்பிடித்து திருடி விற்கிறார்கள். ஆயினும் மற்ற உறுப்புகளின் விலையுடன் ஒப்பிடுகையில் இதன் விலை கொஞ்சம் குறைவு தான்.

கண்கள் - 1,02,322

கண்கள் - 1,02,322

கருவிழிகளுக்கும், கண்களுக்கும் கருப்பு சந்தையில் ஒரே விலை தான். ஆனால், இந்த மாற்று அறுவை சிகிச்சை தான் கொஞ்சம் கடினம். மிகவும் அவசியமாக இருந்தால் தான் இந்த சிகிச்சையை செய்கிறார்கள் மருத்துவர்கள்.

மொத்த மதிப்பு

மொத்த மதிப்பு

ஆக, சிறுநீரகம் முதல் கண்கள் வரை என ஒரு மனிதனின் உடலில் இருக்கும் உறுப்புகள் கருப்பு சந்தையில் மூன்று கோடியே ஐம்பத்தி ஒரு இலட்சத்து ஆயிரத்து எழுநூற்று ஐந்து ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சிறுநீரகம் - 1,34,19,290

கல்லீரல் - 1,07,35,432

இதயம் - 79,84,477

கருவிழி - 1,02,322

எலும்பு மஜ்ஜை - 15,43,218

கரு முட்டை - 8,38,705

கரோனரி - 1,02,322

சிறு குடல் - 1,69,015

பித்தப்பை - 81,790

இரத்தம் - 1677-22,812

கண்கள் - 1,02,322

மொத்தம் = 3,51,01,705!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    How Much The Human Body Is Worth In The Black Market?

    How Much The Human Body Is Worth In The Black Market?
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more