For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சந்தோஷமான சூழ் நிலையை எப்படி உருவாக்குவது?

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் எத்தகையை வாழ்க்கிய முறையை வாழ் வேண்டும் என இந்த கட்டுரையில் காணலாம்.

By Ambika Saravanan
|

மனித வாழ்க்கை என்பது இறைவன் நமக்கு அருளிய ஒரு வரம். கிடைத்த இந்த வாழ்க்கையை நாம் இன்பமாக அனுபவிப்பது நாம் கையிலேயே உள்ளது.

சந்தோஷம் என்பது நாமாக உருவாக்குவது. நாம் எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருக்க கற்று கொண்டுவிட்டால் நம்மை விட சிறந்தவர் இந்த உலகில் இல்லை. நம்மை நாம் எப்படி சந்தோஷமாக வைத்து கொள்வது...? இந்த கேள்விக்கு விடையே இந்த தொகுப்பு!

பின்வரும் இந்த 8 விஷயங்கள் நமது சந்தோஷத்தை உருவாக்குகின்றன.

How to lead a happy life

1. உடற் பயிற்சி செய்யுங்கள் :

உடற் பயிற்சி என்றவுடன் மணி கணக்கில் வியர்த்து கொட்டி செய்யும் ஒரு பயிற்சி என்று நினைக்க வேண்டாம். ஒரு நாளைக்கு 7 நிமிடங்கள் உடற் பயிற்சி செய்தால் போதுமானது. அது நம் உடலை புத்துணர்ச்சி அடைய உதவுகிறது. மன அழுத்தத்தில் இருந்து நாம் விடு பெறுவதோடு மறுமுறை மன அழுத்தம் வராமல் இந்த பயிற்சி நம்மை காக்கிறது என்று "த ஹப்பின்ஸ் அட்வான்டேஜ் " என்று நூலில் குறிப்பிடப் படுகிறது.

2.அதிகமாக உறங்குங்கள் :

ஒரு மனிதனின் சராசரி உறங்குவதற்கான நேரம் 7-8 மணி நேரம். இந்த உறக்கம் பெரும்பாலும் எதிர்மறை உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறது. தூக்கம் நமது இன்றைய நாளில் எல்லா உணர்வுகளில் இருந்தும் நம்மை மீட்டு எடுக்கிறது. மறுநாள் நம் வேலையில் நம்மை புது உத்வேகத்தோடு செயல் பட தூண்டுகிறது. குறைந்த தூக்கத்தினால் மூளையின் ஆற்றல் குறைகிறது.

3. சிறிய பயணம் மேற்கொள்ளுங்கள் :

அவ்வப்போது ஒரு சிறிய பயணத்தை மேற் கொள்ளுங்கள். பயணம் என்பது பேருந்தை பிடித்து அல்லது இரயிலை பிடித்து வெளிஊருக்கு செல்வதோ அல்லது விமானத்தை பிடித்து வெளி நாட்டிற்கு செல்வதோ மட்டும் இல்லை. நாம் இருக்குமிடத்தில் இருந்து சற்று அருகிலிருக்கும் வேறு ஒரு இடத்திற்கு செல்லுதல். தினமும் செல்லும் அலுவலகம் கூட இந்த பயணத்தில் வேறு விதமாக தோற்றமளிக்கலாம். தினமும் வாகனத்தில் செல்லும்போது ஒரு நாள் நடந்து செல்ல முயற்சிக்கலாம்.

4. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவழியுங்கள்:

பொதுவாகவே பலர் தமது குடும்பத்துக்காக பொருள் தேடுவதற்காகத்தான் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வேலைபார்க்கின்றனர். குடும்பத்துடன் இருந்தாலும் பல மணி நேரங்கள் அலுவலகத்தில் மூழ்கி விடுகின்றனர். ஒரு பக்கம் அவர்கள் நினைத்தபடி குடும்பத்துக்காக பொருட்களை சேர்க்க முடிந்தாலும், அவர்கள் சந்தோசம் தொலைந்து விடுகிறது. ஆகையால் குடுபத்தினர் மற்றும் நண்பர்களுடன் செலவழிக்கும் நேரம் மீண்டும் கிடைக்க முடியாத ஒரு நேரமாகும்.

5. பரிசளியுங்கள் :

நாம் நமக்காக செலவழித்து வாங்கும் ஒரு பொருள் தரும் சந்தோஷத்தை விட அடுத்தவருக்காக செலவழிக்கும் போது அதில் வரும் சந்தோஷம் அதிகமாகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆகையால் முடிந்தபோது நமக்கு பிடித்தவருக்கோ அல்லது நமக்கு நெருக்கமானவர்களுக்கோ பரிசளித்து பாருங்கள். அதன் மூலம் அதிகம் சந்தோஷம் கொள்ளுங்கள்.

6. சிரியுங்கள்:

நன்ராக சிரியுங்கள் . இதன் மூலம் நமது மனதில் அதிகமாக நேர்மறை எண்ணங்கள் தோன்றும். நன்றாக சிரிப்பதன் மூலம் நமது கவனம் அதிகமாகும். இதன் மூலம் அறிவாற்றல்மிக்க வேலைகளை சிறப்பாக செய்ய முடியும். துன்பமான சூழ்நிலையில் சிரிப்பதன் மூலம் நமது வலி சற்று குறைகிறது.

7.தியானம் செய்யுங்கள்:

தியானம் செய்வதால் நமது கவனம் அதிகரிக்கிறது , ஒரு தெளிவு கிடைக்கிறது. மனதை அமைதி படுத்த ஒரு சிறந்த தீர்வாக தியானம் இருக்கிறது. இதன் மூலம் நமது சந்தோஷம் அதிகமாகிறது.

8.நன்றியோடு இருங்கள்:

இந்த வழிமுறை சந்தோஷத்தை மட்டும் அல்ல ஒரு திருப்தியையும் அளிக்கும் . நம்மை சார்ந்தவர்களுக்கும் நமக்கு நல்லது செய்தவர்களுக்கும் நாம் என்றும் நன்றியோடு இருக்க வேண்டும்.

English summary

How to lead a happy life

Tips to lead a happy life
Story first published: Wednesday, August 16, 2017, 15:26 [IST]
Desktop Bottom Promotion