ஏமாற்றப்பட்ட பாலியல் பெண், மோடியிடம் ரூ.13,000 கேட்டு ட்விட்டரில் கடிதம்!

Posted By:
Subscribe to Boldsky

"Demonetization" எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இந்தியர்களால், இந்திய அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வார்த்தை. இதனால் பலன் அடைந்தவர்களை காட்டிலும், பாதிப்படைந்தவர்கள் தான் அதிகம்.

இந்த "demonetization" கறுப்புப்பணம் பதுக்கி வைத்திருக்கும் பணக்கார முதலைகளை தெருவிற்கு கொண்டு வரும் என பிரதமரே கூறினார். ஆனால், அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வழியின்றி தெருவிற்கு வந்தது என்னவோ கீழ்மட்ட மக்களும், ஏழைகளும் தான்.

இந்த தாக்கத்தால் வங்காள தேசத்தில் இருந்து ஏமாற்றப்பட்டு இந்தியா வந்து பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட ஒரு பெண் தன்னிடம் இருக்கும் செல்லாத பணத்தை எப்படியாவது மோடி மாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயிஷா!

ஆயிஷா!

இந்த பாலியல் தொழிலாளி பெயர் ஆயிஷா. ஆயிஷா ஒரு தொழிற்சாலையில் ஒன்பது ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் வாங்கும் வேலையில் பணிபுரிந்து வந்தார்.

அப்போது தான் திடீரென அவருடன் வேலை செய்து வந்த நபர் ஒருவரி இந்தியாவில் அதிக ஊதியத்திற்கு வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை காட்டி ஆயிஷாவை ஏமாற்றினார்.

மும்பை!

மும்பை!

ஏமாற்றி மும்பைக்கு அழைத்து வரப்பட்ட ஆயிஷா பாலியல் தொழில் செய்து வந்த ஒரு புரோக்கரிடம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்கபட்டார்.

பிறகு பல நகரங்களுக்கு ஆயிஷா பாலியல் தொழில் செய்ய அழைத்து செள்ளப்பட்டுலாளர். கடைசியாக ஆயிஷா சென்றடைந்த இடம் புனே.

ரைடு!

ரைடு!

புனேவில் ஆயிஷா தங்கியிருந்த இடத்தில் காவல் துறை ரைடு நடத்தியது. அங்கிருந்து ஆயிஷா போலீஸாரால் மீட்கபட்டட்டார். பிறகு ஆயிஷா ஒரு தொண்டு நிறுவனத்திடம் சேர்க்கப்பட்டார்.

ஆயிஷாவின் விருப்பம்!

ஆயிஷாவின் விருப்பம்!

போலீஸ் நடத்திய விசாரணையில், ஆயிஷா தன்னை தனது சொந்த ஊருக்கே அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். மேலும், பாலியல் தொழில் ஈடுபட்டு வந்த போது, தனக்கு கிடைத்த பணத்தை ஆயிஷா கொஞ்சம் சேர்த்து வைத்துள்ளார்.

ரூ.13,000!

ரூ.13,000!

தன்னிடம் அரசு தடை செய்த பணம் ரூபாய் பதிமூனாயிரம் இருப்பதாகவும். அதை எப்படியாவது மாற்றித் தர முடியுமா என பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் சுஷ்மாவிற்கு கடிதம் எழுதியுள்ளார் ஆயிஷா.

ட்விட்டர் மூலம் உதவி!

ட்விட்டர் மூலம் உதவி!

ஆயிஷா மோடி மற்றும் சுஷ்மவிற்கு எழுதிய கடிதம் ட்விட்டர் மூலமாக மோடி மற்றும் சுஷ்மா ட்விட்டர் அக்கவுன்ட் உடன் டேக் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை பார்த்து யாராவது ஆயிஷாவிற்கு உதவுவார்கள் என அந்த தொண்டு நிறுவனம் பதிலுக்காக காத்திருக்கிறது.

அந்த கடிதத்தில்...

அந்த கடிதத்தில் தான் ஏமாற்றப்பட்டதில் இருந்து மோடிக்கு தனது மொத்த கதையை எழுதியுள்ளார் ஆயிஷா. இது தான் அந்த ட்விட்டர் பதிவு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Request From a Prostitute to Prime Minister of India!

A Request From a Prostitute to Prime Minister of India!
Subscribe Newsletter