நயன்தாராவின் தெரிந்த கதை ஃபிளாஷ்பேக் - #HerStory

Posted By:
Subscribe to Boldsky

காதல் தோல்வியின் வலிக்கு, அவர் நடிகையா, ஐ.டி ஊழியரா, ஏழையா, நடுத்தர வர்க்கமா என பாகுபாடு பார்க்க தெரியாது. சினிமாவில் காணும் ரீல் காதல் தோல்விகளை கண்டு வருந்தும் அளவிற்கு கூட சினிமா நடிகர், நடிகைகளின் காதல் தோல்விக்கு யாரும் வருந்துவதில்லை. வருந்த வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.

From Sizzling Star to Lady Superstar!

ஆனால், அதுகுறித்த நமது கேலி, கிண்டல்கள் அவரை புண்படுத்தும் என்பதை உணர்ந்தால் மட்டுமே போதுமானது. ஆரம்பக் காலம் முதலே சினிமாவில் ஒரு பெண் நடிக்கிறாள் என்றால் அவளும் "தேவர் அடியாள்" வேலை பார்ப்பவள் என்ற சிந்தனை நம் சமூகத்தில் ஆழப் பதிந்துள்ளது. ஆழப்பதிந்த சிந்தனைக்கு ஏற்ப சம்பவங்கள் திரைத்துறையில் நடக்காமல் ஒன்றுமில்லை.

குடும்ப பாங்கான வேடங்கள் ஏற்று, கவர்ச்சி நடிகையாகி, காதல் தோல்விகளை கடந்து இன்று முன்னணி நடிகர்களின் அளவிற்கு தனக்கான தனி ரசிகர் பட்டாளம், பாக்ஸ் ஆபீஸ் ஓபனிங் என லேடி சூப்பர்ஸ்டாராக மாறிய நடிகை பற்றிய சிறு தொகுப்பு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டயானா...

டயானா...

டயானா என்ற பெயர் வைத்துவிட்டாலே அவர்களது வாழ்க்கை சர்ச்சைக்குள்ளாகிவிடும் என்பது விதியோ என்னவோ... இளவரசி டயானா முதல் டயானா மரியா குரியன் (எ) நயன்தாரா வரை இது ஒத்துப்போகிறது.

அந்த டயானாவிற்கும் இந்த டயானாவிற்கும் இருக்கும் ஓர் ஒற்றுமை காதல், அதனால் அவர்களை துரத்திய கேமரா கண்கள். அவர் மர்மான முறையில் இறந்தார். இவர் காதலில் இறந்து மீண்டும் தன் துறையில் சாதித்து வருகிறார்.

வல்லவன்!

வல்லவன்!

ஐயா, சந்திரமுகியில் நடித்த பெண்ணா இது... என வாய்பிளந்து காண வைத்தது நயனின் அடுத்ததடுத்த படங்களும், வேடங்களும். உடல் எடை போல, கவர்ச்சி எடையும் கூடிக் கொண்டே போனது நயன்தாராவிற்கு. வல்லவனில் சிம்புவுடன் முதல் முறையாக இணைந்தார். இவர்கள் இருவருக்கும் நடுவே காதலும் இணைந்தது.

லிப்-லாக்

லிப்-லாக்

இருவரும் தாங்கள் காதலிப்பதாக ஒப்புக் கொண்டனர். வல்லவன் நேரத்தில் இவர்கள் இருவரும் ஹோட்டல் அறையில் எடுத்துக் கொண்ட லிப்லாக் படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. அதைவிட எக்ஸ்ட்ரா - ஹாட் லிப்லாக் படம் பெரியளவில் போஸ்டர்களில் பிரமோஷனில் பயன்படுத்தியிருந்தார்கள்.

ஏறத்தாழ அடுத்தது திருமணம் தான் என அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த தருணத்தில், யார் பற்ற வைத்த நெருப்போ... இவர்கள் காதலை பிரிய செய்தது.

வில்லு!

வில்லு!

இனி காதலே வேண்டாம் என நயன்தாரா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அசின் பாம்பேவிற்கு மூட்டைக்கட்டிய நேரம் தமிழ்நாட்டின் முன்னணி நடிகையாக மாறினார் நயன்தாரா. ஆனால், அவரது கவர்ச்சி வேடங்கள் ஏதும் மாறவில்லை. வில்லு படத்தில் இவரது லோ-ஹிப் உடைகள் இவரது நடிப்புக்கு வாய்ப்பளிக்கவில்லை.

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்

ஏற்கனவே மகன் இறந்த சோகத்தில் இருந்த இயக்குனர் பிரபு தேவாவிற்கும், காதல் தோல்வியில் இருந்த நயன்தாராவுக்கும் சோகத்தில் காதல் மலர்ந்தது. பிரபு என்ற பெயரை பச்சைக்குத்தி கொள்ளும் அளவிற்கு காதல் பெருக்கெடுத்து ஓடிய தருணம் அது. இருவரும் லிவ்-இன் உறவில் இருந்தனர்.

நடிப்புக்கு முழுக்கு

நடிப்புக்கு முழுக்கு

பிரபு தேவா ஏற்கனவே திருமணமானவர் என்பதால் இவர்களது திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டது. நயன்தார இந்து மதத்திற்கு மதம் மாறிவிட்டார் என்ற செய்திகள் எல்லாம் கூட வெளியாகின. நடிப்புக்கு முழுக்கு போடப்போவதாக நயன்தார கூறியதும், பிரபுதேவா விவாகரத்து பெற்றதும், நயன் - பிரபு தேவா கல்யாணத்தின் முதற்படியாக காணப்பட்டது.

ஸ்ரீராமா ராஜ்ஜியம்!

ஸ்ரீராமா ராஜ்ஜியம்!

ஸ்ரீ ராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தில் சீதை வேடம் ஏற்றது தான் தனது கடைசி படம் என கூறியிருந்தார் நயன்தாரா. நயன்தாரா எப்படி சீதா பாத்திரத்தில் நடிக்கலாம். இவர் ஒழுக்கம் கெட்டவர் என ஒரு கூட்டம் போர்க்கொடி தூக்கியது. இந்த கண்டனம் நயனை மனதளவில் பெரிதாக பாதிப்படைய செய்தது.

கண்டனம்!

கண்டனம்!

இயக்குனரும், தயாரிப்பாளரும் சப்போர்ட் செய்து, நயன்தாராவையே சீதையாக நடிக்க வைத்து படத்தை முடித்தனர். தான் சீதையாக நடிப்பதால் உணவில் இருந்து பழக்க வழக்கங்கள் வரை பல மாற்றங்கள் ஏற்படுத்திக் கொண்டு நடித்து கொடுத்தார்.

படப்பிடிப்பின் கடைசி நாளின் போது கண்ணீர் மல்க நன்றி கூறி விடைப்பெற்றார் நயன்தாரா. படத்தில் சீதையின் பாத்திரத்தை நயன்தாரா சிறப்பாக நடித்திருந்தார் என பாராட்டுக்கள் குவிந்தன. சிறந்த நடிகைக்கான விருதும் வென்றார்.

மீண்டும் பிரிவு!

மீண்டும் பிரிவு!

அடுத்த என்ன திருமண வாழ்க்கை தானே என்று அனைவரும் எதிர்பார்க்க மீண்டும் விடாமல் புயல் அடித்தது நயன்தாராவின் வாழ்க்கையில். தனது குழந்தைகள் மீதான அன்பை காரணம் காட்டி பிரிந்தார் பிரபு தேவா. இனிமேல் என் வாழ்வில் திருமணத்திற்கு இடமே இல்லை என கூறி சென்றார்.

ராஜா, ராணி - ஆரம்பம்!

ராஜா, ராணி - ஆரம்பம்!

அடுத்தடுத்த காதல் தோல்விகள். இனி அவ்வளவு தான் நயன்தாரா, என்ன செய்ய போகிறார் என கேள்விகள் எழுந்து அடங்குவதற்குள். தனது புதிய பரிமாணத்தை வெளிக்கொண்டு வந்தார் நயன்தாரா.

ராஜா ராணி, ஆரம்பம், அனாமிகா,தனி ஒருவன், மாயா என தனது வேறு முகத்தை காட்டி ரசிகர் பட்டாளத்தை பெரிதுப் படுத்தினார். ஹீரோவிற்கு இணையாகவும், ஹீரோ இல்லாமலே தனி ஆளாகவும் தன்னால் திறமைக்காட்ட முடியும் என நிரூபித்தார்.

நானும் ரவுடி தான்...

நானும் ரவுடி தான்...

மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் மலர்ந்தது மற்றுமொரு காதல்... நானும் ரவுடி தான் நடித்துக் கொண்டிருக்கும் போது விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருப்பது போல ஒரு புகைப்படம் வெளியானது.

ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை இவர்கள் இருவரும் தங்கள் காதல் பற்றி ஏதும் வாய் திறக்கவில்லை எனிலும், விருது வழங்கும் விழா, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என இவர்கள் சேர்ந்தே இருப்பது நயன் - விக்னேஷ் காதலர்கள் என்பதை ஊர்ஜிதம் செய்தது.

பாக்ஸ் ஆபீஸ் ராணி!

பாக்ஸ் ஆபீஸ் ராணி!

நானும் ரவுடி தான் தொடர்ந்து, இருமுகம், காஷ்மோரா, டோரா, அறம் என தன்னை ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டாராக புகழும் அளவிற்கு வளர்ந்துள்ளார் நயன்தாரா. அறிமுக இயக்குனர்களை வெற்றிபெற வைக்கும் அளவிற்கு, தான் பிரமோஷன் செய்தால் படம் ஒரே நாளில் கோடிகளை பாக்ஸ் ஆபீஸில் குவிக்கும் என முன்னணி நடிகர்களுக்கு இணையாக நிமிர்ந்து நிற்கிறார் நயன்தாரா.

லேடி சூப்பர்ஸ்டார்!

லேடி சூப்பர்ஸ்டார்!

சொந்த வாழ்க்கை, திரை வாழ்க்கை என இரண்டிலும் பெரும் இடிகளை சந்தித்தவர் நயன்தாரா. வேறு ஒரு நபராக இருந்தால், இன்று அப்படி ஒரு நடிகை இருந்தாரா என்ற தடம் தெரியாமல் போயிருப்பார்.

இயல்பாகவே தைரியமும், துணிச்சலும் கொண்ட பெண்ணாக இருந்ததால் தான் இரண்டு காதல் தோல்விகள், பல எதிர்ப்புகளை கடந்து இன்று லேடி சூப்பர்ஸ்டாராக புகழப்படுகிறார் நயன்தாரா (எ) டயானா!

எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டு

சிறுசிறு தோல்விகளை கண்டு துவண்டு போகும் பெண்களுக்கு நயன்தாராவின் இன்றைய நிலை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான்.

ஆண்கள் ஏமாற்றி சென்றால் ஓரத்தில் உட்கார்ந்து அழுவதை காட்டிலும், அவர்கள் முன்னரே வாழ்ந்து ஜெயித்து காட்டுவது தான் நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சரியான பதில் என்பதை வெளிகாட்டிக் கொண்டிருப்பவர் நயன்தாரா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

From Sizzling Star to Lady Superstar!

From Sizzling Star to Lady Superstar - Lessons to Learn From Nayanthara!