அபூர்வமாய் இப்பவும் நடந்து கொண்டிருக்கும் உலக அதிசய நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு!!

Posted By:
Subscribe to Boldsky

உலகம் என்றுமே ஆச்சரியமான புதிர்தான். அதற்குள் என்னனமோ நிறைய புதைந்து இருக்கிறது. நாம் பார்க்கும் , கேள்விப்படும் விஷயங்கள் எல்லாம் சிறு கடுகளவுதான்.

அதனைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்கும்போது அனுமார் வால் போல் நீண்டு கொண்டே யிருக்கும். ஒன்று தோண்ட இன்னொன்று கிளம்பி வருவது போலத்தான் இந்த உலக அதிசயங்களும். தெரிந்து கொள்ள தயாராகுங்கள்.  அதனைப் பற்றி புகைப்படங்களுடன் தகவல்களையும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிலந்தி மரங்கள் :

சிலந்தி மரங்கள் :

பாகிஸ்தானில் வெள்ளம் வந்து நாட்டையே உலுக்கியபோது, சிலந்திகள் மரங்கள் முழுசும் வலைகளாக பின்னி மரமே பிரமாண்ட சிலந்தி வலையாக காட்சியளிக்கின்றன.

நீருக்கடியில் கோலங்கள் :

நீருக்கடியில் கோலங்கள் :

ஜப்பானில் உள்ள ஒரு ஆழ்கடலில் பஃபர் எனப்படும் ஒரு வகை மீன்கள் கோலம் போல் அழகாக வட்ட வடிவில் டிசைன் செய்கின்றன. மிக நேர்த்தியாக இம்மியும் பிசகாமல் ஒரே வடிவத்தில் அது போடும் டிசைன் பார்த்து எல்லாருக்கும் தாங்க முடியாத ஆச்சரியம்.

ரத்தப் போக்குடன் ஒரு பனிப்பாறை :

ரத்தப் போக்குடன் ஒரு பனிப்பாறை :

அன்டார்டிகாவில் இருக்கும் ஒரு பனிப்பாறையில் ரத்த நிறத்தில் ஒழுகியவண்ணம் இருக்கிறதாம். அதற்கு காரணம் இரும்பு ஆக்ஸைடு உப்பு நீருடன் வினைபுரிந்து சிவப்பு நிறத்தில் மாறி இப்படி காட்சி தருகிறது.

ப்ளூ எரிமலை :

ப்ளூ எரிமலை :

எரிமலை சிவப்பாதாங்க இருக்கும்னு நீங்க நினைச்சா இந்தோனோசியாவில் இருக்கிற இந்த நீல நிற எரிமலைக் குழம்பை பாருங்க. பார்க்கவே எவ்ளோ அழகோட இருக்குல்ல.

உப்பு படிந்த பறவைகள் :

உப்பு படிந்த பறவைகள் :

தாஞ்சானியா நாட்டில் உள்ள நேட்ரான் ஏரியில் இருக்கும் பறவைகள் எல்லாம் உப்பு படிந்த நிலையில்தான் இருக்கின்றன. பார்க்கவே ஒரு வித அச்சம் தரக் கூடிய நிலையில் இருக்கின்றன.

கலர்ஃபுல்லான நில அமைப்புகள் :

கலர்ஃபுல்லான நில அமைப்புகள் :

சீனாவில் டான்க்ஷியா எனப்படும் இடத்தில் இருக்கும் நில அமைப்புகள் மிகவும் கவரக் கூடிய வகையில் கலர்ஃபுல்லாக இருக்கிறது. அங்கிருக்கும் கனிமங்கள் இதற்கு காரணமாகும்.

உறைந்த பூக்கள் :

உறைந்த பூக்கள் :

ஆர்டிக் பெருங்கடலில் கடல் முழுக்க உறைந்த ஐஸ் கட்டிகளால் பூக்கள் போல் உறைந்திருக்கும் அழகை இந்த படத்தில் பாருங்க.

பச்சை அஸ்தமனம் :

பச்சை அஸ்தமனம் :

சூரியன் அஸ்தமனம் ஆகும்போதும் அங்கே ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் இருப்பதுதான் இயல்ம்பு. ஆனால் இந்த புகைப்படத்தில் பாருங்கள். பச்சை நிறத்தில் அஸ்தமனன் தெரியும்.

அலை :

அலை :

ப்ரேசிலில் இந்த மிகப்பெரிய அலை. இது முடிவேயில்லாமல் மிகப்பெரிய அலையாய் உருவாகுமாம். வருடத்திற்கு இருமுறை இவ்வாறு உண்டாகும்.

 தங்க குதிரை வால் :

தங்க குதிரை வால் :

யு. எஸ்ஸிலுள்ள யோஸ்மைட் தேசிய பூங்காவில் பாறைக்கு நடுவில் குதிரை வால் போல் தங்க நிரத்தில் சில நிமிடங்களுக்கு மட்டும் வந்து போகிறது. இந்த அபூர்வ காட்சி வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடக்குமாம். நம்ம ஊராக இருந்தால் அந்த ஒளிக்கு ஒரு கடவுள் பெயரிட்டு வருடம் ஒரு முறை பூஜை செய்திருப்போம்.

மேக தொப்பி :

மேக தொப்பி :

இந்த படத்தைப் பார்த்தால் அந்த மலைக்கு தொப்பி போட்டது போல் மேகம் சூழ்ந்திருக்கும். பார்க்கவே மனதை கொள்ளையடிக்கிறது.

 ஐஸ் முடிக்கற்றைகள் :

ஐஸ் முடிக்கற்றைகள் :

அங்கிருக்கும் புற்கல் போல் ஐஸ் உறைந்து முடிக்கால்கள் போல் தோற்றமளிக்கின்றன. பார்க்க அழகாய் தெரிகிறது

நீர் சுழல் :

நீர் சுழல் :

ஆழ் கடலில் உண்டாகும் மிகப் பெரிய ஆழமான நீர்ச் சுழல் தான் இந்த படத்தில் இருக்கிறது. இதற்கு மேல்ஸ்ட்ரோம் அகா என்று இந்த சுழலுக்கு பெயருண்டு .

வானவில் யூக்கலிப்டஸ் மரங்கள் :

வானவில் யூக்கலிப்டஸ் மரங்கள் :

வானவில் போல் பல வண்ணங்களில் யூகலிப்டஸ் மரங்கள் ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது. அதனை பார்த்தால் பெயின்ட் அடித்தது போல் பல கலர்களில் மனதை வசப்படுத்துகிறது.

சிவப்பு நண்டுகளின் இடப்பெயர்ச்சி :

சிவப்பு நண்டுகளின் இடப்பெயர்ச்சி :

கிறிஸ்துமஸ் ஐலேண்டில் சிவப்பு நண்டுகள் ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு சிவப்பு நண்டுகள் இடம் பெயரும் கண் கொள்ளாக் காட்சி.

நீராவி டவர் :

நீராவி டவர் :

ஐஸ்லேண்டில் உருவாகும் மிகப்பெரிய ஸ்டீம் டவர் . நீராவியினாலேயே மிக உயரமாக டவர் போல் காட்சியளிக்கும் காட்சி.

கருப்புச் சூரியன் :

கருப்புச் சூரியன் :

டென்மார்க்கில் சிவப்பு நிறத்திற்கு பதிலாக சூரியன் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. ஏன் தெரியுமா? லட்சக்கணக்கான மைனாக்கள் வானத்தில் பறந்த போது சூரியனையே மறைத்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அழியாத புயல் :

அழியாத புயல் :

வென்சுலாவில் வந்த இந்த புயல் 160 நாட்களுக்கு இருந்திருக்கிறது. மிக அதிக நாட்கள் இருந்த புயல் இதுவாகத்தான் இருந்திருக்கும்.

பாலைவன பூக்கள் :

பாலைவன பூக்கள் :

பாலைவனமாக இருந்த பூமி, ஒரு வருட மழைக்குப் பின் இப்படி பூக்காடாக மாறிவிட்டதென்றால் பாருங்களேன்.

நீல நிற குழி :

நீல நிற குழி :

கடலுக்கு நடுவில் மிகப்பெரிய நீல நிற குழியாக மாறியிருக்கிறது இந்த இடம். டைவ் அடிப்பவர்களுக்கான தோதான இடம். இது பேலிஸ் என்ற நாட்டில் காணப்படுகிறது.

ஊர விட்டு ஊர் போகும் பட்டாம் பூச்சி :

ஊர விட்டு ஊர் போகும் பட்டாம் பூச்சி :

பல ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் யு. எஸிலிருந்து மெக்ஸிகோவிற்கு பறந்து போகிறது. வானமே பட்டாம் பூச்சி.

கடலுக்குள் அருவி :

கடலுக்குள் அருவி :

கடலுக்கு அடியில் ஒரு நீர் வீழ்ச்சியை பார்த்ததுண்டா? மொரீஷியஸில் அமைந்திருக்கிறது. கடல் மண் முழுவதும் கடலுள்லுள் உள்வாங்கியிருப்பதால் இப்படி நீர் வீழ்ச்சி போல் ஆகிவிட்டதாம்.

எரிமலை மின்னல் :

எரிமலை மின்னல் :

எரிமலை மின்னல் எப்படி உருவானது தெரியுமா? எரிமலை வெடித்தபோது உருவான மின்சாரத்தால் வானத்தில் மின்சாரம் பாய்ந்து மின்னல் போல் ஒளிர்ந்திருக்கிறது. பார்க்கவே பயங்கரமா இல்ல...

வெள்ளை வானவில்

வெள்ளை வானவில்

வானவில் என்றாலே 7 நிறங்கள்தானே. ஆனால் இந்த படத்தில் வெள்ளை நிறத்தில் தெரிகிறது. பனி மூட்டம்தான் இப்படி வானவில்லாக காட்சி தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Source

English summary

25 strange things happening around the world that you did not know

25 strange things happening around the world that you did not know
Subscribe Newsletter