For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த மாதிரியான விமர்சனங்கள் உங்களை பட்டை தீட்டும்?

விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது. அதன் மூலம் எப்படி நம்மை நாமே உயர்த்திக் கொள்ளலாம் என்பது பற்றியதான கட்டுரை இது.

By Ambika Saravanan
|

விமர்சனம் என்பது ஒரு குழுவையோ அல்லது தனி நபரையோ பற்றிய ஒரு மதீப்பீடாக கருதப்படுகிறது . இது அவர்களை காயப்படுத்தும் விதமாகவும் இருக்கலாம். ஆரோக்கியமானதாகவும் இருக்கலாம். இத்தகைய விமர்சனங்களை எதிர் கொள்வதில் பலருக்கும் பலவித அனுபவங்கள் இருக்கும்.

விமர்சனங்களை எதிர் கொள்வது குறித்து சில நுணுக்கங்கள் இங்கே கொடுக்க பட்டுள்ளது. இதனை படித்து பயன் பெற வாழ்த்துகள்!

1. எல்லா விமர்சனங்களுக்கும் நமது நேரத்தை வீணாக்குவது தேவை அற்றது.
2. முக்கியமான தகவல்களுக்கு மட்டும் செவி கொடுத்து மற்ற விஷயங்களை விட்டு விடுவது சாலச் சிறந்தது.
3. எதிர்மறை விமர்சனங்கள் பொதுவாக நமது நேரத்தை விரயமாக்கும். அதனை மூளைக்குள் ஏற்றாமல் இருப்பது நலம்.
4. உங்களை நோக்கி கருத்து தெரிவிக்க வருபவரை அலட்சிய படுத்த வேண்டாம். அவர்கள் மறுமுறை உங்களிடம் சொல்ல நினைப்பதை சொல்ல சௌகரியமாக உணர மாட்டார்கள்.
5. கற்று கொள்வதற்கு அளவுகோல் இல்லை. ஆகையால் முடிந்தவரை கற்று கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும் போது செயலில் இறங்குங்கள்.

How to handle the Face to face feedback

6. உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களையும் உங்கள் குழுவின் வெற்றிக்கான ஊக்கமளிக்கும் ஆலோசனையாக மாற்ற முயற்சியுங்கள்.
7. விமர்சனத்தில் தேவையில்லாத கருத்தை திணிப்பதற்கு பதில் இரண்டு குழுக்களும் ஒத்து போவதற்கான சம இலக்கை பகிர்ந்திடுங்கள்.
8. நீ - நான் என்று பேசுவதற்கு பதில் நாம் என்று பேசி பழகுவோம்.
9. கடினமானதாக இருந்தாலும் நம் கருத்துகளை வெளிப்படுத்த தயங்க வேண்டாம்.
10. எதிர்மறை அல்லது கெட்ட விமர்சனத்தின் மேல் நல்ல விமர்சனத்தை திணிக்க வேண்டாம். நல்லது நல்லதாகவும், கெட்டது கெட்டதாகவும் இருக்கட்டும்.
11. சரியான புரிதலும்,நேர்மறை எண்ணமும் கொண்டு இறுதிவரை எந்த மாற்றமும் இல்லாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

சில விமர்சனங்கள் விலை மதிப்பற்றது. அதை ஏற்று கொள்வதில் வலியும் சிரமும் இருந்தாலும் அதன் மூலம் நமக்கு கிடைக்கும் மதிப்பை நாம் இழந்து விட கூடாது.
"விமர்சனத்தை தனிப்பட்ட முறையில் எடுத்து கொள்ளாமல் எப்படி தீவிரமாக எடுத்துக்கொள்வது என்பது முக்கியம்" என்று குறிப்பிடுகிறார் ஹில்லரி கிளின்டன்.
நம்மீதான விமர்சனங்கள் வரும்போது பின் வரும் கேள்விகளை உங்கள் மனதில் கேட்டு பாருங்கள்.

1.இந்த விமர்சனம் என் மதிப்பை உயர்த்துமா?
2. இந்த விமர்சனத்தில் அந்த நபர் என்ன சொல்ல வருகிறார்?
3. நான் இதை என் தனிப்பட்ட முறையில் எடுக்க வேண்டுமா?
4. இந்த விமர்சனத்தின் மூலம் என்னை நான் சிறந்தவளாக மாற்ற முடியுமா?
5.என் வெற்றிக்காக புதிய செயல்களை இந்த விமர்சனத்தின் மூலம் செய்ய முடியுமா?
6. இந்த விமர்சனங்கள் செய்தவருக்கு நான் என் நன்றியை பரிசளிக்க முடியுமா?

இதன் விடைகளை பொறுத்து இந்த விமர்சனங்களை ஏற்கலாம் வேண்டாமா என்ற முடிவுக்கு வாருங்கள்...

விமர்சனங்கள் உங்கள் குறிக்கோளை தடுக்க முடியாது.
அற்புதமான விஷயங்களை உருவாக்குங்கள். அதனை இந்த உலகத்துக்கு கொடுத்து நீங்கள் பார்க்க விரும்பும் உலகத்தை உருவாக்குங்கள்.
மற்றவர்களோடு சேர்ந்து பயணிக்காமல் நீங்கள் புது வழியை தெரிவு செய்யுங்கள்.
விமர்சனங்கள் சிலநேரம் அற்புதமான விஷயங்கள் செய்வோரை குழி தோண்டி புதைத்து விடும் .ஆகையால் அவை நம்மை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
நம்மை விமர்சிப்பவர்களை ஒரு போதும் கோபத்தோடு அணுக வேண்டாம். இதன் விளைவுகள் நல்லதை கொடுக்காது. அந்த நேரம் அமைதியாக இருப்பது நல்லது.

English summary

How to handle the Face to face feedback

How to handle the Face to face feedback
Story first published: Monday, August 21, 2017, 15:31 [IST]
Desktop Bottom Promotion