For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்த நடிகையோட வீடியோ வந்துருச்சா?

பிரபலம் என்றால் ஒரு மாதிரியும், சாமானிய மனிதர் என்றால் ஒரு மாதிரியுமான பார்வை ஏன்?

|

சில வாரங்களுக்கு முன் ஒரு பிரபல நடிகை மானபங்கப்படுத்தப்பட்டார். அவரை ஆதரித்தும், நீதி கிடைக்க வேண்டும் என்றும் கேரளா திரையுலக நடிகர், நடிகைகள் போராட்டம் கூட நடத்தினர்.

இந்த தருணத்தில் தான் பலரும், இதே போராட்டம் ஏன் சாமானிய பெண் ஒருவர் பாதிப்படைந்த போது வரவில்லை என கேள்விகள் எழுப்பினர்.

Different Perspective of Public on Molestation and Abusing Issue!

இது ஒரு சமூக பிரச்சனை, இதற்கு ஏன் பிரபலங்கள் குரல் கொடுக்க வேண்டும்? மனிதராக பிறந்த அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை நாம் எந்த தருணத்தில் தான் நினைவுக் கொள்வோம்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சென்றடையும் அளவு!

சென்றடையும் அளவு!

குரல் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், அந்த குரல் எத்தனை தூரம் கேட்கப்படுகிறது. அந்த குரல் வெளிப்பட்டதன் தாக்கமாய் என்ன பலன் கிடைத்தது என்பது மிகவும் முக்கியம். யாரையும் சென்றடையாத குரல் எந்த பலனும் அளிக்காது.

இதற்கு தான் பிரபலங்கள் வேண்டும்!

இதற்கு தான் பிரபலங்கள் வேண்டும்!

எத்தனை பேரை சென்றடைகிறது, அதற்கு அரசு செவி சாய்த்ததா? சட்டங்களில் ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதா? பாதிப்படைந்த நபருக்கு நீதி கிடைத்ததா? குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டரா? அல்லது ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? என பல கேள்விள் ஆழமாய் பதிய பிரபலங்களின் துணை தேவைப்படுகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டம்!

ஜல்லிக்கட்டு போராட்டம்!

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் ஒரு பிரபலம் அல்லது அரசியல்வாதி உங்களுக்கான தீர்வை தேடி தருவார், உங்களுக்காக ஓடோடி வந்து சேவை செய்வார் என காத்திருக்க முடியும். வாடிவாசலும், நெடுவாசலும் யாருடைய போராட்டம், யார் நடத்தும் போராட்டம். யாரால் வெறும் செய்தியாக இருந்தது ஊடகத்தில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. எல்லாம் மக்களால்.

இதுவும் தவறு தான்!

இதுவும் தவறு தான்!

எப்படி பிரபலங்களை அளவுக்கு அதிகமாக மேன்மைப்படுத்தி பார்ப்பது, மிகையாக காண்பது தவறோ. அதே போல பிரபலங்கள் என்பதால் அவர்களை கொச்சைப்படுத்தி பார்ப்பதும், நினைப்பதும் கூட தவறு தான்.

அந்த வீடியோ இருக்கா மச்சி?

அந்த வீடியோ இருக்கா மச்சி?

அன்றாட வாழ்வியலில் ஒன்றென கலந்தது போல தினமும் கற்பழிப்பு, மானபங்க செய்திகளை நாம் பார்த்து, படித்து வருகிறோம். ஆனால், என்றாவது ஒரு சாமானிய பெண் கற்பழிக்கப்பட்ட வீடியோவை கேட்டிருப்போமா? அப்படி ஒரு எண்ணம் மனதில் துளியாவது எழுந்துள்ளதா? இல்லவே இல்லை.

ஏன் அந்த ஆவல்?

ஏன் அந்த ஆவல்?

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை நம் வீட்டில் ஒரு பெண்ணாக காணும் பழக்கம் தான் நம்மில் இருந்தது. ஆனால், அந்த ஒரு பிரபல நடிகை மானபங்கப்படுத்தப்பட்டார் என்றவுடன், அதன் புகைப்படம், வீடியோ இருக்கிறது என தெரிந்தவுடன் அந்த வீடியோவை மட்டும் பார்க்க திடீர் ஆவல் பிறந்தது ஏன்?

ஈரம் இல்லையா?

ஈரம் இல்லையா?

பிரபலமாக இருந்தாலும் அவரும் ஒரு பெண். மேலும், அது ஆபாச வீடியோ அல்ல, ஒரு பெண் சித்திரவதைக்கு ஆளான காணொளிப்பதிவு. இதை கேட்டு வாங்கி பார்க்க எப்படி சிலருக்கு எண்ணம் வருகிறது. இன்றளவும் அந்த காணொளிப்பதிவை கண்டுவிட மனதில் ஈரம் இல்லாத சிலர் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர்.

நாமும் கடந்து வந்திருப்போம்...

நாமும் கடந்து வந்திருப்போம்...

அவர்களை நீங்களும் கண்டிருப்பீர்கள். சிலரை கண்டு சிரித்திருப்போம். சிலரை கண்டு எரிச்சல் அடைந்திருப்போம். ஆனால், இது தவறு என்பதை, இப்படி கேட்பது மனிதத்தன்மையை இழக்கும் செயல் என்பதை எத்தனை பேருக்கு மண்டையில் ஏறும்படி கூறியிருப்போம்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Different Perspective of Public on Molestation and Abusing Issue

Different Perspective of Public on Molestation and Abusing Issue!
Desktop Bottom Promotion