For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  துரதிர்ஷ்டவசமாக பிறந்த நாளிலேயே இறந்த உலக பிரபலங்கள்!

  |
  Famous People Who Died on Their Birthday!

  முன்னோர்கள் எழுதிய நூல்கள் மூலமும், சித்தர்களின் இரகசியங்கள் மூலமாகவும், தொழில்நுட்பங்களின் உதவியோடும் அனைவரும் தேடிக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் சாகாவரம் தான்.

  ஆனால், இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும், அவரது மரணம் என்பது பிறக்கும் நாளிலேயே ஊர்ஜிதம் செய்யப்பட்டு விடுகிறது. விரக்தியின் உச்சத்தைக் காணாத எந்த மனிதனும் தனது மரணத்தை விரும்புவதில்லை. உலகின் அதிகபட்ச இன்பங்களை அனுபவித்திருந்தாலுமே கூட, சாகாவரம் வேண்டும் மக்கள் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்து வருகிறார்கள்.

  மரணம் என்பது பிறக்கும் போது எழுதிவைகப்படும் உயில். ஆனால், ஓர் உயிர் பிறந்த நாளிலேயே மடிவது என்பது துரதிர்ஷ்டவசமான ஒன்று.

  அந்த வகையில் இந்த உலக பிரபலங்கள் மிகவும் துரதிர்ஷ்டசாலிகள்...

  All Image Source: thevintagenews

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஜெர்ட்ரூடு ஆஸ்டர் (Gertrude Astor)

  ஜெர்ட்ரூடு ஆஸ்டர் (Gertrude Astor)

  ஜெர்ட்ரூடு ஆஸ்டர் என்பவர் ஓர் ஆங்கில நடிகை. இவர் 1915 - 1942 வரை இடைப்பட்டக் காலத்தில் நடித்து வந்தவர். இவர் தனது வாழ்நாளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தி கேட் அன்ட் தி கனாரி மற்றும் தி மேன் ஹூ ஷாட் லிபர்டி வாலன்ஸ் போன்ற படங்களில் இவர் நடித்த சிறந்த படங்களாக திகழ்கின்றன. இவர் தனது 90 அகவையில், தான் பிறந்த அதே தினமான நவம்பர் 9ம் தேதி (1977) மரணம் அடைந்தார். இவரது கல்லறை கலிபோர்னியாவில் அமைந்திருக்கிறது.

  ரபேல் (Raphael)

  ரபேல் (Raphael)

  மைக்கேலேஞ்சலோ மற்றும் லியோனார்டோ டா வின்சி வாழ்ந்த காலக்கட்டத்தில் புகழ்பெற்ற மற்றுமொரு கலைஞராக திகழ்ந்தவர் ரபேல். இவரது ஓவியங்கள் எல்லாம் மறுமலர்ச்சி ஏற்படுத்தின என வியந்து கூறுவர். ஆனால், இவரது படைப்புகள் போல இவர் நீண்ட நாள் வாழவில்லை. தனது 37வது பிறந்தநாளில், ஏப்ரல் 6, 1520ல் மரணம் அடைந்தார் ரபேல். இவரது மரணத்தின் காரணம் என தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை.

  சிட்னி பெச்ச்ட் (Sidney Bechet)

  சிட்னி பெச்ச்ட் (Sidney Bechet)

  சிட்னி ஒரு சிறந்த ஜாஸ் சாக்ஸபோனிஸ்ட். இவர் லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவருடன் சேர்ந்த பலமுறை டூயட் பாடல்கள் இசைத்துள்ளார். இவரது இசைக்கு பலர் அடிமையாக இருந்தனர். சிட்னி நுரையீரல் புற்றுநோய் காரணமாக தனது 62வது அகவையில் மே மாதம் 14 ம் நாள் 1959ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

  அமெரிக்காவில் இருந்து பாரிஸ் சென்ற இவரது உடல், பிரான்ஸில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

  இங்க்ரிட் பெர்க்மன் (Ingrid Bergman)

  இங்க்ரிட் பெர்க்மன் (Ingrid Bergman)

  இங்க்ரிட் பெர்க்மன் ஹாலிவுட்டின் சிறந்த நடிகையாக திகழந்தவர். இவர் ஆகஸ்ட் 29, 1915ல் பிறந்தவர். தான் பிறந்த அதே நாளான ஆகஸ்ட் 29, 1982ல் தனது 67வது அகவையில் மரணமடைந்தார். இவர் நீண்ட காலமாக மார்பக புற்றுநோயுடன் போராடி வந்தார். இவர் மூன்று முறை அகாடமி விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பல கிளாசிக் படங்களில் நடித்துப் பெரும் புகழ்பெற்ற நடிகையாவார்.

  காபி ஹர்ட்நெட் (Gabby Hartnett)

  காபி ஹர்ட்நெட் (Gabby Hartnett)

  சார்லஸ் லியோ காபி ஹர்ட்நெட் என்பது இவருடைய முழுப்பெயர் ஆகும். இவர் ஒரு பிரபல பேஸ்பால் வீரர். வரலாற்றில் சிறப்பு மிக்க கேட்சுகளை பிடித்த நபர் என்ற பெருமைக் கொண்டவர். இருபதுக்கும் மேற்பட்ட முறை ஹோம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றிருந்தவர். இவர் தனது 72வது அகவையில், தான் பிறந்த டிசம்பர் 20ம் (1972) மரணம் அடைந்தார்.

  வில்லியம் ஷேக்ஸ்பியர்

  வில்லியம் ஷேக்ஸ்பியர்

  பாடல் மற்றும் நாடகங்கள் எழுதுவதில் பெரும் புலமை பெற்றிருந்த எழுத்தாளர் வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியர். இவர் தனது பிறந்தநாளாக கருதப்படும் ஏப்ரல் 23 அன்றே மரணம் அடைந்தார். இன்று வரை இவர் எப்படி இருந்தார் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. இவர் இறக்கும் இருபது நாட்கள் முன்பு வரை மிகவும் ஆரோக்கியமாக தான் இருந்தார் என கருதப்படுகிறது. இவர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என கருதுகிறார்கள்.

  கிராண்ட் வுட்

  கிராண்ட் வுட்

  கிராண்ட் வுட் என்பவர் ஒரு தலைசிறந்த அமெரிக்க ஓவியர். அமெரிக்க மதம் சார்ந்த ஓவியங்கள் வரைந்த புரட்சி செய்தவர். தனது ஐம்பதுகளில் இவர் மரணம் அடைந்தார். இவர்க்கு கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது என கூறப்படுகிறது. இவர் பிப்ரவரி 13ம் நாளான தனது பிறந்தநாள் அன்றே மரணம் அடைந்தார்.

  ஜியார்ஜ் மெஷின் கன் கெல்லி

  ஜியார்ஜ் மெஷின் கன் கெல்லி

  மெஷின் கன் என்பது ஜியார்ஜ் கெல்லியின் புனைப்பெயர். இவர் ஒரு கொடூரமான வில்லன் என்ற பெயரை பெற்றவன்.கொள்ளை, கொலை, திருட்டு என பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவன். கெல்லி தனது பிறந்தநாளான ஜூலை 18ம் (1954) தேதியே மரணம் அடைந்தான்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Famous People Who Died on Their Birthday!

  Famous People Who Died on Their Birthday!
  Story first published: Friday, December 29, 2017, 13:30 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more